அப்படித்தான் அழைக்கத்
தோன்றுகிறது உன்னை...
எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...
இன்றோ என்னை
சந்தோஷிக்க விரும்புகிறாய் நட்பாய்...
இருந்தும் உனக்குத்
தெரியாமலே
உனக்கு முன்பே நான்
வாழ ஆரம்பித்து விட்டேன்...
தினமும் மழையில்
நனைகிறேன்...
இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...
தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...
இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...
ம்ம்ம்ம்...
ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...
தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!
அன்று தனிமையில் என்னிடம் நீ சொல்லி வைத்த
வார்த்தைகள்....
"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"
பிரிவுகள் சாஸ்வதமல்ல... ஏன் நீ...நான்... யாருமே
"அன்பின் அர்த்தங்கள் சில நேரங்களில் பிரிதலிலும் இருக்கக்கூடும்" - கவிதாயினி
பி.கு: அன்பின் பதிவுலக மக்கட்கு, இது கவுஜ, கவிதை என்று நான் வகைப்படுத்தவில்லை :-P அதனால் தைரியமா நீங்க கும்மி அடிக்கலாம் :-)
84 comments:
உணர்வுகளை கூட அருமையாய் வடித்திருக்கிறீர்கள்
என்னை பொறுத்தவரை
இது கவிதை தான்
வாழ்த்துகள் நன்றி
in my opinion,i believe the theme of this poem and i feel thad....
//அப்படித்தான் அழைக்கத்
தோன்றுகிறது உன்னை...//
நாந்தான் அப்பவே சொல்லிட்டனே.. மதின்னு கூப்பிடுங்கன்னு.. அப்பறம் என்ன??
//எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...//
அதான் சண்ட வந்திரிச்சி இல்ல?? அப்பறம் எப்படி சொல்லிட்டு போவாரு??
//இன்றோ என்னை
சந்தோஷிக்க விரும்புகிறாய் நட்பாய்...//
பின்ன எப்பப்பாரு சண்ட போட்டா நல்லாவா இருக்கும்??
//இருந்தும் உனக்குத்
தெரியாமலே
உனக்கு முன்பே நான்
வாழ ஆரம்பித்து விட்டேன்...//
பின்ன மத்த எல்லாரும் பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட சொல்லிட்டா வாழ ஆரம்பிக்கிறாங்க?? இதெல்லாம் நாமளா பாத்து செய்யறது தான்...
//தினமும் மழையில்
நனைகிறேன்...//
சளி பிடிச்சு ஜீரம் வரும்போது இருக்கு உங்களுக்கு...
//இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...//
அவரெங்க அங்க வந்தாரு??
//தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...//
தனியா சிரிச்சாதான் தப்பு.. தோழியோட சிரிச்சா தப்பே இல்ல..
//இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...//
பாவி அக்கா சொல்லவே இல்ல.. சொல்லிருந்தா நானும் வந்துருப்பேனிள்ள?? சண்ட போட்டதுல சேனல் மாத்த ஆள் இல்லங்கர தைரியத்துல நீ இதெல்லாம் செய்ற கரெக்ட்டா??
//ம்ம்ம்ம்...//
இதென்ன தனியா ம்ம்ம்??
@ ஸ்ரீமதி ....
அய்யோ அய்யோ :)))
//ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...//
சாரி இதெனக்கு புரியல..
//தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!//
சரி இனிமே நாலு பேரோட வர சொல்றேன்..
//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
@ ஸ்ரீமதி ....
அய்யோ அய்யோ :)))//
என்ன அக்கா?? எனி ப்ரோப்லம்?? :)))
//அன்று தனிமையில் என்னிடம் நீ சொல்லி வைத்த
வார்த்தைகள்....//
ஆயிரம் சொல்லிருப்பேன்.. அதெல்லாம் யார் ஞாபகம் வெச்சிருக்கா??
//"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"//
அப்படியா?? பார்த்துடலாமா?? நாங்கல்லாம் உங்கள கிள்ளி உங்களையே அழவெப்போம்.. சாக்கிரத...
//பிரிவுகள் சாஸ்வதமல்ல... ஏன் நீ...நான்... யாருமே//
வாஸ்த்தவம் தான்
//"அன்பின் அர்த்தங்கள் சில நேரங்களில் பிரிதலிலும் இருக்கக்கூடும்" - கவிதாயினி//
யார் அந்த கவிதாயினி?? எங்க அக்காவுக்கு போட்டியா??
