
என்றாவது எப்போதாவது
உன்னைப் பற்றிய
நினைவுகள் பேராழியாய்
அலைக்கழித்துச் சென்றாலும்
அள்ளித் தெளித்த
உன்னைப் பற்றிய
நினைவுகள் பேராழியாய்
அலைக்கழித்துச் சென்றாலும்
அள்ளித் தெளித்த
அவசர கோலமாய்
உன் மௌனத்தையும்
உன் மௌனத்தையும்
மிஞ்சி நிற்கிறது
சில செல்லக் கோபங்கள்
கைவிரல் நடுங்க கைக்கோர்த்த
சில செல்லக் கோபங்கள்
கைவிரல் நடுங்க கைக்கோர்த்த
அந்த மழை நாட்களை
மறக்கத் துடித்தும்
ஒவ்வொரு இரவும்
ஒவ்வொரு இரவும்
தலையணையை
ஈரமாக்கிச் செல்கிறது
ஈரமாக்கிச் செல்கிறது
உந்தனின் நினைவலைகள்
வாழவும் விடாமலும்
வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்
கையை மீறிச் சென்ற
கணங்களைப் போலவும்
முகவரியில்லாத தேடலைப் போலவும்
இந்தக் கவிதையும் முற்றுப்பெறவில்லை!!!!
கையை மீறிச் சென்ற
கணங்களைப் போலவும்
முகவரியில்லாத தேடலைப் போலவும்
இந்தக் கவிதையும் முற்றுப்பெறவில்லை!!!!
47 comments:
பிரிவும் ஏக்கமும் ப்ரியநேசத்தை அடையும் வரைதானே.:)
கவிதை விரைவில் முற்றுபெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்
சூர்யா.ஜிஜி
தேடல் என்பது எப்போதும் முற்று பெறாதது!! காதல் மற்றுமல்ல! நம் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் ஒரு தேடலில் இருந்து கொண்டே தான் இருக்கிறது!!
தேடல் தொடரட்டும்!!! தெளிவு பிறக்கட்டும்
என்ன சமீப காலமாக எல்லாம் காதல் தோல்வி கவிதைகள் :((
கைவிரல் நடுங்க கைக்கோர்த்த அந்த மழை நாட்களை மறக்கத் துடித்தும்
ஒவ்வொரு இரவும் தலையணையை
ஈரமாக்கிச் செல்கிறது உந்தனின் நினைவலைகள்
:)... பலரின் நினைவுகளையும் ஒருசேர பார்திருப்பது தலையணை மட்டும் தான்... அதற்கு வாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...
"தலையணைக்கு மட்டு தெரிந்த ரகசியங்கள்" வாய் இருந்தால் அயிரம் கதை சொல்லும்.
உணர்வுகள் இனிமை...
நல்லாயிருக்கு...
ரொம்ப அருமையாவும் மனசுக்கு நெருக்கமாகவும் இருக்கு..
//வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்//
மிக சிறப்பு..
//வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்///
அருமையான கவிதை வரிகள்.
காதல் இருமுனை கத்தி.
வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்
கையை மீறிச் சென்ற
கணங்களைப் போலவும்
\\அவசர கோலமாய்
உன் மௌனத்தையும் மிஞ்சி நிற்கிறது
சில செல்லக் கோபங்கள்\\
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் புனிதா:))
கவிதை விரைவில் முற்றுபெற........என் வாழ்த்துக்கள்!!!
வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்
kavithai varikal arumai
நல்லா இருக்கு அக்கா :)))
//வாழவும் விடாமலும் சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன சில அற்ப காரணங்கள்//
Very cute :))
\\அவசர கோலமாய்
உன் மௌனத்தையும் மிஞ்சி நிற்கிறது
சில செல்லக் கோபங்கள்\\
மிக அழகு புனிதா....
ஏனிந்த சோகம் கவிஞரே...?? :)))
வணக்கம்,
கையை மீறிச் சென்ற
கணங்களைப் போலவும்
முகவரியில்லாத தேடலைப் போலவும்
இந்தக் கவிதையும் முற்றுப்பெறவில்லை!!!!
அருமையான வரிகள். ஆழமான அர்த்தம். வலியின் வேதனைப் புரிகிறது.
//சூர்யா.ஜிஜி said...
