மழை பிடிக்கும் என்றதால்...
நீ மழையோடு கைக்கோர்க்கும் போதும்,
ரோஜா பிடிக்கும் என்றதால்...
நீ முட்களோடு சண்டையிடும் போதும்,
புத்தகம் பிடிக்கும் என்றவுடன்...
நூலகம் உன் புகுந்த வீடான போதும்,
கனவு பிடிக்கும் என்றதால்...
நீ எனக்காக உறங்கும் போதும்,
உன் இயல்பையெல்லாம் எனக்காக விட்டுக் கொடுக்கும் போதும்...
ஏனோ எனக்குள் எஞ்சியவை...
வெறுமை மட்டுமே... வெறுமை மட்டுமே...!
3 comments:
/உன் இயல்பையெல்லாம் எனக்காக விட்டுக் கொடுக்கும் போதும்...
ஏனோ எனக்குள் எஞ்சியவை...
வெறுமை மட்டுமே... வெறுமை மட்டுமே...!
//
:((
புதுவிதமான கவிதை!
அதில் கடைசியில்
ஏனோ கவலை!
:( இதுதான் நிஜம் சிபி. நன்றி உங்கள் வருகைக்கு..
VERY NICE,,......
Post a Comment