Monday, December 06, 2010
மெதுவா மெதுவா - பிரிவோம் சந்திப்போம்
கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி...
Thursday, November 25, 2010
ம்ம்ம்
மௌனங்கூட விரதம் கலைக்கிறது
நீ வந்து பேசும் தருணத்தில்...
************
நீ ‘தா’வெணும் போதெல்லாம்
யோசிக்காமலே தந்துவிடுகிறேன்
ஆனால் நீயோ வெட்கங்களை
மட்டுமே பதிலாய் தந்துச் செல்கிறாய்...
நீ அடப்பாவியா இல்லை
நான் அப்பாவியா?!
ஐவிரல்களில் சிறு நடுக்கம்
இதயத்திலோ புது மயக்கம்
உன்னை உரையாடியில்
காணும் பொழுதுகளில்...
யாரிடமும் எனக்கு கெஞ்சப் பிடிக்காது
நீ உள்பட என்று கோபமாய்
முகம் திருப்பிய பொழுதினில்
அடியே லூசு..உனைக் கொஞ்சத்தானே
சொன்னேன் என்று பதிலுக்கு
நீயும் முறைத்துக் கொள்கிறாய்...
**************************
நான் கவிதையெழுதியிருக்கிறேன்
உனக்கு மொழிபெயர்த்து காட்டவா
என்றேன் ஆவலாய்...ஏதும் பேசாது தவிக்க விட்டுச்
சென்றாய் அந்நாள் முழுவதுமாய்
மறுநாள் அதிகாலையெழுப்பி
ஏதோ உளறினாய்...
ஏதும் புரியாது முழிக்கும் போதே
இது ‘தமிழ்’ உன் அத்தையிடம்
கெஞ்சிக் கற்றேன் என்கிறாய் அப்பாவியாய்..
ச்சே.. போடா மொழிகள் தேவையில்லை
நம் காதலுக்கு...
தமிழில் எதுவுமே பேசத்தெரியாது
என்று பொய் சொல்லாதே
என்கிறேன் கிண்டலாய்..
ஆமாம் உன்னை ‘டீ’ போடத் தெரியும்
என்கிறாய் வெட்கத்தோடு
ம்ம்ம் ஆண்கள் வெட்கப்படும்
தருணம் இதுதானா? ;-)
*********************
நீ வந்துச் சென்றதின் அடையாளமாய்
உன் நினைவுகள்
என் உரையாடல் பெட்டகத்தில்
நொடிக்கொருதரம் என் கண்கள்
தீண்டிச் செல்கிறது..
அடுத்த நினைவுகளை
சேகரிக்கும் வரை...
Friday, November 19, 2010
திருமண பாடல்கள் (150வது சிறப்பு பதிவு)
முன்குறிப்பு :
Right-click on the link and choose "Save Link As" in order to download the song.
16. புக்காம் பொறந்த - நளதமயந்தி
17. இதுதானா இதுதானா மலர் சூடும் - சாமி
18. யாரோ யாரோடி - அலைபாயுதே
21. வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் - காலமெல்லாம் காதல் வாழ்க
22. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது
23. நினைச்சப்படி நினைச்சப்படி
27. நூறு வருஷம் - பணக்காரன்
28. கல்யாண மாலை - புதுப்புது அர்த்தங்கள்
29. மனைவி அமைவதெல்லாம் - மன்மத லீலை
30. ஆனந்தம் ஆனந்தம் பாடும் - பூவே உனக்காக
32. மேரேஜ் என்றால் - வசீகரா
36. அதிசய திருமணம் - பார்த்தாலே பரவசம்
37. மாலை சூடும் வேளை
45.பாசமலரே அன்பில் விளைந்த
Monday, November 15, 2010
கனவு குழந்தை
வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனும்
காரணங்களின் நீளத்தை
அசாத்தியமாக்கிச் செல்கிறது
அடைமழை..
ஒரு வேளை
இன்றேனும் நீயும் நானும்
கவிதையெழுதி கப்பல் விடலாம்
நம்மிருவரும் தேடிச் சேர்த்த
நம் கனவு குழந்தையின் பெயர்களை...
