உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Friday, May 29, 2009
மீண்டும் வாய்க்குமா?
தோளில் சாய்ந்துச் சண்டைப் போடவும்
கைகள் கோர்த்துச் சாலை நடக்கவும்
தலைமுடி கலைத்து வாரி விடவும்
நீ அருந்திய தேநீர் திருடிப் பருகவும்
நெற்றி...கன்னம்...மீசை உறுத்தவும்
புஜத்தில் சரிந்து உறங்கிக் கொள்ளவும்
மீண்டும் வாய்க்குமா
உன் மூச்சுக் காற்று உரசிய
அதே ஞாயிறு??
12 comments:
Firstae :)))
//மீண்டும் வாய்க்குமா//
//அதே ஞாயிறு??//
அதே ஞாயிறு டவுட்டு தான்.. அடுத்த ஞாயிறு ஓ.கே.னா இன்னும் 2 நாள்ல வரும் :P
ரசனையா எழுதி இருக்கீங்க.. அப்புறம் எங்க மொக்கை னு போட்டு இருக்கீங்க..
நல்லா இருக்கு
//பிளாகர் G3 கூறியது...
//மீண்டும் வாய்க்குமா//
//அதே ஞாயிறு??//
அதே ஞாயிறு டவுட்டு தான்.. அடுத்த ஞாயிறு ஓ.கே.னா இன்னும் 2 நாள்ல வரும் :P//
:-))
அதே ஞாயிறு டவுட்டு தான்.. அடுத்த ஞாயிறு ஓ.கே.னா இன்னும் 2 நாள்ல வரும் :P
:)))
நல்லா இருக்கு புனி
நினைந்து நினைந்து, ஏக்கத்தில் நனைந்து, ந்ன்றாகவே இருக்கின்றன உங்கள்
கவிதை வரிகள்!
:)) ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் வாய்க்கும் வாய்க்கும்.. ;)
good
try something different .
//நீ அருந்திய தேநீர் திருடிப் பருகவும்//
அழகு...
// நாணல் கூறியது...
:)) ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் வாய்க்கும் வாய்க்கும்.. ;)
///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்:))
Unarvugalal pinni pinayappatta kavithai arumai :)
கடந்த கால நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது உங்கள் கவிதை வரிகள்... எனக்கும் அதே ஞாயிறு திரும்ப வருமா என்ற ஏக்கம்தான்... :(
Post a Comment