பிரிவும் ஏக்கமும் ப்ரியநேசத்தை அடையும் வரைதானே.:)
கவிதை விரைவில் முற்றுபெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்
சூர்யா.ஜிஜி//
நன்றி சூர்யா@மனோ:-)
//Maddy said...
தேடல் என்பது எப்போதும் முற்று பெறாதது!! காதல் மற்றுமல்ல! நம் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் ஒரு தேடலில் இருந்து கொண்டே தான் இருக்கிறது!!
தேடல் தொடரட்டும்!!! தெளிவு பிறக்கட்டும்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா :-))
//VIKNESHWARAN said...
என்ன சமீப காலமாக எல்லாம் காதல் தோல்வி கவிதைகள் :((//
அதுதான் மிக இயல்பா எழுத வருது...அனுபவமா அப்படின்னுல்லாம் கேட்கப்படாது ;-)வருகைக்கு நன்றி விக்கி!!!
//நாணல் said...
கைவிரல் நடுங்க கைக்கோர்த்த அந்த மழை நாட்களை மறக்கத் துடித்தும்
ஒவ்வொரு இரவும் தலையணையை
ஈரமாக்கிச் செல்கிறது உந்தனின் நினைவலைகள்
:)... பலரின் நினைவுகளையும் ஒருசேர பார்திருப்பது தலையணை மட்டும் தான்... அதற்கு வாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...//
ம்ம்ம் நிச்சயமா அது துக்கங்களின் சாட்சி மட்டுமல்ல காதலின் சாட்சியுங்கூட :-))வருகைக்கு நன்றி நாணல் :-)
//AKK said...
"தலையணைக்கு மட்டு தெரிந்த ரகசியங்கள்" வாய் இருந்தால் அயிரம் கதை சொல்லும்.
உணர்வுகள் இனிமை...//
நன்றி அருள் :-))
//கோபிநாத் said...
நல்லாயிருக்கு...//
நம்பலாமா? இல்லை இப்ப்டியெல்லாம் மறுமொழி எழுதினாத்தான் நான் இந்த மாதிரி இந்த மாதிரி எல்லாம் எழுத மாட்டேன்னு நினைச்சிங்களா... இனிமேல்தான் அதிகமா எழுத போறேன் :-))
//சென்ஷி said...
:))//
:-)) நானும் :-)))
//Saravana Kumar MSK said...
ரொம்ப அருமையாவும் மனசுக்கு நெருக்கமாகவும் இருக்கு..//
வாவ்!!!நீதான் சரவணா நிஜமா சொல்ற...ரெண்டு பேருக்குமே ஒரே வேவ் லெங்த் ஓடுதோ :-)
//Saravana Kumar MSK said...
//வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்//
மிக சிறப்பு..//
நன்றி சரவணா :-)
//காண்டீபன் said...
//வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்///
அருமையான கவிதை வரிகள்.
காதல் இருமுனை கத்தி.//
நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும் :-)
//திருமூர்த்தி சுப்ரமணியம் said...
வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்
கையை மீறிச் சென்ற
கணங்களைப் போலவும்//
பிடிச்சிருக்கா???
//Divya said...
\\அவசர கோலமாய்
உன் மௌனத்தையும் மிஞ்சி நிற்கிறது
சில செல்லக் கோபங்கள்\\
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் புனிதா:))//
நன்றி திவ்யா :-))
//Divya said...
கவிதை விரைவில் முற்றுபெற........என் வாழ்த்துக்கள்!!!//
:-) ஹைய்யா..மீ த 30th
//gayathri said...
வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்
kavithai varikal arumai//
நன்றி காயத்ரி :-)
//ஸ்ரீமதி said...
நல்லா இருக்கு அக்கா :)))
//வாழவும் விடாமலும் சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன சில அற்ப காரணங்கள்//
Very cute :))//
நன்றி செல்லம் :-))
//நவீன் ப்ரகாஷ் said...
\\அவசர கோலமாய்
உன் மௌனத்தையும் மிஞ்சி நிற்கிறது
சில செல்லக் கோபங்கள்\\
மிக அழகு புனிதா....