@ ஸ்ரீமதி
இதுக்குப் பேருதான் கும்மியா? ஆனாலும் கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிட்ட இது உனக்காக எழுதினதுன்னு :-) சமத்து!!!!!
//பி.கு: அன்பின் பதிவுலக மக்கட்கு, இது கவுஜ, கவிதை என்று நான் வகைப்படுத்தவில்லை :-P அதனால் தைரியமா நீங்க கும்மி அடிக்கலாம் :-)//
நீங்க சொல்லலேன்னா என்ன?? நாங்க சொல்லுவோம்.. இது கவுஜ சாரி கவிதை தான்..
பி.கு-க்கும் பின்னூட்டமா?? ஸ்ரீ உன் நெலம ரொம்ப மோசமாகிகிட்டே வருது.. ப்ளீஸ் எஸ் ஆகிக்கோ..
//ஸ்ரீ உன் நெலம ரொம்ப மோசமாகிகிட்டே வருது.. ப்ளீஸ் எஸ் ஆகிக்கோ..//
அதுக்குள்ள என்ன அவசரம் :-P
// இனியவள் புனிதா கூறியது...
@ ஸ்ரீமதி
இதுக்குப் பேருதான் கும்மியா? ஆனாலும் கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிட்ட இது உனக்காக எழுதினதுன்னு :-) சமத்து!!!!!//
நாங்கல்லாம் கும்மி அடிச்சா தாங்க மாட்டிங்க ஆமா.. (யப்பா சமாளிச்சாச்சு)
சமத்துன்னு சொன்னது இருக்கட்டும்.. நான் 20 அடிக்கலாம்ன்னு இருந்தேன் அத இப்படி அநியாயமா கெடுத்துட்டீங்களே அக்கா..
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீ உன் நெலம ரொம்ப மோசமாகிகிட்டே வருது.. ப்ளீஸ் எஸ் ஆகிக்கோ..//
அதுக்குள்ள என்ன அவசரம் :-P//
பின்ன பின்குறிப்புக்கெல்லாமா பின்னூட்டம் போடுவாங்க?? (வாவ் எவ்ளோ பின்... வேணும்னா உங்க சாரிக்கு பின் பண்ணிக்க எடுத்துக்கோங்க அக்கா..)
//சமத்துன்னு சொன்னது இருக்கட்டும்.. நான் 20 அடிக்கலாம்ன்னு இருந்தேன் அத இப்படி அநியாயமா கெடுத்துட்டீங்களே அக்கா..//
அப்ப பொறுமையா...30-ஐ சரியா போட்டுட்டுப் போ :-)
//பின்ன பின்குறிப்புக்கெல்லாமா பின்னூட்டம் போடுவாங்க?? (வாவ் எவ்ளோ பின்... வேணும்னா உங்க சாரிக்கு பின் பண்ணிக்க எடுத்துக்கோங்க அக்கா..)//
நல்லவேளை நான் சுடிதாரோடு நிறுத்திக்கிட்டேன் :-P
//நல்லவேளை நான் சுடிதாரோடு நிறுத்திக்கிட்டேன் :-P//
நீங்களும் என் கட்சியா?? ஷாலுக்கு பின் பண்ண மாட்டீங்களா??
//அப்ப பொறுமையா...30-ஐ சரியா போட்டுட்டுப் போ :-)//
ஹை இது நல்லாருக்கே.... :) ஆனா, தனியா இருக்க பயம்மா இருக்கு.. :(
//ஷாலுக்கு பின் பண்ண மாட்டீங்களா??//
ம்ஹூம்ம்ம்ம். :-P நிஜம்மா..
//அதுக்குள்ள என்ன அவசரம் :-P//
வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேல பார்க்கலாமேன்னு.. வேண்டாம்ன்னா சொல்லிடுங்க..
//இனியவள் புனிதா கூறியது...
//ஷாலுக்கு பின் பண்ண மாட்டீங்களா??//
ம்ஹூம்ம்ம்ம். :-P நிஜம்மா..//
ஹை நீங்க நம்ம கட்சி :))))
ஜஸ்ட் மிஸ்ல 30 போட்ருக்கேன் :)
//வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேல பார்க்கலாமேன்னு.. வேண்டாம்ன்னா சொல்லிடுங்க..//
நீங்க வேலையெல்லாம் செய்வேளா..நேக்கு :-( தெரியாம்மா போச்சே....
