Friday, March 11, 2022

அக்னி பிரவேசம் & பிறந்தநாள் வாழ்த்துகள்

உனக்கும் எனக்குமான
நெருக்கங்களால் இதயம்
ததும்புகின்ற வேளையில்...
முன்னொரு நாள்
மேகங்களில் உரசி
சிறகொடிந்தப் போது
கட்டுப் போட்ட வேடனின்
ஸ்பரிசம் அடைமழையாய்
சிலிர்த்தெழுகிறது...
மழையில் நனைந்துக் கொண்டே
தீக்குள் விரலை விடும்
இலையுதிராக் காலத்தில்
அவனைச் சேர்வதாய்ச் சொல்லிச்
சென்ற வார்த்தைகள்...
இன்று மழையில்
நனையாதுதீக்குளித்தாலும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்துக் கொல்கிறது!!!
பின் குறிப்பு : ஸ்ரீ உனக்கு புரியுமில்லையா???

[இன்று பிறந்தநாள் காணும் அன்புத் தோழி

சுபாவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...]

இந்தப் பாசம்... இந்த நேசம்... இந்த நட்பு... வாழ்வின் எல்லை வரை வேண்டும்!!!



Monday, February 06, 2017

பிம்பம்

முன்னொரு நாளின் பிரதியைத்
தேடி நொடிகளை கடத்தும்
பொழுதினில்  சத்தமில்லாமல்
வந்து போகிறது
உனது சாயல்களின் பிம்பங்கள்...

06.02.2017

Monday, January 30, 2017

மறக்கப்பட்டிருக்கலாம்...

உன் கண்ணீர் 
என் கை உதிராமல் சேமிக்கப்பட்டிருந்தால்,
நெஞ்சைக் கொல்லும் துரோகத்திலிருந்து
மன்னிக்கப்பட்டிருக்கலாம்...
ஒரு வேளை மறக்கப்பட்டிருக்கலாம்...

09.01.2017

நிகழப்போவதில்லை

இனி ஒரு போதும் நிகழப்போவதில்லை 
வார்த்தைகள் கொண்ட உரையாடல்...
நீ அருந்தும் தேநீரில் ஒட்டிக்
கொள்ளும் உதட்டோடு முடிந்துவிடும் 
இனி ஒரு புன்னகையோ 
இல்லை உதட்டுச்சுளிப்போ!!!


08.01.2017

Wednesday, July 22, 2015

என்றேனும் வாசிக்கப்படலாம்...

இது உனக்கான வாழ்த்தென்று!!!

உன்னோடு சேர்ந்து
நடந்த கடற்கரை மணலில்
சில லட்சம் மட்டும்
சேமித்து வைத்துள்ளேன்
உன் நினைவுகளின்
இம்சையில் சிலிர்த்தெழும்
சில கவிதைகளுக்காய்...

22.07.2012

Monday, July 20, 2015

அபத்தங்கள்

பிரிவை உணரா பிரியமொன்று
கனவுகளின் அபத்தங்களைச்
சொல்லிக் கொண்டிருக்கிறது!!!

....................................................

எனக்கான உன் கோபங்கள்
மௌனங்களாய் சிறகு விரிக்கையில்
உனக்கான கவிதையொன்றை
ப்ரியங்களால் கிறுக்கி வைக்கிறேன்!!
உன் மௌனத்தை 
மொழிப்பெயர்க்கும் இரகசியம் 
அந்த கவிதைகளுக்கும் தெரியும்!!

அ-கவிதை

நேரமாகிவிட்டது
வீடு செல்லுங்கள்
என்று சொல்கிற
அலுவலகங்கள் உள்ளவரை
வாழ்க்கை
சுவாரஸ்யமானதுதான்!!! அ-கவிதை

பழையன கழிதலும்...புதியன புகுதலும்


இது ஓசைகளின் நெடுஞ்சாலை…பிம்பங்களின் நெடுஞ்சாலை…படிமங்களின் நெடுஞ்சாலை…இங்கே புத்தரைத் தேடும் அந்தரங்கமான…மௌனமான தேடல்…சொற்கள் அமர்ந்து நீங்கிய இடத்தில் எஞ்சும் மெல்லிய தடங்களால் அந்தரங்கமான வலிகளால் தனக்குத்தானேகூட சொல்லிக் கொள்ள தயங்கும் உவகைகளால்…!

