
உனக்கான வார்த்தைகளைக்
கோர்க்க நெஞ்சம்
தேடியலைந்து நொந்த
நொடியில்தான்
உறைத்தது
வார்த்தைகளுக்கு
கட்டுப்பட்டவளா நீ?
வார்த்தைகளைக்கும்
அப்பால்
காவியமாய்
வாழ்கிறாய் நீ!
சமுத்திரத்தை
கையடக்கும் நாளில்தான்
உன்னை
வார்க்கவும்...
உருக்கவும்...
கோர்க்கவும்...
முடியும்?
அது வரை
முற்றுப்பெறாத
வாக்கியமாய் என்னுள்
வாழ்ந்துவிட்டுப் போ...!
கோர்க்க நெஞ்சம்
தேடியலைந்து நொந்த
நொடியில்தான்
உறைத்தது
வார்த்தைகளுக்கு
கட்டுப்பட்டவளா நீ?
வார்த்தைகளைக்கும்
அப்பால்
காவியமாய்
வாழ்கிறாய் நீ!
சமுத்திரத்தை
கையடக்கும் நாளில்தான்
உன்னை
வார்க்கவும்...
உருக்கவும்...
கோர்க்கவும்...
முடியும்?
அது வரை
முற்றுப்பெறாத
வாக்கியமாய் என்னுள்
வாழ்ந்துவிட்டுப் போ...!
13 comments:
மறப்பேன் என சொல்லி தோற்கப்பட்டு,
அந்த வார்த்தைகளை வாழ்விப்பதில் உவகைபடும் எனக்கே கூட புரிகிறது... கவிதை அழகு...
///Natty said...
மறப்பேன் என சொல்லி தோற்கப்பட்டு,
அந்த வார்த்தைகளை வாழ்விப்பதில் உவகைபடும் எனக்கே கூட புரிகிறது... கவிதை அழகு...
///
ஆஹா.. கவுஜ... கவுஜ.. :))
//வார்த்தைகளுக்கு
கட்டுப்பட்டவளா நீ?//
//அது வரை
முற்றுப்பெறாத
வாக்கியமாய் என்னுள்
வாழ்ந்துவிட்டுப் போ...!//
:))
நல்லாருக்குதுங்க....
புனிதா,
நல்லா இருக்கு. மேலும் எழுதுங்கள்.
அனுஜன்யா
சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... மேலும் பல எழுதுங்கள்...
பாரட்டுக்கள்
மேலும் எழுதுங்கள்
நினைவுகள் தொடரட்டும்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
கவிதைக் காதலி புனிதா அவர்களே, ஓலைச்சுவடியில் உங்கள் கவிதையை பரிசளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
http://olaichuvadi.blogspot.com/2008/08/blog-post_05.html
@ Natty - அட உங்க பின்னூட்டமே கவிதையாய் இருக்குதே...நன்றிங்க உங்க வருகைக்கும் கருத்துக்கும்.
@ சென்ஷி - நன்றிங்க வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டமா?
@ அனுஜன்யா - வாங்க அனுஜன்யா ... நன்றிங்க இனிமேல்தான்....
@ VIKNESHWARAN - வாழ்த்துகளுக்கு நன்றி விக்னேஷ்
@ கோவை விஜய் - உங்களுடைய பாராட்டுக்கு நன்றிங்க விஜய்
@ சதீசு குமார் - தாராளமாய் :-)
வருத்தத்துடன் கொஞ்சம் சாபமும் கொடுத்ததுபோல் இருக்கிறது, வாழ்ந்துவிட்டு போ என்கிறபோது!!!
http://thaneer-dhesam.blogspot.com/
//Maddy said...
வருத்தத்துடன் கொஞ்சம் சாபமும் கொடுத்ததுபோல் இருக்கிறது, வாழ்ந்துவிட்டு போ என்கிறபோது!!!//
ஐயோ அப்படியெல்லாம் இல்லை... அதீத பாசத்தின் வெளிப்பாடு அது!
அக்கா சூப்பர்..!! :-))
//Sri said...
அக்கா சூப்பர்..!! :-))//
Thanks Sri ;-)
Post a Comment