//நீங்க வேலையெல்லாம் செய்வேளா..நேக்கு :-( தெரியாம்மா போச்சே....//
ஹி ஹி ஹி அதெல்லாம் சும்மா.. :)
வணக்கம் புனிதா
ம்ம்ம்ம்
நல்லா இருக்கு இன்று நான் அலுவலகம் வரும்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தேன்
//எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...//
சென்ற ஒரு உறவை எப்படி அழைப்பது என்று
\\அன்பில்லாத உனக்கு!!! \\
இந்த வார்த்தை ரோம்ப பொருந்தும்
எனக்கு இது ஒரு நல்ல கவிதையாகத்தான் தெரிகிறது
நன்றி
என்ன அக்கா இன்னும் எதுக்குமே பதில் போடலியா?? சரி அப்ப நான் அப்பறமா வரேன்.. :)))
//நாந்தான் அப்பவே சொல்லிட்டனே.. மதின்னு கூப்பிடுங்கன்னு.. அப்பறம் என்ன??//
ம்ம்ம் நிலவென்று அர்த்தம்..இன்னிக்கூட பௌர்ணமி இல்லையா? நீ கூட அப்படித்தான் :-)
//ஸ்ரீமதி கூறியது...
//எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...//
அதான் சண்ட வந்திரிச்சி இல்ல?? அப்பறம் எப்படி சொல்லிட்டு போவாரு??//
எவ்வளவு பெரிய கண்டுப்பிடிப்பு?
//பின்ன மத்த எல்லாரும் பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட சொல்லிட்டா வாழ ஆரம்பிக்கிறாங்க?? இதெல்லாம் நாமளா பாத்து செய்யறது தான்...//
என்னுடைய அடுத்த பதிவும் பக்கத்து வீடுக்காரரை பத்திதான் :-P
//ஸ்ரீமதி கூறியது...
//தினமும் மழையில்
நனைகிறேன்...//
சளி பிடிச்சு ஜீரம் வரும்போது இருக்கு உங்களுக்கு...//
திட்றயா..கொஞ்சுறீயா?
//ஸ்ரீமதி கூறியது...
//இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...//
அவரெங்க அங்க வந்தாரு??//
அவருடைய இசையை சொன்னேன்-லா. எனக்குப் பிடித்த முதல் 10 விசயங்களில் அவரும் இருக்கார்.
//ஸ்ரீமதி கூறியது...
//இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...//
பாவி அக்கா சொல்லவே இல்ல.. சொல்லிருந்தா நானும் வந்துருப்பேனிள்ள?? சண்ட போட்டதுல சேனல் மாத்த ஆள் இல்லங்கர தைரியத்துல நீ இதெல்லாம் செய்ற கரெக்ட்டா??//
:-P
//ஸ்ரீமதி கூறியது...
//ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...//
சாரி இதெனக்கு புரியல..//
மேலே சொன்ன எதுவும் நடக்கவேயில்லைன்னு அர்த்தம். இப்ப புரிஞ்சதா?
//ஸ்ரீமதி கூறியது...
//தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!//
சரி இனிமே நாலு பேரோட வர சொல்றேன்..//
நிஜம்மா சிரிச்சிட்டேன் :-))))
//ஸ்ரீமதி கூறியது...
//அன்று தனிமையில் என்னிடம் நீ சொல்லி வைத்த
வார்த்தைகள்....//
ஆயிரம் சொல்லிருப்பேன்.. அதெல்லாம் யார் ஞாபகம் வெச்சிருக்கா??//
:-P
//ஸ்ரீமதி கூறியது...
//"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"//
அப்படியா?? பார்த்துடலாமா?? நாங்கல்லாம் உங்கள கிள்ளி உங்களையே அழவெப்போம்.. சாக்கிரத...//
அப்படியா காத்திட்டு இருக்கோம் :-P
//ஸ்ரீமதி கூறியது...
