Sunday, January 27, 2008

'கால்' மேல 'கால்' போட்டு பேசுற காலமிது....

அது என்ன 'கால்' மேல 'கால்'ன்னு கேட்கத் தோணும்..அது வேறொன்னுமில்லங்க அழைப்புக்கு மேல அழைப்பு செய்றததான் அப்படி சொன்னேன். சரி இது பத்தி விளக்கமா சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் ப்ளாஷ் பேக்....

நான் ரொம்பவும் பாவம்...சொந்த வீட்ட விட்டு, ஊர விட்டு, இங்கு தலைநகருல்ல கல்வியமைச்சுல வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை...ஆக என்னையும் என் குடும்பத்தையும் இணைக்கிற பாலம் இந்த கைப்பேசித்தான். ஆனாலும் ஒரு தடவை கூப்பிட்டு பேசினாலே கிரெடிட்டெல்லாம் முடிஞ்சிடும்... அதுக்கும் வழி கண்டுப்பிடிச்சு வச்சிருக்கோம்ல..வேற என்ன வீட்டுக்கு போன் பண்ணி "அம்மா எனக்கு போன் பண்ணுங்க"ன்னு அவங்க தலையில கட்டிட வேண்டியதுதான். அவ்வளவு பாசம்....;) அப்புறமா அம்மா திட்டிக்கிட்டே போன் பண்ணுவாங்க. அப்படி அவங்க திட்டும் போது, "ஆமா தம்பிக்கு போன் பண்ணுவீங்க...எனக்கு பண்ண முடியாதான்னு' வம்பு வேற...

நிலைமை இப்படி இருகிறப்ப என் அண்ணன் பொண்ணு புதுசா ஒரு 'பிரிபேட்' வந்திருக்குன்னு சொன்னா, "புதுசா வேற நம்பரா போதுமே அம்மாகிட்ட திட்டு வாங்க முடியாது''ன்னு முதல்ல தயங்குனே...நான் இந்த விஷயத்துல கொஞ்சம் ஓவர்தான்...போன வருஷதுல்ல மட்டும் நாலு தடவ நம்பர மாத்திட்டேன்...

ஆனா அவ சொன்னா ''இந்த 'happy:) prepaid'ல்ல 45 நிமிஷம் வரைக்கும் பேசினா 99 காசு மட்டும்தான்...எந்த 'land line', 'fixed line', 'network'க்கா இருந்தாலும் வெறும் 99 காசு மட்டும்தான்"னு சொன்னதால்ல நாமும் வாங்கிப் பார்ப்போமேன்னு வாங்கிட்டேன். இன்னிக்கு காலையிலதான் பரிசோதிச்சு பார்த்தேன்...

முதல்ல அம்மாவுக்கு ரொம்ப ஆச்சர்யம்...எப்பவும் கூப்பிட்டா ராத்திரி மட்டும்தான் கூப்பிடுவேன்...அவசரம் இல்லன்னா...இன்னிக்கு அதுவும் பகல் நேரத்துல்ல இவ்வளவு நேரம் பேசுறேனேன்னு சந்தேகம் வந்திடுச்சு... அப்புறம் என்ன நம்ம சிதம்பர இரகசியம் உடைஞ்சிடுச்சு. ஆனாலும் அம்மாகிட்ட அவ்வளவு நேரம் போன்ல அரட்டையடிச்சது... மனசுக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுத்துச்சு...

ஆக நான் சொல்ல வர்றது இதுதான், வீட்ட விட்டு தூரமா வந்து வேலை செய்யுற...படிக்கிற பிள்ளைங்க இந்த புதிய தொடர்பு சேவையை வாங்கி பயன்படுத்தலாம்...விலை வெறும் RM5 மட்டும்தான்... இனி புலம்பல் இருக்காது .. பணத்தையும் மிச்சப் படுத்தலாம்.

இந்த சேவையில ஒரு குறையும் இருக்கத்தான் செய்யுது..நாம்ம அழைக்கும் ஒவ்வொரு அழைப்பும் 45நிமிடத்துக்கு குறைவா இருந்தாலும் அதே 99காசுதான் கட்டணமா விதிக்கப்படுது. 1 நிமிடம் பேசினாலும் 99 காசுதான் 45 நிமிடம் பேசினாலும் 99 காசுதான் கட்டணம். ஆக நிறைய பேசுவோம் காசையும் மிச்சப்படுத்துவோம்....

நான் பெற்ற இன்பம் பெறுக இம்மலேசிய மக்கள்.

மேல் விபரங்களுக்கு www.happy.com.my

2 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. இப்படி ஒரு ப்ரீபெயிட் சர்வீஸ் இருக்கிறது எனக்கு தெரியாமல் போச்சே? :-P

நெட்வர்க் கவரேஜ் எப்படி?

இனியவள் புனிதா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆஹா.. இப்படி ஒரு ப்ரீபெயிட் சர்வீஸ் இருக்கிறது எனக்கு தெரியாமல் போச்சே? :-P

நெட்வர்க் கவரேஜ் எப்படி?//

சூப்பர்... ஆனா எனக்குதான் 45 நிமிடம் பேச முடியல...வாய் வலிக்குது ....ஆஆஆ ;))