Wednesday, July 30, 2008

கருவாச்சி காவியம்


கொல்லாமலே
கொல்வது எப்படி
உன்னில்தான்
கண்டுக் கொண்டேன்...
என் உயிர்
செதுக்கி வலி செய்யும்
உன்னை
விட்டு விட
மாட்டேன்!
காரணம்
நீ
என் சுகமான வலி!

கனவாகிப் போ


என் கனவுகள்
நீயென்றும்...
உன் நினைவுகள்
நானென்றும்...
வாழச் சொல்ல
வல்லாயோ!
சிந்தும் மழைத்துளி
நினைவாய்
உன் மௌனம்!
காய்ந்த மண்ணின்
தாகமாய்
என் யாகம்!
யாசிப்புகள்
அர்ச்சிக்கப்படும் வரை
எழுதாத கவியாய்
வாழ்ந்து போகட்டும்
இந்த உணர்வுகள்!

Thursday, July 24, 2008

தோல்வி + நான் = தற்கொலை


தோல்விகளில் தளராத மனது
இன்று தற்கொலைக்குத்
தயாராகிக் கொள்கிறது
ஆம்...சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
மரணம் ஆயிற்றே
இந்தத் திருமணம்!!!

தோல்விகள் எப்பொழுதுமே என்னைத் தீண்டாமலும், சீண்டாமலும் வாழக் கற்றுக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் கடவுளாய் வந்து ஆசிர்வதித்துச் செல்கிறது இந்தத் தோல்வி...தோல்வி? ம்ம்ம்...வெற்றியின் விசாலத்தை அர்த்தப்படுத்தும் அகராதி அது. வாழ்வின் பிழைகளைத் திருத்திக் கொள்ள இறையால் அனுப்பபட்ட வேதம். இந்த ஞாலத்தின் மறுமையில் வாழ்விக்கும் போதி மரங்கள்...

சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் மரண அவஸ்தையாய் வாட்டியெடுக்க தட்டுத் தடுமாறி கூட்டுக்குள் வந்து அடைந்துக் கொள்கின்றன என் கால்கள்! தலையணைகள் கண்ணீரில் நனைந்துப் போனாலும் தடுக்க வழியின்றி கைக்கட்டிப் பார்வையாளராய் காற்றில் படப்படக்கிறது நாள்காட்டி.

வெற்றிகள் வெளிச்சத்தில் நிச்சயிக்கப்பட்டால், சூன்ய நிலையில் இயற்பியலை இந்தத் தோல்விகள் இருட்டில் நிச்சயிக்கின்றன. நானும் சூன்ய நிலையின் நிசப்தத்தை யாசித்துக் கண்களை இறுக்கிக் கொள்கிறேன்.

சில காலமாய் என்னையும் கொஞ்சம் திரும்பிப் பார் என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் 'அக்னிச் சிறகு'களின் ஜுவாலைகள் என்னில் பற்றிக் கொள்ள, அவசரமாய் அதை கையில் எடுக்கிறேன். முடிக்காமல் விட்ட பக்கத்தையும் தாண்டி வேறொரு பக்கத்தில் நிலைக்கின்றன கண்கள்.

"சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்
ஃபீனிக்ஸ் பறவைகள் மறுபடியும் என் நெஞ்சில்..."

"கானல் நீராகிப் போன இந்தக் கனவுகளில்
இருந்து எப்படியோ மீண்டு வந்து...."

இந்த வரிகளை மட்டுமே என் கண்கள் பதிவு செய்துக் கொள்கிறது. நாளைய விடியலில் நானும் அந்தப் பறவையைப் போல் உயிர்த்தெழுவேன் என்ற அந்தராத்மாவின் முணுமுணுப்பு காதில் லேசாய் கேட்க, கண்களை மீண்டும் மூடிக் கொள்கிறேன்.!!!!

Thursday, July 17, 2008

எங்கிருந்து வந்தாயடி......


