Saturday, February 07, 2009

சொல்ல மறந்தவை...

காலம் நமக்குப் பணவியலை அறிவுறுத்தி வாழ்வியலை வசப்படுத்தினாலும் நிமிர்ந்து நின்று திணவுடன் சிரிக்கிறது தாய்மொழி. செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் நமக்கு பழக்கப்பட்டுப் பரிச்சயமானத் தமிழ்ச் சொற்கள் இன்றைய கால ஓட்டத்தில் களவுப் போய் விட்டதோ என்ற கலக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தருணத்தில் கவிதாவின் பார்வை நினைவெல்லாம் பக்கம் திரும்பி இருப்பது தாய் வீட்டு ஊஞ்சலில் சுகித்திருப்பதைப் போன்றப் பிரம்மையை ஏற்படுத்திச் செல்கிறது. ஊரோடு ஒன்றி வாழ்வதாய் எண்ணிக் கொண்டு தாய்மொழியை இழந்து வாழ்வியல் கட்டாயத்தை வசப்படுத்தி அதன் முன் கைக்கட்டிச் சேவகதனத்தில் ஆழ்ந்து கிடக்கும் போதெல்லாம்...
அடையாளம் காட்டப் பெற்றோர்களுக்குப் போதாமல் போனது ஞானம்...

தேம்பி அழுது தெய்வங்களைச் சாட்சிக்கு அழைத்தால் சபித்து விடும்போல் தெரிகிறது சமகாலத்து உறவுகள்........

(நன்றி : அக்கினி சுகுமார்)


வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் :-

சுழியம் - பூஜ்யம் (வடச்சொல்)
அகில்மணத்தி - அகர்பத்தி (வடச்சொல்)
கூற்றம் - எமன்
சலம் - தண்ணீர்
புரவி - குதிரை
சவுக்காரம் - Soap
புட்டாமாவு - Talcum Powder
திருநீறு - விபூதி

இந்தப் பதிவைத் தொடர அழைப்பது :-
என் உலகம் சுபாஷினி
அரங்கேற்றம் வேலன்
சென்ஷி - பதிவு போட மறுத்தாலோ மறந்தாலோ தண்டனை உண்டு.

10 comments:

Vijay said...

\\காலம் நமக்குப் பணவியலை அறிவுறுத்தி வாழ்வியலை வசப்படுத்தினாலும் நிமிர்ந்து நின்று திணவுடன் சிரிக்கிறது தாய்மொழி. \\
ஒரு வாவ் சொல்லுவதைத் தவிர வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

\\அகில்மணத்தி - அகர்பத்தி \\
அட நெசமாவே புது வார்த்தை தான். இனிமேல் இதை உபயோகபடுத்திட வேண்டியது தான் :-)

\\கூற்றம் - எமன்\\
கூற்றுவன் என்று தானே கேள்விப் பட்டிருக்கேன்.

\\சலம் - தண்ணீர்\\
சலம், ஜலம் என்ற வடமொழிச்சொல்லிருந்து தான் வந்திருக்குமோ?

\\சவுக்காரம் - சோப்\\
அப்படியா?? Interesting!!!

Muthusamy Palaniappan said...

நல்ல முயற்சி.., வாழ்க!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சுழியம்,தண்ணீர்,சவுக்காரம்,புட்டாமாவு,திருநீறு
போன்ற வார்த்தைகளையெல்லாம் நாங்கள் அன்றாடம் பயன்படுத்துகிறோம். பகிர்வுக்கு நன்றி இனியவள் புனிதா!

ஜலம் என்ற வடமொழிச் சொல் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

Anonymous said...

//சலம், ஜலம் என்ற வடமொழிச்சொல்லிருந்து தான் வந்திருக்குமோ?//

தமிழ்ச்சொல் வடச்சொல்லாகிவிட்டது அவ்வளவுதான்...

அப்பர்கூட சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் என்று பாடியுள்ளாரே

இந்த கணம் - ஷணம் ஆனதுப்போல்

இப்படியே நிறைய தமிழ்ச்சொற்கள்

Anonymous said...

//சுழியம்,தண்ணீர்,சவுக்காரம்,புட்டாமாவு,திருநீறு
போன்ற வார்த்தைகளையெல்லாம் நாங்கள் அன்றாடம் பயன்படுத்துகிறோம். பகிர்வுக்கு நன்றி இனியவள் புனிதா!//

மலேசியர்களின் பயன்பாட்டில் இன்றும் உள்ளது என்பதை மறக்கவில்லை..ஆனாலும் இன்றைய நிலையில் பயன்படுத்த வெட்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை!!!

தமிழ் said...

/செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் நமக்கு பழக்கப்பட்டுப் பரிச்சயமானத் தமிழ்ச் சொற்கள் இன்றைய கால ஓட்டத்தில் களவுப் போய் விட்டதோ என்ற கலக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தருணத்தில்/

சரியாகச் சொன்னீர்கள்

வாழ்த்துகள்

/தமிழ்ச்சொல் வடச்சொல்லாகிவிட்டது அவ்வளவுதான்...

அப்பர்கூட சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் என்று பாடியுள்ளாரே

இந்த கணம் - ஷணம் ஆனதுப்போல்

இப்படியே நிறைய தமிழ்ச்சொற்கள்/

உண்மைதான்
நிறைய பேருக்குத் தெரிவதில்லை

சென்ஷி said...

எங்கள் பகுதியில் சவுக்காரம் என்ற சொல் முற்றிலுமாய் வழக்கொழிந்து விட்ட ஒரு சொல்லாகிவிட்டது. இன்னமும் திருநீறு உபயோகத்தில் உள்ளது. மற்ற சொற்கள் எனக்கும் மிகப்புதிதான ஒன்று. :(

தொடர் பதிவு எழுதும் எண்ணம் தற்சமயம் இல்லை. எனினும் முயற்சிக்கின்றேன்.

சென்ஷி said...

பதிவின் முதல் பத்தி அசத்தல்... :-))

சென்ஷி said...

புரவி, சுழியம், கூற்றம் (கூற்றுவன்?!), இவைகளை புத்தகத்தில் மாத்திரமே படித்தது உண்டு.

நான் said...

நன்றி புனிதா தொடரவும்