Showing posts with label வகைப்படுத்தவில்லை. Show all posts
Showing posts with label வகைப்படுத்தவில்லை. Show all posts

Monday, October 18, 2010

பாசம் ஒன்றும் பாவமில்லை

நிபந்தனைகளிலும் வற்புறுதல்களிலும்
வாழ்வதாய் எண்ணி காதலுக்கு
மலர் வளையம் செலுத்துகிறாய்
நான் பிறந்த நாளில்...


உன் உதாசிணங்களில்
முட்டி மோதி கலைவது
என் காதல் அல்ல
உன் செல்ல பிடிவாதங்கள் :-(


என்னை அழகாய் காட்டும்
உன் வீட்டுக் கண்ணாடி
ஏன் உன்னை அறிவாய் காட்டுவதில்லை?
அது காட்டும் நாளில்தான்
உன் உயிரையும் அறிவாய்
உன் உயிரும் என் காதலென்று


அணு அணுவாய் சாவதற்கு
முடிவெடுத்தப் பிறகு
காதல் பிழையான சரிதான்...