Saturday, July 12, 2008

காதலில் விழுந்தேன் - காதலை மொழிப்பெயர்க்கிறேன்


உனைப் பார்க்கும் முன்பு
நான் காதலை அறியவில்லை
உனைப் பார்த்தப் பின்புதான்
காதலே நீயென்று உணர்ந்தேன்

இந்த நிமிடங்களை மட்டும்
வாழ்நாள் வரை கேட்கிறேன்

என் இனிய காதல் கனவுகளை
உனக்காகவே மொழிப்பெயர்கிறேன்

என் நெஞ்சில் பூத்த காதல் தீ
நீயல்லவா

உன் கைகள் எனைத் தழுவும்
தருணங்களை நான்
சொர்கத்தில் வாழ்ந்து பார்க்கிறேன்

6 comments:

கோபிநாத் said...

முதலும் கடைசியும் அழகு ;)

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்லக் கவிதை.... காதல் தேன் சிந்துகிறது... வாழ்த்துக்கள்...

Naveen Kumar said...

மிக அழகான கவிதை:)

ரசிகன் said...

/உன் கைகள் எனைத் தழுவும் தருணங்களை நான்சொர்கத்தில் வாழ்ந்து பார்க்கிறேன்//

படங்களும் கவிதையும் அருமை:)

ramesh sanijeeth sadasivam said...

என் நெஞ்சில் பூத்த காதல் நீயல்லவா... நல்ல வரிகள்...

நவீன் ப்ரகாஷ் said...

அழகு... :)))