காரணங்களின் நீளத்தை
அசாத்தியமாக்கிச் செல்கிறது
அடைமழை..
ஒரு வேளை
இன்றேனும் நீயும் நானும்
கவிதையெழுதி கப்பல் விடலாம்
நம்மிருவரும் தேடிச் சேர்த்த
நம் கனவு குழந்தையின் பெயர்களை...
Monday, October 18, 2010
பாசம் ஒன்றும் பாவமில்லை
நிபந்தனைகளிலும் வற்புறுதல்களிலும்
வாழ்வதாய் எண்ணி காதலுக்கு மலர் வளையம் செலுத்துகிறாய்
நான் பிறந்த நாளில்...
உன் உதாசிணங்களில்
முட்டி மோதி கலைவது
என் காதல் அல்ல
உன் செல்ல பிடிவாதங்கள் :-(
என்னை அழகாய் காட்டும்
உன் வீட்டுக் கண்ணாடி
ஏன் உன்னை அறிவாய் காட்டுவதில்லை?
அது காட்டும் நாளில்தான்
உன் உயிரையும் அறிவாய்
உன் உயிரும் என் காதலென்று
அணு அணுவாய் சாவதற்கு
முடிவெடுத்தப் பிறகு
காதல் பிழையான சரிதான்...
Tuesday, April 20, 2010
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்!!!
[ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு ரோஜாப்பூக்கள் வழங்கி வருவது இயல்பான ஒன்றெனிலும் பெண்களும் ஆண்களுக்கு மஞ்சள் நிற ரோஜா வழங்கும் நாள் வழக்கில் உண்டு என்பதை அறிவீர்களா??]
இவ்வினிய நாளில் நம் அன்புக்குரியவர்களுக்கு புத்தகங்களை அன்பளித்து மகிழ்வோம்........
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ஆம் நாள், உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) 1995 ஆம் ஆண்டு முதற்கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இப்புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் முதன் முதலில் ஸ்பேய்ன் நாட்டில் கெத்தொலோனியாவில் கொண்டாடப்பட்டது. தொடக்க காலத்தில் இத்தினம் ரோஜாக்களின் விழாவாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
1923ஆம் ஆண்டு கெத்தொலோனியாவின் புத்தக விற்பனையாளர்கள் மறைந்த இலக்கியவாதிகள் மிகுவல் டி கெர்வண்டேஸ் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவுநாளாக 'el dia del llibre' கொண்டாடினர். அன்றுத் தொடங்கி இன்றுவரை உலக இலக்கியத்துக்கான குறியீடாக இப்புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் திகழ்ந்து வருகிறது.
மலேசிய பதிப்புரிமை சட்டம் ஓர் அறிமுகம்
அறிவார்ந்த சொத்துடமைகள் :
i) காப்புரிமை, பதிப்புரிமை
ii)துடிமச் சொத்துடைமை - வடிவமைப்புரிமை, துடிம வடிவமைப்பு, நிலவியல் குறியீடு, ஒருங்கிணைந்த வடிவமைப்பு படலை, இரகசிய தகவல்கள்
அறிவார்த்த சொத்துடமை சட்டங்கள் (மலேசியா மட்டும்):
- காப்புரிமை சட்டம் (1987)
- வணிக முத்திரைச் சட்டம் (1976)
- வடிவமைப்புரிமை சட்டம் (1983)
- துடிம வடிவமைப்புச் சட்டம் (1996)
- நிலவியல் குறியீட்டுச் சட்டம்
- Tort சட்டம் (Passing-Off, இரகசியத் தகவல் அத்துமீறல்)
- புதுவகை தாவர பாதுகாப்புச் சட்டம் (2003)
காப்புரிமை சட்டம்
