Showing posts with label வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வாழ்த்துகள். Show all posts

Friday, March 11, 2022

அக்னி பிரவேசம் & பிறந்தநாள் வாழ்த்துகள்

உனக்கும் எனக்குமான
நெருக்கங்களால் இதயம்
ததும்புகின்ற வேளையில்...
முன்னொரு நாள்
மேகங்களில் உரசி
சிறகொடிந்தப் போது
கட்டுப் போட்ட வேடனின்
ஸ்பரிசம் அடைமழையாய்
சிலிர்த்தெழுகிறது...
மழையில் நனைந்துக் கொண்டே
தீக்குள் விரலை விடும்
இலையுதிராக் காலத்தில்
அவனைச் சேர்வதாய்ச் சொல்லிச்
சென்ற வார்த்தைகள்...
இன்று மழையில்
நனையாதுதீக்குளித்தாலும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்துக் கொல்கிறது!!!
பின் குறிப்பு : ஸ்ரீ உனக்கு புரியுமில்லையா???

[இன்று பிறந்தநாள் காணும் அன்புத் தோழி

சுபாவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...]

இந்தப் பாசம்... இந்த நேசம்... இந்த நட்பு... வாழ்வின் எல்லை வரை வேண்டும்!!!



Friday, November 19, 2010

திருமண பாடல்கள் (150வது சிறப்பு பதிவு)

முன்குறிப்பு :

Right-click on the link and choose "Save Link As" in order to download the song.


1. கல்யாண சேலை உனதாகும் நாளை - அம்பிகை நேரில் வந்தால்













14.
பொட்டு வைத்துப் பூ முடிக்கும் நிலா – நினைத்தேன் வந்தாய்


16. புக்காம் பொறந்த - நளதமயந்தி

17. இதுதானா இதுதானா மலர் சூடும் - சாமி

18. யாரோ யாரோடி - அலைபாயுதே



21. வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் - காலமெல்லாம் காதல் வாழ்க

22. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது

23. நினைச்சப்படி நினைச்சப்படி



27. நூறு வருஷம் - பணக்காரன்

28. கல்யாண மாலை - புதுப்புது அர்த்தங்கள்

29. மனைவி அமைவதெல்லாம் - மன்மத லீலை

30. ஆனந்தம் ஆனந்தம் பாடும் - பூவே உனக்காக


32. மேரேஜ் என்றால் - வசீகரா




36. அதிசய திருமணம் - பார்த்தாலே பரவசம்

37. மாலை சூடும் வேளை











45.பாசமலரே அன்பில் விளைந்த

Tuesday, March 16, 2010

திருமணநாள் வாழ்த்துகள்!!!

அவள் பெயர் _____

 
அன்பு... அடாவடி... ஆர்பாட்டம்...அனைத்துக்கும் மொத்த குத்தகையாளர்.
கொஞ்சம் திமீர்...நிறைய குறும்பு...!
பல நேரம் தோழியாய் சில நேரம் எதிரியாய்...!
நட்பு என்றவுடன் நினைவுக்கு வந்து தொலையும் முதல் மழைத்துளி...!
கூடிய விரைவில் ஒரு குட்டித்தேவதைக்கு அம்மா...!!!!!(Counting daz)
இன்று அவளுக்குத் திருமணநாள்...!!
இன்று மட்டுமல்ல இனிவரும் ஒவ்வொரு நாளும் அழகாய்...நலமாய் புலர வாழ்த்துகள் சகி :-)
Happy Anniversary Machan... !!!

Monday, December 28, 2009

ப்ரியமுடன்.......

இன்று வரையிலும் வாழ்த்துகளின் அர்ச்சனையில் குளிர்விக்கும் அனைத்து பதிவுலக அன்பர்களுக்கு மனம் கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!!

Saturday, March 28, 2009

இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!!

நமது முதல் பரிச்சயம்கூட விசித்திரமான அனுபவம்தான் இல்லையா? அந்த விசித்திரம்தான் உன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி எனக்கு காட்டிக் கொடுத்தது...!! ம்ம்ம்!!! நமக்கான நாட்களில் எவ்வளவு வருடங்களை தவறியிருக்கேன் என்பதை உணருவதே எனக்குள் ஓர் அவமான குன்றல்தான்..!!! வெரி சாரிடா... நீ நெருங்கி வந்த போதெல்லாம் உன்னையும் உன் அன்பையும் புரிந்துக் கொள்ளத் தவறியிருப்பதே இன்றைய பிரிவுக்கான காரணமாய் இருக்குமோ? அதனால் என்ன தூரம் நம்மை பிரித்தாலும் நீ என்றைக்குமே எனக்கு இனிய தோழன்தான்!! இந்த உணர்வுகளைச் வெளிப்படுத்த நிச்சயமாய் எனக்கு கவிதை தேவையில்லை :-) Thanks da....for being there for me whenever I need you to be there..!!! அன்பான தம்பிக்கு பிரியமான அக்காவின் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!! Miss u Bro!!!

Monday, October 27, 2008

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்


அனைத்து உலக வாழ் நண்பர்களுக்கும் இவ்வினிய நாளில் மனம் நிறைந்த தீப ஒளி வாழ்த்துகளை இதய வழி தெரிவிக்கின்றேன்!!!!

Monday, October 06, 2008

இதய வழி வாழ்த்துகிறேன்


பறக்க முடியா
பாட்டாம்பூச்சியாய் அலைமோதும்
நேசங்களைக் காற்றலையில்
உனக்காய்த் தூதனுப்பினேன்...

கவிதைச் சுமக்கும் மௌனங்கூட

மொழியில்லா சின்னச் சின்ன
மழைத்துளி அர்ச்சனைகள்தான்...

விடிகின்ற உன் எல்லாப்

பொழுதும் சுகங்களை
மட்டும் ஆசிவதிக்கட்டும்...

இன்று துடிகிற இதயமும் கூட

உன்னை மட்டுமே
வாழ்த்திப் பாடட்டும்...

காற்றின் இடைவெளியை

அதிகரித்து வான
எல்லையையும் தாண்டி
இதய வழி வாழ்த்துகிறேன்...

இனிய பிறந்த தின வாழ்த்துகள்!!!!

(இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மாவுக்கும் இராஜேஸ் அக்காவுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்)

Friday, May 09, 2008

Make a Difference


மே 16ஆம் தேதி தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்த பதிவை வெளியிடுகிறேன். "மாணவர்கள் தூண்டிவிடும் தீபம் போன்றவர்கள்" என்றார் மாமேதை லெனின். ஆனால் ஆசிரியர்களோ மெழுகைப் போன்றவர்கள், தன்னையே உருக்கி உலகுக்குக்கே வெளிச்சம் தருகிறார்கள். ஆக தன்னலமற்ற அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்....

இங்கே சொடுக்கவும் http://www.teachermovie.com/
P.S: This is really worth watching .Please turn up your speakers too. By the way, you might want to grab a box of tissues....!!!

Thursday, March 13, 2008

வாராயோ தோழி மணப்பந்தல் காண (16.03.2008)

செம்புலப் பெயல் நீர்ப்போல்
அன்புடை நெஞ்சம் கலந்து
அமிழ்தினும் இனிய தமிழ்ப் போல் வாழ
வானம், நிலம், காற்று இடைவெளி அடைத்து
இதய வழி வாழ்த்துகிறேன்.................


பி.கு:16.03.2008 அன்று மணநாள் காணும் எனதுயிர் தோழி செலினாவிற்கு

மனம் நிறைந்த திருமண வாழ்த்துகள் :)))