Monday, October 20, 2008

நினைவுத் தெரிந்த நாள் முதலா!!!!

பல அலுவலுக்கிடையே நசுங்கிவிடாமல் கரைச்சேர்த்துக் கைக்கோர்த்த கரையோர கனவுகளின் நாயகி ஸ்ரீமதிக்கும் கோபிநாத்துக்கும் நன்றி!!!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

வயது நினைவில்லையென்றாலும்..நிச்சயமாய் ஆரம்பப்பள்ளியின் இறுதி ஆண்டாக இருக்க வேண்டும்..அப்போதுதான் சின்னத்தம்பியும், தளபதியும் அறிமுகமானதாக நினைவு...

2. நினைவுத் தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

திரைப்படம் என்றால் என்ன என்று அறிந்துக் கொண்டச் சமயம் அதில் அவ்வளவாக ஈடுபாட்டை ஏற்படுத்தவில்லை.. ஆனாலும் தோழிகளின் கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஷாருக்கான் பற்றிய ஆர்வத்தின் பேரால் பார்த்தப் படம் Darr... Tuhe Mere Karan..இன்னமும் கேட்கப் பிடித்தப் பாடல்களில் ஒன்று... இடைநிலைப் பள்ளிக் காலங்களில் அதிகமாய் நான் விரும்பிப் பார்த்தது இந்திப் படங்களே... Saajan...Yes Boss..இன்னும் நிறைய படங்கள்...பெயர்கள் அவ்வளவாக நினைவில்லை. ம்ம்ம் என்ன உணர்ந்தேன்!!! அமிர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான்..இவர்களில் ஷாருக்கான் மட்டுமே cute!!! இதுக்காக ஷாருக்கான் என்னுடைய favouriteன்னு நினைக்க வேண்டாம்...

3. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

வேலைக்குப் பாதியிலேயே மட்டம் போட்டுவிட்டு பாசமலரோடு போய் பார்த்தப் படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு... நம்ம ஊருக்காரவுக தயாரிச்ச படமாச்சேன்னு போய்ப் பார்த்து நொந்து நூடல்ஸாகி வந்தப் படம்... வடிவேலு மட்டுமே ஆறுதல்...ஆனாலும் அவருடைய வசனங்களில் அதிக விரசம்...வள்ளல் ரேனாவின் வாரிசுகள் தயாரிக்கும் படத்தின் தரமா இது???

4. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக நான் விமர்சனம் எழுதியிருந்த ராமன் தேடிய சீதை.... இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துப் பார்த்தேன். ம்ம்ம் கொஞ்சம் முன்பாகவே பார்த்திருக்கலாமே என்று வருந்த வைத்தது காரணம்??? மழை நின்றப் பின்பும் தூறலை படிச்சுப் பாருங்க!!!

5. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தாக்கியதென்று சொல்வதற்கில்லையென்றாலும்...இரசிக்க வைத்த படங்களின் பட்டியல் நீளம் வசந்த மாளிகை, இராஜ ராஜ சோழன், ஆயிரத்தில் ஒருவன், நெஞ்சில் ஓர் ஆலயம், மௌனராகம், பூவே உனக்காக, அமராவதி, அலைபாயுதே, ரிதம், மொழி...இராமன் தேடிய சீதை...மீண்டும் பார்க்க நினைக்கும் பாக்கியராஜின் ருத்ரா, ஆராரோ ஆரிரரோ, முந்தானை முடிச்சு...

அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இல்லை

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பமென்றவுடன் நினைவுக்கு வருவது முப்பரிமாண (3D)அசைவுகள் மற்றும் விளைவு. முன்பு வெளிவந்த மை டியர் குட்டி சாத்தான் திரைப்படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் அதே தொழில்நுட்பத்தில் சுல்தான் தி வாரியர் தயாராகி வருவது தமிழ்த்திரையுலகின் ஆரோக்கியமான வளர்ச்சியாய் தோன்றுகிறது. முப்பரிமாண அசைவுகள் (3D Animation) என்றால் கார்டூன்கள் மட்டும்தான் என்றெண்ணிவரும் மக்களுக்கு இது ஒரு மாற்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 200க்கும் மேற்பட்டவர்களின் உழைப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியீடு காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சில சமயங்களில்...நாளிதழ்களிலும்...இணையத்திலும் எப்பொழுதாவது Cinefashion மாதிகை வாசிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

இந்த வரிசையில் மிகவும் பிடித்தக் கேள்வி இது மட்டும்தான். உலகத் தரத்தில் தமிழ்த்திரையுலகம் வளர்ந்திருக்காவிட்டாலும் தமிழ்த்திரையிசைப்பாளர்கள் உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்பது மறுக்க மறக்க முடியாத உண்மை. இளையராஜா (இவருடைய இசையமைப்பு உலகத் தரத்தையும் எஞ்சியது) எவ்வளவு புதிய பாடல்கள் வெளிவந்தாலும் 80களில் வெளிவந்த இவருடைய பாடல்கள் என்றும் நீங்காத நெஞ்சின் இராகங்கள்தான்... ஏ.ஆர் ரகுமான்... யுவன், ஹாரிஸ் ஜெயராஜ்... வித்யாசகர் இவர்களும் இரசிக்க வைக்கிறார்கள். ஆனாலும் வருந்த வைக்கும் ஒரே விசயம் பாடகர்களின் தேர்வு... வட இந்திய பாடகர்களின் தமிழ்க்கொலை எரிச்சலூட்டுகிறது... அழகான வரிகள்கூட இவர்களின் குரலில் அர்த்தமிழந்துப் போய்விடுகிறது. அதிலும் உதித் நாராயண் பாடவில்லையென்றால் தமிழ்த்திரையிசையே அழிந்துவிடுமா என்ன? இதில் ஸ்ரேயா கோஷல் மட்டுமே விதிவிலக்கு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

முதல் தடவை Kuch Kuch Hota Hai பார்த்துவிட்டு கண் கலங்கியதுண்டு.. எப்போது பார்த்தாலும் என்னுள் சிலிர்ப்பை ஏற்படுத்தும் மற்றொரு திரைப்படம் Kabhi Kushi Kabhi Gham முக்கியமாக ஷாருக்கான், ஜெயா பச்சன் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும்...Mujhse Dosti Karogi எனக்குப் பிடிக்காத ரித்திக் ரோஷனையும் இரசிக்க வைத்தப் படம். இதில் ரித்திக் அருமையாக நடித்திருப்பார். இந்தி மொழியைத் தவிர்த்து மலையாள மொழி படங்களை அவ்வப்போது வானவில்லில் பார்க்க நேரிடும்...தெலுங்கு மொழியில் நிறைய படங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் தற்போது ‘ஆடாவரி மாத்தலக்கு அர்த்தலு வேறலு’ உலக மொழித் திரைப்படங்களென்றால் அதிகமாய் பார்ப்பது...பார்த்தது ஆங்கில மொழிப் படங்களே...அதில் அதிகமாய் பாதித்தது Forest Gump (Tom Hanks), Sleepless in seatlle (Tom Hanks)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

75 ஆண்டுகளை கடந்து விட்ட தமிழ்த்திரையுலகம் இனி வரும் காலங்களிலாவது உலகத் தரத்திற்கு ஈடாக படங்களைத் தயாரிக்க வேண்டும். இந்திய திரையுலகமென்றால் அது இந்தித்திரையுலகம்தான் என்ற நிலை மாற வேண்டும். எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த நாயக வழிபாடு செய்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. இது வரைக்கும் பாலபிஷேகம் செய்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள் இனி வரும் காலங்களில் இதற்கும் சமய சாயம் பூசினாலும் பூசுவார்கள்?? தமிழ்த்திரை நாயகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சி திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குள் எந்த மாற்றமும் இருக்காது..... விடுப்பட்டுப்போன பழைய படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கலாம். இன்னும் இருக்கவே இருக்குது இந்தி, ஆங்கில, கொரிய, மலாய் மொழிப்படங்கள். சினிமாத்தான் உலகம் என்ற மாயை மாற இந்த ஒரு வருடம் போதாதே!!!

