Friday, June 06, 2008

அப்பாவுக்காக


என் செல்லமான எதிரியே
உங்கள் பேத்திதான்
எனக்கு மட்டும் சொந்தமான
உங்கள் அன்பையெல்லாம்
அவள் திருடிக் கொண்டாளே
கடவுள் பூமிக்கு வருவதில்லை
ஏன் தெரியுமா?
அவருக்குப் பதில்தான்
உங்களை அனுப்பியுள்ளாரே
நான் வங்கிக்குச்
சென்றதில்லை
என் நடமாடும்
உலக வங்கியே
நீங்கள்தானே :-)
உங்களுக்குப் பிடித்த
அந்த நீல சட்டையை
காணாது அம்மாவை
திட்டினீர்களே
பாவம் அவருக்கே தெரியாதே
அது என் பயணப் பெட்டியில்
ஒளிந்துக் கொண்டது ;-)

அம்மாவுடன் இணைந்து
செல்லும் பொழுதெல்லாம்
நான் அவர் மகளென்று
பெருமைப்படுவார்
நான் உங்களுடன் இணைந்து
செல்லும் பொழுதெல்லாம்
நீங்கள் என் தந்தையென்று
பெருமைப்படுகிறேன்
வேலைக் கிடைத்த போது
இல்லாத மகிழ்ச்சி
முதல் மாத ஊதியத்தை
உங்கள் சட்டைப் பையில்
திணித்தபோது தானாய்
வந்து ஒட்டிக் கொண்டது

உங்களை காயப்படுத்துமென்று
என்னுள் மலர்ந்த முதல்
காதல் மொட்டை
உங்களுக்கே தெரியாமல்
கிள்ளியெறிந்தாலும்
இன்றும் நெஞ்சில்
நெருஞ்சியாய் குத்துகிறதே!

கடவுளிடம் அன்றாடம்
கேட்கிறேன்
ஏன் நான் உங்கள்
மகளாய் பிறக்கவில்லை!
அப்படி பிறந்திருந்தால்
உங்கள் அருமை
உணராமல் போயிருப்பேனோ?
போன ஜென்ம பாவமா
உங்கள் மகளாய் பிறக்காதது
இந்த ஜென்ம புண்ணியமா
உங்கள் மகளாய் வளர்வது
என்னை பெற்றவரை
நான் 'அப்பா'
என்று அழைத்ததில்லை
அது உங்களுக்காக
பதிவு செய்யப்பட்ட
காப்புரிமை அப்பா!

எனக்கு உயிர் தந்தவரின்
உயிர் பிரிந்தபோது
ஏனோ அழத் தோன்றவில்லை
என் கண்ணீர் உங்களையல்லவா
காயப்படுத்திவிடும்!

7 comments:

கோபிநாத் said...

அட்டகாசம்..படங்களும்..வரிகளும்.;;)

நன்றாக உணர்ந்து எழுதிய வரிகள்

வாழ்த்துக்கள் ;)

நிஜமா நல்லவன் said...

உங்கள் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். அருமை. மிகவும் அருமை.

myspb said...

எனக்கு கதை கட்டுரைகள் படிக்க முடிவதில்லை ஏன் பொருமையில்லை என்று கூட நினத்துக்கொள்ளலாம். கவிதைகள் என்றால் குதி போட்டு படிப்பேன். உங்கள் அப்பாவின் கவிதை என் மனதை தைத்தது என்பது நிச்சயம்.

பிரியமுடன்... said...

அம்மா மேல் அதிக பாசம்!
அப்பா மீது அதிக அக்கறை!
இதுவரை என் வாழ்வில் இப்படித்தான்!
இதை படித்தேன்,
இந்த நொடிமுதல்
என் தந்தை மீது
எல்லையில்லா பாசம்
எனக்கு வந்துவிட்டது!
இருங்க...இருங்க
அப்பாவை அழைத்து பேசிவிட்டு
அப்புறம் வந்து அடுத்ததை எழுதுகிறேன்!
அப்பா....பிரேம் பேசுகிறேன்!
அப்பா...அப்பா...
ஒருவரின் உருகும் பதிவு
உங்களை நினைக்க வைத்துவிட்டது!
எங்களுக்காகவென்று ஒரு இதய தெய்வம் இவ்வுலகில் வாழ்வதை இந்த ஈரமான நினைவுகள் நினைவுபடுத்தியிருக்கிறது!
அப்பா...உங்களுக்கு அன்பு மகனின் ஆசை முத்தங்கள்!
என் தந்தையை நினைக்க
ஏதுவாக இருந்த உந்தன் வரிகளுக்கு
"இருக்கி அனைச்சு ஒரு உம்ம்ம்மா"

Divya said...

வார்த்தைகள் வரவில்லை.......உங்கள் கவிதை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்த.

உணர்வுபூர்வமான அருமையான கவிதை.

மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்,
என் அப்பாவின் நினைவில் நிறைந்தேன்.

Anonymous said...

பூங்கொத்தாய் பின்னுட்டம் தந்த
@கோபிநாத்
@நிஜமா நல்லவன்
@Covai Ravee
@பிரேம்குமார் மற்றும்
@divyaகும்

இந்த இனியவளின் மனம் நிறைந்த நன்றிகள் :)

MSK / Saravana said...

// Divya said...
வார்த்தைகள் வரவில்லை.......உங்கள் கவிதை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்த.

உணர்வுபூர்வமான அருமையான கவிதை.

மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்,
என் அப்பாவின் நினைவில் நிறைந்தேன்.
//


வாழ்த்துக்கள்..