ஜெயமோகன் – ‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்’முன்னுரையிலிருந்து..

இது ‘நான்’ என்ற சுயத்தின் திசையறுக்கும் தேடல்…இது இவளின் முதல் வரியல்ல… முகவரி!!

PC: Google

Monday, December 06, 2010

மெதுவா மெதுவா - பிரிவோம் சந்திப்போம்

கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன் முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன் நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி...

Thursday, November 25, 2010

ம்ம்ம்

மௌனங்கூட விரதம் கலைக்கிறது நீ வந்து பேசும் தருணத்தில்...

************
நீ ‘தா’வெணும் போதெல்லாம் யோசிக்காமலே தந்துவிடுகிறேன் ஆனால் நீயோ வெட்கங்களை மட்டுமே பதிலாய் தந்துச் செல்கிறாய்... நீ அடப்பாவியா இல்லை நான் அப்பாவியா?! ஐவிரல்களில் சிறு நடுக்கம் இதயத்திலோ புது மயக்கம் உன்னை உரையாடியில் காணும் பொழுதுகளில்...

யாரிடமும் எனக்கு கெஞ்சப் பிடிக்காது
நீ உள்பட என்று கோபமாய்
முகம் திருப்பிய பொழுதினில் அடியே லூசு..உனைக் கொஞ்சத்தானே சொன்னேன் என்று பதிலுக்கு நீயும் முறைத்துக் கொள்கிறாய்...

**************************
நான் கவிதையெழுதியிருக்கிறேன் உனக்கு மொழிபெயர்த்து காட்டவா என்றேன் ஆவலாய்...ஏதும் பேசாது தவிக்க விட்டுச் சென்றாய் அந்நாள் முழுவதுமாய் மறுநாள் அதிகாலையெழுப்பி ஏதோ உளறினாய்... ஏதும் புரியாது முழிக்கும் போதே இது ‘தமிழ்’ உன் அத்தையிடம் கெஞ்சிக் கற்றேன் என்கிறாய் அப்பாவியாய்.. ச்சே.. போடா மொழிகள் தேவையில்லை நம் காதலுக்கு...

தமிழில் எதுவுமே பேசத்தெரியாது
என்று பொய் சொல்லாதே என்கிறேன் கிண்டலாய்.. ஆமாம் உன்னை ‘டீ’ போடத் தெரியும் என்கிறாய் வெட்கத்தோடு ம்ம்ம் ஆண்கள் வெட்கப்படும் தருணம் இதுதானா? ;-)

*********************
நீ வந்துச் சென்றதின் அடையாளமாய் உன் நினைவுகள்
என் உரையாடல் பெட்டகத்தில் நொடிக்கொருதரம் என் கண்கள் தீண்டிச் செல்கிறது.. அடுத்த நினைவுகளை சேகரிக்கும் வரை...

Friday, November 19, 2010

திருமண பாடல்கள் (150வது சிறப்பு பதிவு)

முன்குறிப்பு :

Right-click on the link and choose "Save Link As" in order to download the song.


1. கல்யாண சேலை உனதாகும் நாளை - அம்பிகை நேரில் வந்தால்













14.
பொட்டு வைத்துப் பூ முடிக்கும் நிலா – நினைத்தேன் வந்தாய்


16. புக்காம் பொறந்த - நளதமயந்தி

17. இதுதானா இதுதானா மலர் சூடும் - சாமி

18. யாரோ யாரோடி - அலைபாயுதே



21. வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் - காலமெல்லாம் காதல் வாழ்க

22. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது

23. நினைச்சப்படி நினைச்சப்படி



27. நூறு வருஷம் - பணக்காரன்

28. கல்யாண மாலை - புதுப்புது அர்த்தங்கள்

29. மனைவி அமைவதெல்லாம் - மன்மத லீலை

30. ஆனந்தம் ஆனந்தம் பாடும் - பூவே உனக்காக


32. மேரேஜ் என்றால் - வசீகரா




36. அதிசய திருமணம் - பார்த்தாலே பரவசம்

37. மாலை சூடும் வேளை











45.பாசமலரே அன்பில் விளைந்த

Monday, November 15, 2010

கனவு குழந்தை

வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனும்
காரணங்களின் நீளத்தை
அசாத்தியமாக்கிச் செல்கிறது
அடைமழை..
ஒரு வேளை
இன்றேனும் நீயும் நானும்
கவிதையெழுதி கப்பல் விடலாம்
நம்மிருவரும் தேடிச் சேர்த்த
நம் கனவு குழந்தையின் பெயர்களை...