இந்த தொடர்விளையாட்டை தொடர விரும்பி நான் அழைப்பவர்கள் :
மனோகர் - சூர்ய பார்வை
புனித் - சொல்லத்தான் நினைத்தேன்

46 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டு வந்தேன் :))

ஆயில்யன் said...

//200க்கும் மேற்பட்டவர்களின் உழைப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியீடு காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
//


ம்ம் நானும் கூட எதிர்ப்பார்த்திருக்கிறேன் புது முயற்சியாக தெரிவிக்கப்பட்டிருக்கும் படம் பார்ப்போம் ரசிகர்களின் மனங்களில் இது போன்ற முப்பரிமாண தொழில்நுட்பம் எந்தளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று! (பட் ஸ்டில் மை டியர் குட்டிச்சாத்தான் பெரும்பாலனாவர்களால் நினைவுகூறப்படும் முப்பரிமாண படமாக இருக்கிறது!)

Unknown said...

யக்கா பரவால்ல ரொம்ப நல்லாவே பதில் சொல்லிருக்கீங்க..!! :)))

Unknown said...

//இந்த வரிசையில் மிகவும் பிடித்தக் கேள்வி இது மட்டும்தான்.//

அக்கா அப்ப நான் கேட்ட மத்த கேள்வி எல்லாம் பிடிக்கலியா?? :(( ;))

Unknown said...

//ஷாருக்கான் மட்டுமே cute!!!//

உண்மையான.. நியாயமான.. மறுக்கமுடியாத... மறைக்கமுடியாத... மறுக்கவும் கூடாத.. உண்மை...ஹி ஹி ஹி..!! ;))))))))) ஆனா இப்பெல்லாம் Jab we met ஷாகித் கபூர்..!! ;))))))))

Unknown said...

//என்னுடைய ஹீரோ எப்போதுமே அஜய் தேவ்கன்தான்!!//

:((((((((((((Mmm ok..!! ;))

Unknown said...

//வேலைக்குப் பாதியிலேயே மட்டம் போட்டுவிட்டு பாசமலரோடு போய் பார்த்தப் படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு... நம்ம ஊருக்காரவுக தயாரிச்ச படமாச்சேன்னு போய்ப் பார்த்து நொந்து நூடல்ஸாகி வந்தப் படம்...//

நல்லாவேணும்... அதுக்கு தான் ஆபீஸ் எல்லாம் கட் அடிக்கக் கூடாதுங்கறது... காலேஜ் வேணா கட் அடிக்கலாம் என்ன மாதிரி..!! ;)))))

Unknown said...

//அதிலும் உதித் நாராயண் பாடவில்லையென்றால் தமிழ்த்திரையிசையே அழிந்துவிடுமா என்ன?//

Good question... I like it.. ;)))))

Unknown said...

//முதல் தடவை Kuch Kuch Hota Hai பார்த்துவிட்டு கண் கலங்கியதுண்டு..//

Mmmmm Me too.. :((

Anonymous said...

//ஆயில்யன் said...
மீ த பர்ஸ்டு வந்தேன் :))//

வாழ்த்துகள்!!!

Anonymous said...

//
ம்ம் நானும் கூட எதிர்ப்பார்த்திருக்கிறேன் புது முயற்சியாக தெரிவிக்கப்பட்டிருக்கும் படம் பார்ப்போம் ரசிகர்களின் மனங்களில் இது போன்ற முப்பரிமாண தொழில்நுட்பம் எந்தளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று! (பட் ஸ்டில் மை டியர் குட்டிச்சாத்தான் பெரும்பாலனாவர்களால் நினைவுகூறப்படும் முப்பரிமாண படமாக இருக்கிறது!)//

நிச்சயமாய் நல்லதொரு மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்!!!

Anonymous said...

