
நகர மறுத்த நாட்களையெல்லாம்
மூட்டை கட்டி தூர வீசினேன்
இன்று வந்த நாளை மட்டும்
என்னுள் மறைத்து ஒளித்து வைக்கிறேன்
கூடி கழிந்து நின்ற நாட்கள்
உன் வரவை எனக்கு உறுதி செய்தன
அர்த்தமற்ற உலகம்கூட
உன் வரவால் இன்று அர்த்தமாகுது
மரித்து கிடந்த வாழ்வும் இன்று
உயிர்த்தெழுந்து வாழ சொல்லுதே
துடிக்க மறுத்த இதயம்கூட
இரண்டாய் துடிக்க இன்று கேட்கிறேன்
சீக்கிரம் வா எந்தன் உயிரே
என் பெண்மை உன்னால் முழுமை பெறட்டும்....
7 comments:
:-)
:">
\\இதயம்கூடஇரண்டாய் துடிக்க இன்று கேட்கிறேன்சீக்கிரம் வா எந்தன் உயிரே என் பெண்மை உன்னால் முழுமை பெறட்டும்....\
ஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள் அருமை:)))
//Divya said...
ஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள் அருமை:)))//
சும்மாதான்... கொஞ்சம் ஓவராயிடுத்தோ :">
//மரித்து கிடந்த வாழ்வும் இன்று உயிர்த்தெழுந்து வாழ சொல்லுதேதுடிக்க மறுத்த இதயம்கூடஇரண்டாய் துடிக்க //
அருமையா இருக்குங்க:)
ரசித்தேன் ;)
உயிர் பெற வாழ்த்துக்கள்!!
Post a Comment