Monday, October 18, 2010

பாசம் ஒன்றும் பாவமில்லை

நிபந்தனைகளிலும் வற்புறுதல்களிலும்
வாழ்வதாய் எண்ணி காதலுக்கு
மலர் வளையம் செலுத்துகிறாய்
நான் பிறந்த நாளில்...


உன் உதாசிணங்களில்
முட்டி மோதி கலைவது
என் காதல் அல்ல
உன் செல்ல பிடிவாதங்கள் :-(


என்னை அழகாய் காட்டும்
உன் வீட்டுக் கண்ணாடி
ஏன் உன்னை அறிவாய் காட்டுவதில்லை?
அது காட்டும் நாளில்தான்
உன் உயிரையும் அறிவாய்
உன் உயிரும் என் காதலென்று


அணு அணுவாய் சாவதற்கு
முடிவெடுத்தப் பிறகு
காதல் பிழையான சரிதான்...

Tuesday, April 20, 2010

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்!!!




வரலாறு

[ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு ரோஜாப்பூக்கள் வழங்கி வருவது இயல்பான ஒன்றெனிலும் பெண்களும் ஆண்களுக்கு மஞ்சள் நிற ரோஜா வழங்கும் நாள் வழக்கில் உண்டு என்பதை அறிவீர்களா??]


இவ்வினிய நாளில் நம் அன்புக்குரியவர்களுக்கு புத்தகங்களை அன்பளித்து மகிழ்வோம்........

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ஆம் நாள், உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) 1995 ஆம் ஆண்டு முதற்கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இப்புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் முதன் முதலில் ஸ்பேய்ன் நாட்டில் கெத்தொலோனியாவில் கொண்டாடப்பட்டது. தொடக்க காலத்தில் இத்தினம் ரோஜாக்களின் விழாவாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

1923ஆம் ஆண்டு கெத்தொலோனியாவின் புத்தக விற்பனையாளர்கள் மறைந்த இலக்கியவாதிகள் மிகுவல் டி கெர்வண்டேஸ் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவுநாளாக 'el dia del llibre' கொண்டாடினர். அன்றுத் தொடங்கி இன்றுவரை உலக இலக்கியத்துக்கான குறியீடாக இப்புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் திகழ்ந்து வருகிறது.

மலேசிய பதிப்புரிமை சட்டம் ஓர் அறிமுகம்
அறிவார்ந்த சொத்துடமைகள் :
i) காப்புரிமை, பதிப்புரிமை
ii)துடிமச் சொத்துடைமை - வடிவமைப்புரிமை, துடிம வடிவமைப்பு, நிலவியல் குறியீடு, ஒருங்கிணைந்த வடிவமைப்பு படலை, இரகசிய தகவல்கள்

அறிவார்த்த சொத்துடமை சட்டங்கள் (மலேசியா மட்டும்): 
- காப்புரிமை சட்டம் (1987)
- வணிக முத்திரைச் சட்டம் (1976)
- வடிவமைப்புரிமை சட்டம் (1983)
- துடிம வடிவமைப்புச் சட்டம் (1996)
- நிலவியல் குறியீட்டுச் சட்டம்
- Tort சட்டம் (Passing-Off, இரகசியத் தகவல் அத்துமீறல்)
- புதுவகை தாவர பாதுகாப்புச் சட்டம் (2003)