//ஸ்ரீமதி said...
யக்கா பரவால்ல ரொம்ப நல்லாவே பதில் சொல்லிருக்கீங்க..!! :)))//

நன்றி தங்கச்சி!!!

Anonymous said...

//ஸ்ரீமதி said...
//இந்த வரிசையில் மிகவும் பிடித்தக் கேள்வி இது மட்டும்தான்.//

அக்கா அப்ப நான் கேட்ட மத்த கேள்வி எல்லாம் பிடிக்கலியா?? :(( ;))//

மிகவும் பிடித்தக் கேள்வி அது செல்லம்!!!

Unknown said...

//மற்றொரு திரைப்படம் Kabhi Kushi Kabhi Gham//

ஹை ஆமா... :))) இத எப்படி மறந்தேன்?? :( அதுவும் ஷாருக் Intoduction சீன்ல அவங்க அம்மா பொட்டு வெச்சிவிடுவாங்களே... Choooo chweeeeet... ;))) அதே மாதிரியே ஒரு பையன் இருந்தான் என்கூட ட்ரைனிங்ல... ஹீம்ம்ம்ம்ம்ம்...... :(((((((

Anonymous said...

//உண்மையான.. நியாயமான.. மறுக்கமுடியாத... மறைக்கமுடியாத... மறுக்கவும் கூடாத.. உண்மை...ஹி ஹி ஹி..!! ;))))))))) ஆனா இப்பெல்லாம் Jab we met ஷாகித் கபூர்..!! ;))))))))//

இன்னமும் பார்க்கவில்லை!!! :-) பார்த்துவிட்டு சொல்கிறேன்.. ஆனாலும் கரினா கபூர்??

Anonymous said...

//:((((((((((((Mmm ok..!! ;))//

:-)

Unknown said...

//Mujhse Dosti Karogi எனக்குப் பிடிக்காத ரித்திக் ரோஷனையும் இரசிக்க வைத்தப் படம்.//

யக்கா நான் பார்த்த படமெல்லாம் நீ பார்த்துருக்க.. :)))))) பட் நான் சொல்ல மறந்துட்டேன்..!! ;)))))அடிக்கடி ஹிரித்திக் hum பண்ற சாங் சூப்பரா இருக்கும்..!! :)))

Anonymous said...

//ஸ்ரீமதி said...
//வேலைக்குப் பாதியிலேயே மட்டம் போட்டுவிட்டு பாசமலரோடு போய் பார்த்தப் படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு... நம்ம ஊருக்காரவுக தயாரிச்ச படமாச்சேன்னு போய்ப் பார்த்து நொந்து நூடல்ஸாகி வந்தப் படம்...//

நல்லாவேணும்... அதுக்கு தான் ஆபீஸ் எல்லாம் கட் அடிக்கக் கூடாதுங்கறது... காலேஜ் வேணா கட் அடிக்கலாம் என்ன மாதிரி..!! ;)))))//

அதான் :-P அதிலிருந்து இன்னமும் தியேட்டர் பக்கமே போகல :-)

Anonymous said...

//ஸ்ரீமதி said...
//அதிலும் உதித் நாராயண் பாடவில்லையென்றால் தமிழ்த்திரையிசையே அழிந்துவிடுமா என்ன?//

Good question... I like it.. ;)))))//

மீ டு :-)

Unknown said...

//தமிழ்த்திரை நாயகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சி திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...//

:(((((((((((((
:))))))))))))

Anonymous said...

//ஸ்ரீமதி said...
//முதல் தடவை Kuch Kuch Hota Hai பார்த்துவிட்டு கண் கலங்கியதுண்டு..//

Mmmmm Me too.. :((//

அச்சோ அழக்கூடாது சரியா...எங்கே கண்ணைத் துடைச்சுக்கோங்க பார்க்கலாம் :-)

Anonymous said...