உனை முதன் முதலாய்
பார்த்த தருணங்களை
பத்திரமாய் என்னுள்
பதியமிட்டேன்
உனைக் காணாது
இன்று விருட்சமாய்
ஓங்கி நிற்கிறது
நம் நட்பு
நீ தந்த பூக்கள்
வாடினாலும்
நின் நினைவுகளை
வாடாமல் காத்து வந்தேன்
இன்று உன்
நினைவுகள் நீர்த்துப்போய்
அர்த்தமிழந்து கிடக்கிறது
யாரும் பாராமல் புதையலாய்
அமிழ்ந்து போன என்
கனவுகளை நீ வந்து
உயிர்ப்பிப்பாய் என்று எண்ணியிருந்தேன்
கனவுகள் இன்றும்
கனவாய்தான் உள்ளதடி
உனக்குத் தெரியாமல்
பதிந்த நின் நிழல்கள்
இன்றும் நிஜமாய்தான்
என்னில் வாழ்கிறது
உன்னிடம் நான்
கண்டது நட்பா
இல்லை தாய்மையா
இன்றும் எனக்கு
புரியலையே
நட்புக்கும் தாய்மை உண்டோ
நீதான் கொஞ்சம்
கேட்டுச் சொல்லேன்
நீயில்லாமல் இன்று நானுமில்லை
வாழ்க்கையை கற்று தந்து
நீ காற்றாய் மறைந்துப்
போனதுதான் நட்பின் இலக்கணமோ
மறுபடியும் நட்பைச் சொல்லி
வந்து நிற்கும் உன்னை
நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா
நீயே எழுதிப் போ
என் மரண சாசனத்தை
நான் உன் நட்பு சிறையின்
ஆயுள்கைதி மட்டும்......

Saturday, July 12, 2008

காதலில் விழுந்தேன் - காதலை மொழிப்பெயர்க்கிறேன்


உனைப் பார்க்கும் முன்பு
நான் காதலை அறியவில்லை
உனைப் பார்த்தப் பின்புதான்
காதலே நீயென்று உணர்ந்தேன்

இந்த நிமிடங்களை மட்டும்
வாழ்நாள் வரை கேட்கிறேன்

என் இனிய காதல் கனவுகளை
உனக்காகவே மொழிப்பெயர்கிறேன்

என் நெஞ்சில் பூத்த காதல் தீ
நீயல்லவா

உன் கைகள் எனைத் தழுவும்
தருணங்களை நான்
சொர்கத்தில் வாழ்ந்து பார்க்கிறேன்

Friday, July 11, 2008

தோளில் சாயும் போது தோழி நீயடி....எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனைப் பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மையடி
உனைப் பார்த்தப் பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி

தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆளின்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன்
கைவிரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி

என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்
வெறும் விதையென்று விட்டு விட்டுச் சென்றாய்
விருட்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய்

தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

என் பெயரைக் கேட்டாலே
உன் பெயரைச் சொல்லுகிறேன்
எப்போதும் என் நினைவு உன்னைச் சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் உறைந்தாய்
எந்தன் நிழல் இன்று
என்னை விட்டு விட்டுச் சென்று
உந்தன் பின்னே வந்து உனைத் தொடர்கிறதே

தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனைப் பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மையடி
உனைப் பார்த்தப் பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி

தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி

(இந்தப் பாடலை நேற்றுத்தான் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் அழகான வரிகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு இங்கு பதிவாய்... காப்பி இராகத்தில்...வயலின் இசை மென்மையாய் வருடிச் செல்கிறது..கூடவே பனிக்கூழாய் ஹரிஷ் இராகவேந்திராவின் குரல். அது எப்படி எனக்கே எனக்காக எழுதி வைத்த மாதிரி அருமையான வரிகள்... எப்படி யோசித்தாலும் விளங்கவில்லை.)

Wednesday, July 09, 2008

உன்னால்தான்.......


என் இதழ் வியர்க்கும் தருணங்கள்
உன்னால்தான் உண்டானது
என் இதயம் துடிக்கவும்
உன்னிடம்தான் கற்றுக் கொண்டது
என் மௌனங்களும் உன்னால்தான்
மறுமொழியாகின்றன
மொத்தமாய் உன்னால்தான்
நான் நானாகிறேன்
எல்லாமும் நீயென்றால்
உன் விரல் தீண்டி
நான் உயிர் பெறுவேனோ
இல்லை உன் நினைவாலே
உயிர் விடுவேனா?

Friday, July 04, 2008

அழகிய அதிசயங்கள்

அழகின் அதியத்தில் மூழ்கும்போது வார்த்தைகள் ஏது?
பட்டாம்பூச்சியாய் மனம் சிறகடிக்க...
ஓவிய மழையில் நனைவது அலாதி...
பூக்களின் காதல் என்னிடம்
என் காதலோ உன்னிடம்
ச்சீசீ காதல் இனிக்கிறது?
நீரில் மூழ்காதே உன்னை
விண்ணில் சுமக்கிறேன்
நான் சிறகில்லாத விண்மீன்
வானமெனக்கு ஆழ்கடல்
நீ நடந்து வந்த பாதையில்
பூந்தோட்டமாய் பூக்கிறேன்
உன் சுவடுகளை விட்டுச் செல்

விருட்சங்களும் ஆழ்கடலுமே
நான் நேசித்து வாழும் நூலகங்கள்
இயற்கையே நீ வாழும்
மெழுகுவர்த்தி...
உன்னை எரித்து நீ எங்களை
வாழ்விக்கிறாய்...!