ஏனிந்த சோகம் கவிஞரே...?? :)))//
வருகைக்கு நன்றி நவீன்..ம்ம்ம் சோகமெல்லாம் இல்லை..சும்மா டைம் பாஸ் :-))
// து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
கையை மீறிச் சென்ற
கணங்களைப் போலவும்
முகவரியில்லாத தேடலைப் போலவும்
இந்தக் கவிதையும் முற்றுப்பெறவில்லை!!!!
அருமையான வரிகள். ஆழமான அர்த்தம். வலியின் வேதனைப் புரிகிறது.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவனேஸ்!!! :-))
நேத்து கேட்கணும்ன்னு நினைச்சு மறந்தது... நீங்க சிம்பு ரசிகையா??
//ஸ்ரீமதி said...
நேத்து கேட்கணும்ன்னு நினைச்சு மறந்தது... நீங்க சிம்பு ரசிகையா??//
ஏன் இந்த கொலவெறி உனக்கு :-)
சிம்பு எனக்கு வேம்பு :-)
அட நமக்குக்கூட ரைம்ஸ் நல்லா வருதே :-))
எல்லாம் இந்த வயசுக்கேத்த வேவ் லெந்த் தான் .. :)))
சோகமாயிருந்தாலும் நல்ல கவிதை. 'டைம் பாஸ்' என்று தெரிந்ததில் நிம்மதி. சரவணனுடன் ஒற்றிய அலைவரிசை ஆச்சரியம் இல்லை. அவன் தான் காதல் தோல்வி கவிதை மன்னன் ஆயிற்றே.
அனுஜன்யா
ஸ்ரீமதி said...
நேத்து கேட்கணும்ன்னு நினைச்சு மறந்தது... நீங்க சிம்பு ரசிகையா??
intha santhegam eaan ma vanthuchi unaku akka mela
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எல்லாம் இந்த வயசுக்கேத்த வேவ் லெந்த் தான் .. :)))//
வருகைக்கு நன்றிங்க முத்துலெட்சுமி :-)
//அனுஜன்யா said...
சோகமாயிருந்தாலும் நல்ல கவிதை. 'டைம் பாஸ்' என்று தெரிந்ததில் நிம்மதி. சரவணனுடன் ஒற்றிய அலைவரிசை ஆச்சரியம் இல்லை. அவன் தான் காதல் தோல்வி கவிதை மன்னன் ஆயிற்றே.
அனுஜன்யா//
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தமைக்கு நன்றிங்க அனுஜன்யா :-)
//gayathri said...
ஸ்ரீமதி said...
நேத்து கேட்கணும்ன்னு நினைச்சு மறந்தது... நீங்க சிம்பு ரசிகையா??
intha santhegam eaan ma vanthuchi unaku akka mela//
அதானே??
//கைவிரல் நடுங்க கைக்கோர்த்த அந்த மழை நாட்களை மறக்கத் துடித்தும்
ஒவ்வொரு இரவும் தலையணையை
ஈரமாக்கிச் செல்கிறது உந்தனின் நினைவலைகள்//
அழகான வரிகள்.
இனியவள் புனிதா said...
//gayathri said...
ஸ்ரீமதி said...
நேத்து கேட்கணும்ன்னு நினைச்சு மறந்தது... நீங்க சிம்பு ரசிகையா??
intha santhegam eaan ma vanthuchi unaku akka mela//
அதானே??
sri akka enga poitenga sekarama intha questionku answer pannuga
மருத்தில்லா இந்த நோய் இல்லா மாந்தர் மண்ணில் எங்கும் இல்லை, அந்த நோய் ஒரு சுகம். சுகமான சுமைகளாக அதை சுமப்பது தவிர வேறு வழி இல்லை...........
பனிமலர்.
//சரவணனுடன் ஒற்றிய அலைவரிசை ஆச்சரியம் இல்லை. அவன் தான் காதல் தோல்வி கவிதை மன்னன் ஆயிற்றே.
அனுஜன்யா//
அண்ணா நீங்களுமா.. எல்லோரும் ஒரு முடிவோடதான் ரவுண்ட் கட்டுறாங்க.. நான் ஒரு அப்பாவி.. :)
வார்த்தைகளால் விவரிக்கமுடியாத வரிகள்
//நான் said...
வார்த்தைகளால் விவரிக்கமுடியாத வரிகள்//
ஆனாலும் அவை வார்த்தைகள்தானே?
Post a Comment