//ஸ்ரீமதி said...
//மற்றொரு திரைப்படம் Kabhi Kushi Kabhi Gham//

ஹை ஆமா... :))) இத எப்படி மறந்தேன்?? :( அதுவும் ஷாருக் Intoduction சீன்ல அவங்க அம்மா பொட்டு வெச்சிவிடுவாங்களே... Choooo chweeeeet... ;))) அதே மாதிரியே ஒரு பையன் இருந்தான் என்கூட ட்ரைனிங்ல... ஹீம்ம்ம்ம்ம்ம்...... :(((((((//

ஏன் இந்த பெருமூச்சு...!!!

Anonymous said...

@ ஸ்ரீமதி

//யக்கா நான் பார்த்த படமெல்லாம் நீ பார்த்துருக்க.. :)))))) பட் நான் சொல்ல மறந்துட்டேன்..!! ;)))))//

சேம் வேவ்லெங்த் :-)

//அடிக்கடி ஹிரித்திக் hum பண்ற சாங் சூப்பரா இருக்கும்..!! :)))//

Actualல்லா ராணி முகர்ஜிக்காக பார்க்க நினைத்து ரித்திக்கையும் அந்தப் படத்தில் பிடித்து விட்டது...!!

Anonymous said...

//ஸ்ரீமதி said...
//தமிழ்த்திரை நாயகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சி திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...//

:(((((((((((((
:))))))))))))//

அதுக்குள்ள நீங்க எல்லோரும் விழித்துக் கொண்டால் சரிதான்!!!

Unknown said...

// இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
//மற்றொரு திரைப்படம் Kabhi Kushi Kabhi Gham//

ஹை ஆமா... :))) இத எப்படி மறந்தேன்?? :( அதுவும் ஷாருக் Intoduction சீன்ல அவங்க அம்மா பொட்டு வெச்சிவிடுவாங்களே... Choooo chweeeeet... ;))) அதே மாதிரியே ஒரு பையன் இருந்தான் என்கூட ட்ரைனிங்ல... ஹீம்ம்ம்ம்ம்ம்...... :(((((((//

ஏன் இந்த பெருமூச்சு...!!!//

ஏனா?????? அவன் தான் பறந்து போய்ட்டானே புனேக்கு.....!! :(( ;))

Unknown said...

//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//முதல் தடவை Kuch Kuch Hota Hai பார்த்துவிட்டு கண் கலங்கியதுண்டு..//

Mmmmm Me too.. :((//

அச்சோ அழக்கூடாது சரியா...எங்கே கண்ணைத் துடைச்சுக்கோங்க பார்க்கலாம் :-)//

ம்ம்ம் தொடைச்சிகிட்டேன்கா..!! ;))

அமிர்தவர்ஷினி அம்மா said...

nice answer sheet

கோபிநாத் said...

\\மற்றொரு திரைப்படம் Kabhi Kushi Kabhi Gham முக்கியமாக ஷாருக்கான், ஜெயா பச்சன் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும்\\\

எனக்கும் பிடித்த படம்...ஜெயா பச்சனும், ஷாருக்கானும் Shopping complexல பார்த்துகிற காட்சி..அட அட செம டச்சிங் சீன் ;)

ஜியா said...

//உலகத் தரத்திற்கு ஈடாக படங்களைத் தயாரிக்க வேண்டும். //

:))) ulaga tharamaa?? apdiina??

PK said...

ஹாய் புனிதா அக்கா,
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. இது எதை பற்றிய கதை? நான் அப்படி ஒரு படம் கேள்வி பட்டது கூட இல்லையே? Infact, மலேசியா வில் படம் எடுப்பார்கள் என்பதே இதை படித்த பின் தான் தெரிந்தது.
Forrest gump.. உங்களுக்கும் எனக்கும் ஒரே taste! :)
தொடருக்கு அழைததருக்கு நன்றி அக்கா!

அன்புடன்,
புனித்

Anonymous said...

//ஏனா?????? அவன் தான் பறந்து போய்ட்டானே புனேக்கு.....!! :(( ;))//


அச்சோ :-(

Anonymous said...

//ம்ம்ம் தொடைச்சிகிட்டேன்கா..!! ;))//

Good Gal :-))

Anonymous said...