//"அன்பின் அர்த்தங்கள் சில நேரங்களில் பிரிதலிலும் இருக்கக்கூடும்" - கவிதாயினி//
யார் அந்த கவிதாயினி?? எங்க அக்காவுக்கு போட்டியா??//
பாலைத்திணை காயத்ரி..ஆனா அந்த வரிகளில் சிறிது மாற்றம் செஞ்சிருக்கேன் :-)
//நீங்க சொல்லலேன்னா என்ன?? நாங்க சொல்லுவோம்.. இது கவுஜ சாரி கவிதை தான்..//
என்னங்க கொடும்ம இது? நான் கவிதைன்னு சொன்னதெல்லாம் மொக்க கவுஜன்னு சொல்லிட்டு இப்போ மொக்கன்னு சொல்றதைப் போய் கவுஜ...கவிதைன்னு சொல்றீங்க :-(
//நான் கூறியது...
உணர்வுகளை கூட அருமையாய் வடித்திருக்கிறீர்கள்
என்னை பொறுத்தவரை
இது கவிதை தான்
வாழ்த்துகள் நன்றி//
வருகைக்கு நன்றிங்க :-)
//anbulaval கூறியது...
in my opinion,i believe the theme of this poem and i feel thad....//
same blood :-)
/என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்//
அழ வைப்பது கூட அழகாய் இருக்கிறது :))
//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
@ ஸ்ரீமதி ....
அய்யோ அய்யோ :)))//
வாங்க அக்கா...எனக்கும் ஐய்யோன்னுதான் இருக்கு :-)))
2 ஸ்ரீமதி ....
அய்யோ அய்யோ :)))
//வனம் கூறியது...
வணக்கம் புனிதா
ம்ம்ம்ம்
நல்லா இருக்கு இன்று நான் அலுவலகம் வரும்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தேன்
//எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...//
சென்ற ஒரு உறவை எப்படி அழைப்பது என்று
\\அன்பில்லாத உனக்கு!!! \\
இந்த வார்த்தை ரோம்ப பொருந்தும்
எனக்கு இது ஒரு நல்ல கவிதையாகத்தான் தெரிகிறது
நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க இராஜராஜன் :-))
//ஆயில்யன் கூறியது...
/என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்//
அழ வைப்பது கூட அழகாய் இருக்கிறது :))//
அறிவுமதியின் வரிகள் இல்லையா..அதான் :-P
// ஸ்ரீமதி கூறியது...
//"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"//
அப்படியா?? பார்த்துடலாமா?? நாங்கல்லாம் உங்கள கிள்ளி உங்களையே அழவெப்போம்.. சாக்கிரத...
///
யேயப்ப்பாடியேவ்வ்வ்வ்!!!
பயங்கரமான டெரரா இருப்பாங்க போல!
// இனியவள் புனிதா கூறியது...
//நாந்தான் அப்பவே சொல்லிட்டனே.. மதின்னு கூப்பிடுங்கன்னு.. அப்பறம் என்ன??//
ம்ம்ம் நிலவென்று அர்த்தம்..இன்னிக்கூட பௌர்ணமி இல்லையா? நீ கூட அப்படித்தான் :-)//
ஹை அக்கா நான் பௌர்ணமியா?? நன்றி.. :)))
//இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...//
அதான் சண்ட வந்திரிச்சி இல்ல?? அப்பறம் எப்படி சொல்லிட்டு போவாரு??//
எவ்வளவு பெரிய கண்டுப்பிடிப்பு?//
நாங்கல்லாம் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த வீடாக்கும்.. :P
// இனியவள் புனிதா கூறியது...
//பின்ன மத்த எல்லாரும் பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட சொல்லிட்டா வாழ ஆரம்பிக்கிறாங்க?? இதெல்லாம் நாமளா பாத்து செய்யறது தான்...//
என்னுடைய அடுத்த பதிவும் பக்கத்து வீடுக்காரரை பத்திதான் :-P//
நான் பக்கத்துங்கரத படிக்காம.. வெறும் வீட்ட்க்காரரன்னு மட்டும் படிச்சிட்டு கன்பீஸ் ஆகிட்டேன்.. ;))
//இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//தினமும் மழையில்
நனைகிறேன்...//
சளி பிடிச்சு ஜீரம் வரும்போது இருக்கு உங்களுக்கு...//
திட்றயா..கொஞ்சுறீயா?//
கொஞ்சிகிட்டே திட்றேன்.. திட்டிகிட்டே கொஞ்சறேன்.. ;)
//இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...//
அவரெங்க அங்க வந்தாரு??//
அவருடைய இசையை சொன்னேன்-லா. எனக்குப் பிடித்த முதல் 10 விசயங்களில் அவரும் இருக்கார்.//
இந்த விஷயம் அவருக்கு தெரியுமா??
//இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...//
சாரி இதெனக்கு புரியல..//
மேலே சொன்ன எதுவும் நடக்கவேயில்லைன்னு அர்த்தம். இப்ப புரிஞ்சதா?//
அடப்பாவி அக்கா நடக்காத ஒன்னுக்கா இவ்ளோ பெரிய கவிதை?? இதுக்கு நான் இவ்ளோ பின்னூட்டம் வேற.. சரி இதெல்லாம் நடக்கலயேன்னு கவலைல போட்டியா? இல்ல நடக்கனும்கர ஆதங்கத்துல போட்டியா?? சும்மா தெரிஞ்சிக்கதான் கேட்டேன்.. சரி சரி மொறைக்காத...
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!//
சரி இனிமே நாலு பேரோட வர சொல்றேன்..//
நிஜம்மா சிரிச்சிட்டேன் :-))))//
அதென்ன நிஜமா சிரிக்கறது?? அப்ப பொய்யான்னு கூட ஒரு சிரிப்பு இருக்கா??
//இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"//
அப்படியா?? பார்த்துடலாமா?? நாங்கல்லாம் உங்கள கிள்ளி உங்களையே அழவெப்போம்.. சாக்கிரத...//
அப்படியா காத்திட்டு இருக்கோம் :-P//
ச்சே ச்சே அக்கா உங்கள நான் கிள்ளல்லாம் மாட்டேன்.. :))
// இனியவள் புனிதா கூறியது...
//நீங்க சொல்லலேன்னா என்ன?? நாங்க சொல்லுவோம்.. இது கவுஜ சாரி கவிதை தான்..//
என்னங்க கொடும்ம இது? நான் கவிதைன்னு சொன்னதெல்லாம் மொக்க கவுஜன்னு சொல்லிட்டு இப்போ மொக்கன்னு சொல்றதைப் போய் கவுஜ...கவிதைன்னு சொல்றீங்க :-(//
இதுல இருந்து என்ன தெரியுது?? உங்களுக்கு எழுதமட்டும் தான் தெரியுது.. அது என்னன்னு தெரியல.. அதான் எங்கள போல பெரிய மனுசங்க வந்து சொல்றோம் கேட்டுக்கோங்க..
//இனியவள் புனிதா கூறியது...
//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
@ ஸ்ரீமதி ....
அய்யோ அய்யோ :)))//
வாங்க அக்கா...எனக்கும் ஐய்யோன்னுதான் இருக்கு :-)))//
ஏன்??????????????????????? :((
//ஆயில்யன் கூறியது...
2 ஸ்ரீமதி ....
அய்யோ அய்யோ :)))//
ஹைய்யா ஹைய்யா :))))))))
// ஆயில்யன் கூறியது...
// ஸ்ரீமதி கூறியது...
//"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"//
அப்படியா?? பார்த்துடலாமா?? நாங்கல்லாம் உங்கள கிள்ளி உங்களையே அழவெப்போம்.. சாக்கிரத...
///
யேயப்ப்பாடியேவ்வ்வ்வ்!!!
பயங்கரமான டெரரா இருப்பாங்க போல!//
பின்ன உங்க தங்கன்னா.. சும்மாவா??
நான் தான் 69
நான் தான் 70 :):)
கனிகள் தித்திப்பா.. கவிதை தித்திப்பா.. அது அன்பை விட தித்திப்பா..!
;))
தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!
அருமை :)
//இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...
தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...
இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...//
ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.. இன்று நான் எழுதி பதிவிலிட்ட கவிதையிலும் இதே மாதிரியாக எழுதி இருந்தேன்.. :)
//ஆயில்யன் கூறியது...
2 ஸ்ரீமதி ....
அய்யோ அய்யோ :)))//
ரிப்பீட்டு.. :)
// ஆயில்யன் கூறியது...
// ஸ்ரீமதி கூறியது...
//"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"//
அப்படியா?? பார்த்துடலாமா?? நாங்கல்லாம் உங்கள கிள்ளி உங்களையே அழவெப்போம்.. சாக்கிரத...
