Tuesday, February 26, 2008

எனக்கு மட்டும் ஏன்தான்???

இந்த மாசத்துல மொத்தமா 10 நாள்கூட வேலைக்கு போகல...காரணம் மாசம் தொடங்கியதுமே..முதல் 10 நாள் சொந்த விடுமுறை...விழா காலம் ஆரம்பிச்சாலே என் மாதிரி ஊரை விட்டு வந்து வெளியூரில் படிக்கற ... வேலை செய்யுற வர்க்கத்துக்கு கொண்டாட்டம்தான்...இதுக்காகவே annual leave-ஐ சேர்த்து வச்சிருந்தேன்...விடுமுறை என்னவோ ஜாலியாத்தான் இருந்தது... ஆனா விடுமுறை முடிந்து வந்ததும் வராதுமா ஜொகூரில் 10 நாள் பயிற்சி... பெயர் பட்டியலை பார்த்ததும் எரிச்சல் வந்துடுச்சு... நான் மட்டும்தான் தமிழ் ... மத்தவங்க எல்லாமே மலாய்க்காரர்கள்... :((( போய்த்தான் ஆகனும் வேறு வழியில்ல... அதுவும் சொந்த போக்குவரத்தை பயன்படுத்தனும்... நாளைக்கு பயிற்சின்னா... இன்றைக்குத்தான் கடிதமே கிடைச்சது... அவ்வளவு சுறுசுறுப்பு :)... நானும் என்னோட வேலை செய்யுற மலாய்க்கார பொண்ணும் மட்டுமே என்னோட கார்ல பயணமானோம்.. 360 கிலோ மீட்டர் .... தலைநகரிலிருந்து ஜொகூருக்கு... அவ்வளவு தூரம் பயணம் இதுவரைக்கும் சென்ஞ்சதில்ல... மலாக்காவை நெருங்கும்போதே பசியெடுத்துறுச்சு... 'ஆயேர் குரோ' R&Rல்ல சாப்பிடும் வரைக்கும் இனி அடுத்து எங்களுக்கு ஏழரை ஆரம்பமாயிடுச்சுன்னு தெரியல... சரி சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்புபோது என்னோட 'க்ளிக்' டிரைவ் பண்ணுறேன்னு சொன்னா.. சரின்னு நானும் அவ வர வரைக்கும் காருக்கு வெளியே காத்திருக்காம ...காருக்குள்ளே வெயிட் பண்ணலாமுன்னு காருக்குள்ள உட்கார்ந்து சென்டர் லாக் பண்ணதுதான்... கார் அலாரம் அலர ஆரம்பிச்சிடுச்சு... நான் காரை விட்டு வெளியே வந்து கதவ சாத்தி திறக்க முயலும்போது... கார் சொந்தமாவே லாக் ஆயிடுச்சு... கார் சாவி காருக்குள்ளேயே மாட்டிகிச்சு...இதுவே தனியா இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பேனோ தெரியல... கிட்டதட்ட அழாத குறைதான்..

அப்புறம் வேறு வழியில்லாம அங்கு வேலை செய்துகிட்டிருந்த ஒரு மலாய்காரரிடம் விசயத்தை சொல்லி அவர உதவிக்கு அழைச்சோம்.... அவருக்கு இது கை வந்த கலையோ என்னமோ.. ஆனா என்னோட காருக்கிட்ட மட்டும் பலிக்கல... என்னோட கார் புது வித மாடல் என்பதால் ரொம்ப கஷ்ட்டமாயிடுச்சு.. ஆனா அவர் கொஞ்சம்கூட தளராம முயற்சி செஞ்சு ...ஒரு மணி நேர போரட்டதுக்குப் பிறகு திறந்தார்.... அது வரைக்கும் நான் எல்லா சாமியையும் உதவிக்கு அழச்சிட்டேன்... அல்லாஹ்..ஜீசஸ்..முருகனுன்னு.. ஒருத்தரை விடல... :(

அதுக்கப்புறம் ஜொகூருக்கு கிளம்பினோம்... இந்த சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம்... குறிப்பா பெண்கள் தனியா நெடுந்தூரம் காரில் பயணம் செய்யுறது சரியான்னு என்ன தோணுது... நல்ல வேலை நாங்க பகல்ல பயணம் செஞ்சோம்... இதுவே இரவு நேரமா இருந்திருந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா... கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்...

ஆனா எனக்குத்தான் நிறைய செலவு... போக்குவரத்து செலவு போதாதுன்னு... கார் சர்வீஸ்...ரிப்பேர்ன்னு...பயங்கர தலைவலி...


3 comments:

ரசிகன் said...

ஒரே புலம்பலா இருந்தாலும் கடைசி பாயிண்ட்டு சரின்னுதான் படுது...
வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//ஒரே புலம்பலா இருந்தாலும் கடைசி பாயிண்ட்டு சரின்னுதான் படுது...//

ரிப்பீட்டேய்!

இனிமே பார்த்து முன்னேற்பாடுகளோடு பயணத்தை பாதுகாப்பாக எவ்வித சிரமங்களுமின்றி மேற்கொள்ளுங்கள்!

ரூபன் தேவேந்திரன் said...

உங்கள் எழுத்துருவை பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும். மற்றும்படி சுவாரசியமாக எழுதுகின்றீர்கள்.