Friday, March 14, 2008

பிரிவு

ஆரம்பம் என்று இருக்கையில்
முடிவு என்றும் இருக்கும்
ஆனால் நட்பில் மட்டும்
ஆரம்பமும் இல்லை
முடிவும் இல்லை
அன்று சந்தித்தோம்
இன்று பிரிகிறோம்
நம் நட்பு என்றும் பிரியாது
என்றும் நாம் இணைந்திருப்போம்!!!

காதல் வந்துச்சோ

உன் காதல் என்னுள் புகுந்துக்கொண்டது
உன்னை காணும் முன்பு...
உன்னை கண்ட பின்பு
என் இதயம் உன்னுள் ஒளிந்துக்கொண்டது...
திருப்பித் தா என்று நானும் கேட்கவில்லை
திரும்பிப் போ என்று நீயும் சொல்லவில்லை...
இந்த வானம் இந்த பூமி எல்லாம்
நம் காதலை வாழ்த்தட்டும்!!!


Thursday, March 13, 2008

வாராயோ தோழி மணப்பந்தல் காண (16.03.2008)

செம்புலப் பெயல் நீர்ப்போல்
அன்புடை நெஞ்சம் கலந்து
அமிழ்தினும் இனிய தமிழ்ப் போல் வாழ
வானம், நிலம், காற்று இடைவெளி அடைத்து
இதய வழி வாழ்த்துகிறேன்.................


பி.கு:16.03.2008 அன்று மணநாள் காணும் எனதுயிர் தோழி செலினாவிற்கு

மனம் நிறைந்த திருமண வாழ்த்துகள் :)))

யாதுமாகி நின்றாய் - பகுதி 9

யாதுமாகி நின்றாய் - பகுதி 9
காய்ச்சலின் வீரியம் குறைந்து வழக்கம் போல் அனு பள்ளிக்குப் போய் வந்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய மனதில் பினாங்கிற்கு பயிற்சிக்குச் சென்ற போது நடந்த சம்பவங்களே நிழலாடிக் கொண்டிருந்தன. அவளுடைய ஐந்து நாள் பயிற்சியின் கடைசி நாள் சீக்கிரமாகவே முடிந்துவிடவே, அனு தான் திட்டமிட்டிருந்தப் படி அவளுடைய பழைய வீட்டைப் பார்க்க கிளம்பிவிட்டாள். அவள் இந்தப் பயிற்சிக்கு ஒத்துக் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஐந்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது அவள் பினாங்கிற்கு வந்து. அவள் ஆறாம் படிவம் முடித்து பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தப் பிறகு ஒரு தடவைக்கூட இங்கு வந்தது கிடையாது. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் கடைசியில் ஒரு வழியாக வீட்டைக் கண்டுப் பிடித்து போய் விட்டாள். ஆனால், அவளுடைய பழைய வீட்டின் தோற்றம் முழுவதும் மாறியிருக்க ஏதோ தவறாக வந்து விட்டோமோ என்று தடுமாறி நின்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய தடுமாற்றம் ஒரிரு நிமிடஙகள்தான் இருக்கும் அதற்குள் வீட்டினுள் இருந்து யாரோ தன்னை கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து யார் என்று பார்க்க திரும்பினாள்.அதற்குள் ஐம்பது வயதுதக்க பெண்மணி அவளை நெருங்கி விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.“யார் நீங்க…யாரைப் பார்க்கணும்”“வந்து…நான் அனு கோலாலம்பூரிலிருந்து வரேன்… வந்து இந்த வீட்டில் முன்பு வளர்மதின்னு ஒரு அம்மா இருந்தாங்க…”“அவங்க இங்க இல்லையே…நாங்க இந்த வீட்டை வாங்கி அஞ்சு வருஷமிருக்கும்”“தெரியும்மா…வந்து நான் அவங்க பொண்ணு அனுராதா…பயிற்சி விஷயமா இங்கு வந்திருந்தேன்…அதான் அப்படியே பழைய வீட்டையும் பார்த்திட்டு போகலாமுன்னு” என்று இழுத்தாள் அனு.“ஓ! ஏதோ ‘யூ’ல்ல படிக்கிறதா சொன்னாங்களே அந்தப் பொண்ணா நீ” என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார் அந்த பெண்மணி.“ஆமாம்மா…படிச்சு முடிச்சுட்டு இப்போ ஆசிரியரா இருக்கேன்”“கொஞ்சம் பொறும்மா” என்று உள்ளே சென்று வந்தவர் வீட்டின், கேட்டை திறந்துவிட்டார்”“வெளிக் கதவை எப்போதுமே பூட்டியே வச்சிருப்போம்…என்னையும் என் பேரப்பிள்ளையைத் தவிர வீட்டிலுள்ள எல்லாருமே வேலைக்குப் போயிடுறாங்க…திருட்டுக்கு பயந்து கதவை எப்போதுமே திறக்கிறது கிடையாது”“அதுவும் ஒரு வகையில்ல நல்லதுதான்… வீட்டை மாற்றி கட்டியிருக்கீங்கப் போல..முதலில் இருந்த அடையாளமே தெரியல”“ஆமாம்மா …இந்த வீட்டை வாங்கியதும் இடித்துட்டு புதிதா கட்டிவிட்டோம்…சரி உங்கம்மா எப்படியிருக்காங்க”“ம்ம்.. அம்மா நல்லாயிருக்காங்க…வந்து…நாங்க வீட்டை வித்துட்டுப் போனதும் யாராவது தேடி வந்தாங்களா?”“ம்ம் அப்படியாரும் தேடி வரலேயே…ஆனா .....ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்றவர் நீண்ட நேரங்கழித்து சிறிய பெட்டியோடு வந்தார்”“இதெல்லாம் உங்களுக்கு வந்த கடிதங்கன்னு நினைக்கிறேன்…எப்போதாவது நீங்க வந்தா கொடுக்கலாமுன்னு எடுத்து வைத்திருந்தோம்” என்று அந்தப் பெட்டியை அனுவிடம் கொடுத்தார்.“ரொம்ப நன்றிம்மா” என்று பெட்டியை வாங்கிக் கொண்டவள் “அப்போ நான் கிளம்புறேம்மா…இல்லன்னா பஸ் கிடைக்காது” என்று அந்தப் பெண்மணியிடம் விடைப்பெற்றுக் கொண்டாள்.(தொடரும்)

