
நீ வீசும் புன்னகையில்
வீழ்ந்தவள் இன்று
கண்ணீரில் கரைகிறாள்
நாணத்தைத் தூதுவிட்டவள்
இதயத்தையும் தொலைத்ததேன்
உன் நினைவில் உருகிய
விடியாத இரவுகள்
விரக்தியின் இலக்கானதேனோ
உன் மௌனங்களே
என் விரத சாபமாய்
உன் பேச்சுக்களே
என் மௌன தாபமாய்
நீ என்பது நீயில்லாமல்
நான் ஆகும் நாளைத்
தேடி கவிதையில்
தடம் பதிக்கிறேன்
தடயங்கள் காயும் முன்னே
உன் மூச்சுக்காற்றால் என் நுரையீரல்
தீண்டிச் செல்.... :-(
13 comments:
//உன் நினைவில் உருகியவிடியாத இரவுகள்விரக்தியின் இலக்கானதேனோ
உங்கள் கவிதைகளை படிக்க நேர்ந்தது, அனைத்தும் நன்றாக உள்ளன, தொடருங்கள், வாழ்த்துக்கள்
:))
\\நீ வீசும் புன்னகையில் வீழ்ந்தவள் இன்று கண்ணீரில் கரைகிறாள்நாணத்தைத் தூதுவிட்டவள்இதயத்தையும் தொலைத்ததேன்//
அழகான வரிகள்.....மீண்டும் ஒருமுறை படித்து ரசித்தேன்:))
உங்களுக்கு காதல் கிடைக்கும்..
:))
யக்கா ஏன் இந்த சோகம்?? யார் தந்த சாபம்?? நீ மேடை மேகம்.. ஏன் மின்னல் வேகம்?? ;))
கவிதை நல்லா இருந்தது..!! :)) அதை படிச்சதும் இந்த பாடல் நியாபகம் வந்தது, எழுதிட்டேன். டோன்ட் மிஸ்டேக் மீ..!! ;))
//....$Vignesh said...
//உன் நினைவில் உருகியவிடியாத இரவுகள்விரக்தியின் இலக்கானதேனோ
உங்கள் கவிதைகளை படிக்க நேர்ந்தது, அனைத்தும் நன்றாக உள்ளன, தொடருங்கள், வாழ்த்துக்கள்//
நன்றி விக்னேஷ் வருகைக்கும் வாழ்த்துக்கும்...!
//VIKNESHWARAN said...
:)//
:-))
//கோபிநாத் said...
:))//
:-)))
//Divya said...
\\நீ வீசும் புன்னகையில் வீழ்ந்தவள் இன்று கண்ணீரில் கரைகிறாள்நாணத்தைத் தூதுவிட்டவள்இதயத்தையும் தொலைத்ததேன்//
அழகான வரிகள்.....மீண்டும் ஒருமுறை படித்து ரசித்தேன்:))//
நன்றி திவ்யா... :-)
//Saravana Kumar MSK said...
உங்களுக்கு காதல் கிடைக்கும்..
:))//
இதை கவிதையாய் மட்டும் பார்க்கலாமே சரவண குமார்.
//Sri said...
யக்கா ஏன் இந்த சோகம்?? யார் தந்த சாபம்?? நீ மேடை மேகம்.. ஏன் மின்னல் வேகம்?? ;))
கவிதை நல்லா இருந்தது..!! :)) அதை படிச்சதும் இந்த பாடல் நியாபகம் வந்தது, எழுதிட்டேன். டோன்ட் மிஸ்டேக் மீ..!! ;))//
கோபமெல்லாம் கிடையாது ஸ்ரீ... ஏதோ கிறுக்கலாய் எழுதியது.
:)அழகான கவிதை
வாழ்த்துக்கள்
அறிவுடைநம்பி
//ARIVUDAI NAMBI said...
:)அழகான கவிதை
வாழ்த்துக்கள்
அறிவுடைநம்பி//
நன்றி நம்பி!
Post a Comment