Thursday, May 21, 2009
முதல் முறை உன்னைப் பார்த்த...
முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே
கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன்னருகே நான் இருந்தால சிலிர்கிறதே
நீ விளையாட்டுப் பிள்ளை – உனக்கு நான்
தலையாட்டும் பொம்மை
எனைத் தாயைப் போலத் தாங்க வேண்டும் மடியினிலே
முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே
நீ அருகில் தோன்றும் நேரமே
வானிலையும் மாறிப் போகுதே
நீயும் நினைத்தால்
வானவில் வந்து விடுமே
உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால்
வாழ்விலே என்றும் சுகமே
உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும்
வரமது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே
முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே
நீ நடந்துப் போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குதே
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே
தோளிரண்டில் என்னைத் தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையேத் தாங்குவேன்
நெஞ்சில் நினைத்தே
சூரியன் உதிப்பதே ஒரு முறை காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே
அந்த மழை மேகம் யாவும்
இறங்கியே உனைத் தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போக மாட்டேன்
தெய்வமும் நீ!!!
முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே
(முதல் முறை கேட்ட விநாடியிலேயே மிகவும் பிடித்துப் போன பாடலிது..இப்போதைக்கு இந்த பாடல் மட்டும்தான் பிடிச்சிருக்கு)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எனக்கும் பிடிச்சிருக்கு :)
//தோளிரண்டில் என்னைத் தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்//
அது சரி., அப்போ ஹீரோ பெரிய பீமன் ஆகத்தான் இருக்கணும்.
:))))))))
wow.
my favourite song..
அழகான பாடல். இது எந்த படத்தில் வந்தது. யார் பாடலாசிரியர்?
பிடித்த வரிகள்...
//நீ விளையாட்டுப் பிள்ளை – உனக்கு நான்
தலையாட்டும் பொம்மை
எனைத் தாயைப் போலத் தாங்க வேண்டும் மடியினிலே
//
Post a Comment