Sunday, August 03, 2008

சொல்லிவிடு தோழி...


தவறுகள் செய்யாமலே
தண்டிக்கப்படுதல்
மரணத்தைக் காட்டிலும்
கொடுமையென்று...
நீ அறிவாயோ?
நான் அறிவேன்!
தப்பித்தல்களுக்கான
காரணமில்லாமல்
நீண்டுக் கொண்டேயிருக்கும்
உன் மௌனம்
என்ன
மரண தண்டனையா?
சொல்லிவிடு தோழி...
மரணத்தைக்கூட
மகிழ்வாய் தாங்கிக்
கொள்வேன் ஆனால்
உன் மௌனத்தையல்ல...

9 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ரொம்ப அழகான வரிகள்... வாழ்த்துக்கள்...

MSK / Saravana said...

என் மனசில் இருப்பதை அப்படியே எழுதுயிருக்கிறீர்கள்..

anujanya said...

புனிதா,

நல்ல கவிதை. பொருத்தமான புகைப்படம். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

Anonymous said...

//VIKNESHWARAN said...
ரொம்ப அழகான வரிகள்... வாழ்த்துக்கள்...//

வாழ்த்துகளுக்கு நன்றி விக்னேஷ்!

Anonymous said...

//சென்ஷி said...
:))//

:-)))

Anonymous said...

//அனுஜன்யா said...
புனிதா,

நல்ல கவிதை. பொருத்தமான புகைப்படம். வாழ்த்துக்கள். //

நன்றிங்க...இருக்காதா? என்னுடைய பழைய மடல்களையெல்லாம் பிரித்து மேய்ந்துட்டோம்ல :-)

Anonymous said...

//M.Saravana Kumar said...
என் மனசில் இருப்பதை அப்படியே எழுதுயிருக்கிறீர்கள்..//

நிஜமாகவா? கருத்துக்கு நன்றிங்க!

Maddy said...

""மரணத்தைக்கூட
மகிழ்வாய் தாங்கிக்
கொள்வேன் ஆனால்
உன் மௌனத்தையல்ல...""

எத்தனை உண்மையான வார்த்தைகள்!!
அனுபவபட்டதினால் அதன் வலி புரிகிறது

Anonymous said...

//""மரணத்தைக்கூட
மகிழ்வாய் தாங்கிக்
கொள்வேன் ஆனால்
உன் மௌனத்தையல்ல...""

எத்தனை உண்மையான வார்த்தைகள்!!
அனுபவபட்டதினால் அதன் வலி புரிகிறது//

முதல் வருகைக்கு நன்றி maddy..அனுபவங்கள்தான் பல தருணங்களில் வார்த்தைகளாய் உயிர் பெறுகின்றன்.