எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்தச் சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூப்பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்
கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்ட பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே....
என்னானதோ! ஏதானதோ!
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்துப் போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்தச் சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கப்படும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து
8 comments:
இது உங்களுக்கு மட்டும் பிடிக்கும் என்றால் நாங்கள் எல்லோரும் குருடனாகவோ செவிடனாகவோ இருக்கிறோம் என்று அர்த்தம்!
அட...அட....என்ன இனிமையான வரிகளும்...இசையும் பாடலும் கூட!
இதில் ரஜினி சார் மாப்பிள்ளையின் நடிப்பு சூப்பர்.நயந்தாரா மழையில் நனைந்த மல்லிகைப்பூ மாதிரி இருக்காங்கன்னு சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. எனக்கு சம்மந்தமில்லாத பெண்களை புகழ்வது எனக்கு பிடிக்காது! ம்ம்ம்ம்ம்...பாட்டு நல்லாயிருக்கு!
இனிமையான வாpகளுடன் அருமையான பாடல்
//இது உங்களுக்கு மட்டும் பிடிக்கும் என்றால் நாங்கள் எல்லோரும் குருடனாகவோ செவிடனாகவோ இருக்கிறோம் என்று அர்த்தம்! //
ரிப்பீட்டேய்...
எங்கேயோ பார்த்த மயக்கம் வரிகளும் அருமை. :-)
பாட்டு நல்ல பாட்டுதான்.. இசை நல்ல இசை தான்.. நாயகி நல்ல நாயகிதான்.. நடிகரும் எதோ ஓகே தான்ன்.. ஆனா பாட்டை வேற யாராவது பாடி இருக்கலாமோ...? :)
//கயல்விழி முத்துலெட்சுமி said...
பாட்டு நல்ல பாட்டுதான்.. இசை நல்ல இசை தான்.. நாயகி நல்ல நாயகிதான்.. நடிகரும் எதோ ஓகே தான்ன்.. ஆனா பாட்டை வேற யாராவது பாடி இருக்கலாமோ...? :)//
Same Feeling :(
//nithya-dreams said...
இனிமையான வாpகளுடன் அருமையான பாடல்//
வாங்க நித்யா... உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//இது உங்களுக்கு மட்டும் பிடிக்கும் என்றால் நாங்கள் எல்லோரும் குருடனாகவோ செவிடனாகவோ இருக்கிறோம் என்று அர்த்தம்! //
ரிப்பீட்டேய்...//
மன்னிச்சிடுங்க... ஓர் உணர்ச்சி வேகத்தில் எழுதியது.
//எங்கேயோ பார்த்த மயக்கம் வரிகளும் அருமை. :-)//
உண்மைதான்...ஆனா கயல்விழி முத்துலெச்சுமி அக்கா சொன்னதுப்போல உதித்நாரயணுக்குப் பதிலாக வேறு யாராவது பாடியிருக்கலாம். கவிழ்த்துவிட்டார் யுவன்..அவருக்கு ஏனிந்த கொலவெறியோ:(
//பிரேம்குமார் said...
இது உங்களுக்கு மட்டும் பிடிக்கும் என்றால் நாங்கள் எல்லோரும் குருடனாகவோ செவிடனாகவோ இருக்கிறோம் என்று அர்த்தம்!
அட...அட....என்ன இனிமையான வரிகளும்...இசையும் பாடலும் கூட!
இதில் ரஜினி சார் மாப்பிள்ளையின் நடிப்பு சூப்பர்.நயந்தாரா மழையில் நனைந்த மல்லிகைப்பூ மாதிரி இருக்காங்கன்னு சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. எனக்கு சம்மந்தமில்லாத பெண்களை புகழ்வது எனக்கு பிடிக்காது! ம்ம்ம்ம்ம்...பாட்டு நல்லாயிருக்கு!//
நிச்சயமாய் பிரேம்குமார் ;)
Post a Comment