யாதுமாகி நின்றாய் - பகுதி 8

யாதுமாகி நின்றாய் - பகுதி 8


“சார் மேடம் உங்களை பார்க்கணும்மா” வேலை முடிஞ்சதும் வர சொன்னாங்க” ஆடிட்டர் கூறியதை நம்ப மாட்டாதவனாய்

“யாரு அம்மாவா... அம்மா என்ன பார்க்கனுமுன்னு சொன்னாங்களா? நீங்க சொல்றது நிஜமா குமார்?’’“நிஜம்தான் சார், வேலை முடிஞ்சதும்”ஆடிட்டர் சொல்லி முடிப்பதற்குள்“நான் இப்பவே”“சார்…சார் அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க, மாலை வேலை முடிஞ்சதும் வர சொல்லியிருக்காங்க” என்று ஆடிட்டர் குமார் பதட்டத்துடன் கூறினான்.அருணாவைப் பற்றிய சிந்தனையிலிருந்து நழுவி தன் தாயைப் பற்றி நினைக்க தொடங்கினான் கௌதமன்.அம்மா மட்டும் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்தால், அருணாவை இவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றியிருக்கலாமே. ஐயோ இப்பொழுது நிலைமை தன் கையை மீறிவிட்டதே. அம்மாவைத் தவிர இதற்கு வேறு தீர்வு கிடையாது என்று நிச்சயமாக நம்பினான் கௌதமன். இப்பொழுதும் கூட தான் அருணா மீது வைத்திருந்த காதலை விட்டுக் கொடுக்க அவன் தயாரில்லை. எப்படியாவது அருணாவின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.மாலையில் தன் அம்மாவை நாடிச் சென்றவன், தாயைக் கண்டதும் அவர் மடியில் விழுந்து கதறிவிட்டான். ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அவர் முகத்தை காண முடியாமல் கூனிக்குறுகிப் போய் பேசாமல் அமர்ந்திருந்தான். மகனின் நிலையை புரிந்துக் கொண்டவராய் அருணாவைப் பற்றி விசாரித்தார். இதற்கு மேலும் மறைக்க எதுவுமில்லையென்று தோன்றியதால் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்தான். அவர் அவனை மேலும் ஏதும் கேட்டு வருத்தாமல் அருணாவை தன்னிடம் கொண்டுவந்து விடுமாறு கூறினார். அந்நேரம் அவனுடைய கைப்கேசி சிணுங்க, எடுத்துப் பேசியவனுக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டிருந்தது.(தொடரும்)