காப்புரிமை சட்டம்
காப்புரிமை என்பது இசை, ஒலிப்பதிவு, இலக்கியப்படைப்பு, திரைப்படம் போன்ற ஆக்கங்களுக்கு வழங்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட தனியுரிமையாகும். இவ்வாக்கங்களில் உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலவரம்பு வரை தங்களின் படைப்புகளுக்கு உரிமை கோரும் சட்டமாகும். தங்களின் படைப்புகள் அல்லது ஆக்கம் அசல் என்று கருதும் யார் வேண்டுமானாலும் இச்சட்டத்தை பயன்படுத்த முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களுடைய படைப்புகளில் காப்புரிமை சின்னம் மற்றும்    படைப்பின் ஆண்டை குறிப்பிட வேண்டும். இதன்வழி தங்களின் படைப்புகள் தவறாக கையாளப்படுவதை தவிர்க்கவும் சட்டப்படி உரிமையாளராகவும் ஆகலாம். இச்சட்டத்தின் கீழ் தங்களின் படைப்புகளை பதிய எந்த அரச அலுவலகமும் செயல்படவில்லை..செயல்பட அவசியமில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். இலக்கியப்படைப்பாளிகள் தங்களுடைய படைப்புகளை பாதுகாக்க காப்புரிமை சின்னம் & வருடம் இணைத்த பிரதியை தங்களின் முகவரிட்டு அஞ்சல் செய்யவும். அஞ்சல் செய்யப்பட்ட பிரதி தங்கள் முகவரியில் கிடைக்கப்பெற்றவுடன் பிரிக்காமல் பாதுக்காக்கவும். சட்டநடவடிக்கையெடுக்க இந்த அஞ்சலிட்ட நாள் அவசியமாகும். மலேசிய காப்புரிமை சட்டவிதிகளின்படி காப்புரிமை பெற்ற படைப்புகளின் உரிமையாளர்கள் இறந்தப்பின் அவரின் வாரிசுகள் 50 வருடங்கள் அப்படைப்புகளின் உரிமை கோரலாம். உதாரணத்திற்கு மலேசிய கலைஞர்  பி.ரம்லி 1973இல் இறந்துவிட்டாலும் அவரின் திரைப்படம், பாடல், இசை, புகைப்படம், மற்றும் புத்தகம் ஆகியவற்றின் உரிமைகளை அவருடைய வாரிசுகள் 2023 வரை காப்புரிமை சட்டத்தின் கீழ் கோரமுடியும்.

Digital Right Management (இலக்கியல் உரிமை முகாமைத்துவம்)

இதுப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விரும்புவர்கள் இங்கே க்ளீக் செய்யவும். இலக்கியல் உரிமை முகாமைத்துவம் 

Sunday, April 11, 2010

வருகை..தொலைவு..மீட்பு

என்றோ தொலைத்த உன் நினைவுகள்
இன்று என்னில் கரைச்சேர்கின்றன
மீட்டேடுதலில் தொலைந்தது
வருடம் மட்டுமல்ல இவளும்தான் !!!

Friday, April 02, 2010

............

உனக்கான என்
மௌனங்களில்
இப்பக்கம் முழுதும் வெறுமை

Tuesday, March 16, 2010

திருமணநாள் வாழ்த்துகள்!!!

அவள் பெயர் _____

 
அன்பு... அடாவடி... ஆர்பாட்டம்...அனைத்துக்கும் மொத்த குத்தகையாளர்.
கொஞ்சம் திமீர்...நிறைய குறும்பு...!
பல நேரம் தோழியாய் சில நேரம் எதிரியாய்...!
நட்பு என்றவுடன் நினைவுக்கு வந்து தொலையும் முதல் மழைத்துளி...!
கூடிய விரைவில் ஒரு குட்டித்தேவதைக்கு அம்மா...!!!!!(Counting daz)
இன்று அவளுக்குத் திருமணநாள்...!!
இன்று மட்டுமல்ல இனிவரும் ஒவ்வொரு நாளும் அழகாய்...நலமாய் புலர வாழ்த்துகள் சகி :-)
Happy Anniversary Machan... !!!

Monday, March 15, 2010

தீராமலே...

நேற்றைய பிரியங்களின் மிச்சம்
 உன் உதடுகளில் கசிந்து வழிகிறது
 இன்று மட்டிலுமான நம் பிரிவு
 பேசித் தீராமலே தொலைகிறது!!!

Monday, January 18, 2010

பேசாமலே இருந்து விடேன்

 தீயாய் தகிக்கும் வார்த்தைகள் சாமரமாகும்போது 

உதடுகள் கெஞ்சும் உடன்படிக்கை இது!!

Monday, December 28, 2009

ப்ரியமுடன்.......

இன்று வரையிலும் வாழ்த்துகளின் அர்ச்சனையில் குளிர்விக்கும் அனைத்து பதிவுலக அன்பர்களுக்கு மனம் கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!!