///
யேயப்ப்பாடியேவ்வ்வ்வ்!!!
பயங்கரமான டெரரா இருப்பாங்க போல!//
ரிப்பீட்டு..
nice poems..i love this poems..
really wonderfull
// ஆயில்யன் கூறியது...
// ஸ்ரீமதி கூறியது...
//"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"//
அப்படியா?? பார்த்துடலாமா?? நாங்கல்லாம் உங்கள கிள்ளி உங்களையே அழவெப்போம்.. சாக்கிரத...
///
யேயப்ப்பாடியேவ்வ்வ்வ்!!!
பயங்கரமான டெரரா இருப்பாங்க போல!//
என்ன அண்ணா இது குழந்தையைப் போய் டெரர்ன்னு சொல்றீங்க!!
@ஸ்ரீமதி
ஹை அக்கா நான் பௌர்ணமியா?? நன்றி.. :)))
நன்றிக்கு நன்றி :-)))
நாங்கல்லாம் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த வீடாக்கும்.. :P
ஏற்கனவே அந்த சந்தேகம் இருந்தது!!!
நான் பக்கத்துங்ரத படிக்காம.. வெறும் வீட்ட்க்காரரன்னு மட்டும் படிச்சிட்டு கன்பீஸ் ஆகிட்டேன்.. ;))
அடிப்பாவி!!!!!!!
கொஞ்சிகிட்டே திட்றேன்.. திட்டிகிட்டே கொஞ்சறேன்.. ;)
நான் பாவம் இல்லையா?
இந்த விஷயம் அவருக்கு தெரியுமா??
ம்ஹூம் தெரியாதே :-P
அடப்பாவி அக்கா நடக்காத ஒன்னுக்கா இவ்ளோ பெரிய கவிதை?? இதுக்கு நான் இவ்ளோ பின்னூட்டம் வேற.. சரி இதெல்லாம் நடக்கலயேன்னு கவலைல போட்டியா? இல்ல நடக்கனும்கர ஆதங்கத்துல போட்டியா?? சும்மா தெரிஞ்சிக்கதான் கேட்டேன்.. சரி சரி மொறைக்காத...
இல்ல மொறைக்கல..நடக்காத என்ற ஆதங்கம்தான்..ஆனா இப்ப நடக்கவும் ஆரம்பிச்சிடுச்சு.. :-)))
அதென்ன நிஜமா சிரிக்கறது?? அப்ப பொய்யான்னு கூட ஒரு சிரிப்பு இருக்கா??
:-))))))) எனக்குப் பொய்யா சிரிக்கப் பிடிக்காது :-P
ச்சே ச்சே அக்கா உங்கள நான் கிள்ளல்லாம் மாட்டேன்.. :))
பின்னே..வேறு ஏதாவது ஐடியா வச்சிருக்கீயோ?
இதுல இருந்து என்ன தெரியுது?? உங்களுக்கு எழுதமட்டும் தான் தெரியுது.. அது என்னன்னு தெரியல.. அதான் எங்கள போல பெரிய மனுசங்க வந்து சொல்றோம் கேட்டுக்கோங்க..
அது என்னவோ வாஸ்தவம்தான் :-)
ஏன்??????????????????????? :((
சும்மா டா..இதுக்கு ஏன் இவ்வளவு சோகம் ம்ம்?
ஹைய்யா ஹைய்யா :))))))))
பின்ன உங்க தங்கன்னா.. சும்மாவா??
பாவம் ஆயில்ஸ் :-)
நான் தான் 69
சரி.......
நான் தான் 70 :):)
வாழ்த்துகள்!!!
//கோபிநாத் கூறியது...
;))//
வருகைக்கு நன்றி கோபி!!!
//இத்யாதி கூறியது...
தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!
அருமை :)//
நன்றிங்க இத்யாதி :-)
//Saravana Kumar MSK கூறியது...
//இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...
தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...
இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...//
ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.. இன்று நான் எழுதி பதிவிலிட்ட கவிதையிலும் இதே மாதிரியாக எழுதி இருந்தேன்.. :)//
ம்ம்ம் நானும் படிச்சேன் சரவணா!!
//viyaa கூறியது...
nice poems..i love this poems..
really wonderfull//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வியா!!!
"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"
வன்முறை புத்தி...
Post a Comment