//AMIRDHAVARSHINI AMMA said...
nice answer sheet//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!

Anonymous said...

//கோபிநாத் said...
\\மற்றொரு திரைப்படம் Kabhi Kushi Kabhi Gham முக்கியமாக ஷாருக்கான், ஜெயா பச்சன் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும்\\\

எனக்கும் பிடித்த படம்...ஜெயா பச்சனும், ஷாருக்கானும் Shopping complexல பார்த்துகிற காட்சி..அட அட செம டச்சிங் சீன் ;)//


வாவ் உங்களுக்கும் அந்த சீன் பிடிக்குமா?

Anonymous said...

//ஜி said...
//உலகத் தரத்திற்கு ஈடாக படங்களைத் தயாரிக்க வேண்டும். //

:))) ulaga tharamaa?? apdiina??//

என்னத்த சொல்ல!!!

Anonymous said...

//புனித் கைலாஷ் said...
ஹாய் புனிதா அக்கா,
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. இது எதை பற்றிய கதை? நான் அப்படி ஒரு படம் கேள்வி பட்டது கூட இல்லையே? Infact, மலேசியா வில் படம் எடுப்பார்கள் என்பதே இதை படித்த பின் தான் தெரிந்தது.
Forrest gump.. உங்களுக்கும் எனக்கும் ஒரே taste! :)
தொடருக்கு அழைததருக்கு நன்றி அக்கா!

அன்புடன்,
புனித்//


முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்திய திரைப்படம்தான். ஆனால் அதன் தயாரிப்பாளர்கள் மலேசியர்கள். பரத் இந்த படத்தின் கதாநாயகன். அப்புறம் மலேசியாவில் திரைப்படங்கள் தயாரிக்கின்றனர்..அண்மைய வெளியீடு விக்ரந்த்...நான் இன்னும் பார்க்கவில்லை..

MyFriend said...

கலக்கல் பதில்கள்..

;-)

சென்ஷி said...

நல்லா இருக்கு!!!! :-)

MSK / Saravana said...

நல்லா எழுதி இருக்கீங்க புனிதா..
எனக்கும் Tom Hanks படங்கள் பிடிக்கும்.. :))

MSK / Saravana said...

//ஸ்ரீமதி said...
ஹை ஆமா... :))) இத எப்படி மறந்தேன்?? :( அதுவும் ஷாருக் Intoduction சீன்ல அவங்க அம்மா பொட்டு வெச்சிவிடுவாங்களே... Choooo chweeeeet... ;))) அதே மாதிரியே ஒரு பையன் இருந்தான் என்கூட ட்ரைனிங்ல... ஹீம்ம்ம்ம்ம்ம்...... :(((((((//

ஏனா?????? அவன் தான் பறந்து போய்ட்டானே புனேக்கு.....!! :(( ;))//

ஓஹோ.. :)) ok.. ok..

Anonymous said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கலக்கல் பதில்கள்..

;-)//

நன்றி!!!

Anonymous said...

//சென்ஷி said...
நல்லா இருக்கு!!!! :-)//

Thanks

Anonymous said...

//Saravana Kumar MSK said...
நல்லா எழுதி இருக்கீங்க புனிதா..
எனக்கும் Tom Hanks படங்கள் பிடிக்கும்.. :))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நல்லா பதில் சொல்றீங்களே,

இன்னும் கூட நிறைய கேள்விகள் கேட்க்கலாம் போல :)

Unknown said...

//இந்த வரிசையில் மிகவும் பிடித்தக் கேள்வி இது மட்டும்தான். உலகத் தரத்தில் தமிழ்த்திரையுலகம் வளர்ந்திருக்காவிட்டாலும் தமிழ்த்திரையிசைப்பாளர்கள் உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்பது மறுக்க மறக்க முடியாத உண்மை.//

உண்மைதான் நமது இசை இன்று உலகை கலக்குகிறது.

ரிஷி said...

கவிதைகள் கலங்கடித்துவிட்டனா

வாழ்த்துக்கள்

தொடருங்கள்