காப்புரிமை என்பது இசை, ஒலிப்பதிவு, இலக்கியப்படைப்பு, திரைப்படம் போன்ற ஆக்கங்களுக்கு வழங்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட தனியுரிமையாகும். இவ்வாக்கங்களில் உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலவரம்பு வரை தங்களின் படைப்புகளுக்கு உரிமை கோரும் சட்டமாகும். தங்களின் படைப்புகள் அல்லது ஆக்கம் அசல் என்று கருதும் யார் வேண்டுமானாலும் இச்சட்டத்தை பயன்படுத்த முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களுடைய படைப்புகளில் காப்புரிமை சின்னம் மற்றும் படைப்பின் ஆண்டை குறிப்பிட வேண்டும். இதன்வழி தங்களின் படைப்புகள் தவறாக கையாளப்படுவதை தவிர்க்கவும் சட்டப்படி உரிமையாளராகவும் ஆகலாம். இச்சட்டத்தின் கீழ் தங்களின் படைப்புகளை பதிய எந்த அரச அலுவலகமும் செயல்படவில்லை..செயல்பட அவசியமில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். இலக்கியப்படைப்பாளிகள் தங்களுடைய படைப்புகளை பாதுகாக்க காப்புரிமை சின்னம் & வருடம் இணைத்த பிரதியை தங்களின் முகவரிட்டு அஞ்சல் செய்யவும். அஞ்சல் செய்யப்பட்ட பிரதி தங்கள் முகவரியில் கிடைக்கப்பெற்றவுடன் பிரிக்காமல் பாதுக்காக்கவும். சட்டநடவடிக்கையெடுக்க இந்த அஞ்சலிட்ட நாள் அவசியமாகும். மலேசிய காப்புரிமை சட்டவிதிகளின்படி காப்புரிமை பெற்ற படைப்புகளின் உரிமையாளர்கள் இறந்தப்பின் அவரின் வாரிசுகள் 50 வருடங்கள் அப்படைப்புகளின் உரிமை கோரலாம். உதாரணத்திற்கு மலேசிய கலைஞர் பி.ரம்லி 1973இல் இறந்துவிட்டாலும் அவரின் திரைப்படம், பாடல், இசை, புகைப்படம், மற்றும் புத்தகம் ஆகியவற்றின் உரிமைகளை அவருடைய வாரிசுகள் 2023 வரை காப்புரிமை சட்டத்தின் கீழ் கோரமுடியும்.
Digital Right Management (இலக்கியல் உரிமை முகாமைத்துவம்)
இதுப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விரும்புவர்கள் இங்கே க்ளீக் செய்யவும். இலக்கியல் உரிமை முகாமைத்துவம்
Sunday, April 11, 2010
வருகை..தொலைவு..மீட்பு
என்றோ தொலைத்த உன் நினைவுகள்
இன்று என்னில் கரைச்சேர்கின்றன
மீட்டேடுதலில் தொலைந்தது
வருடம் மட்டுமல்ல இவளும்தான் !!!
இன்று என்னில் கரைச்சேர்கின்றன
மீட்டேடுதலில் தொலைந்தது
வருடம் மட்டுமல்ல இவளும்தான் !!!
Friday, April 02, 2010
Tuesday, March 16, 2010
திருமணநாள் வாழ்த்துகள்!!!
அவள் பெயர் _____
அன்பு... அடாவடி... ஆர்பாட்டம்...அனைத்துக்கும் மொத்த குத்தகையாளர்.
கொஞ்சம் திமீர்...நிறைய குறும்பு...!
பல நேரம் தோழியாய் சில நேரம் எதிரியாய்...!
நட்பு என்றவுடன் நினைவுக்கு வந்து தொலையும் முதல் மழைத்துளி...!
கூடிய விரைவில் ஒரு குட்டித்தேவதைக்கு அம்மா...!!!!!(Counting daz)
இன்று அவளுக்குத் திருமணநாள்...!!
இன்று மட்டுமல்ல இனிவரும் ஒவ்வொரு நாளும் அழகாய்...நலமாய் புலர வாழ்த்துகள் சகி :-)
Happy Anniversary Machan... !!!
Monday, March 15, 2010
தீராமலே...
நேற்றைய பிரியங்களின் மிச்சம்
உன் உதடுகளில் கசிந்து வழிகிறது
இன்று மட்டிலுமான நம் பிரிவு
பேசித் தீராமலே தொலைகிறது!!!
Subscribe to:
Posts (Atom)