good bye Pictures, Images and Photos
எப்பொழுது முடியுமென சோம்பித் திரிந்த தருணங்களும்...
எப்பொழுது இது நீளுமென ஏங்கித் தவித்த நாட்களும்... எல்லாமுமாய் சேர்ந்து இதுவரையிலும் கிறுக்கிய படிமங்களை மீள்பார்வையிட... எதுவுமேயில்லை என்ற சுயத் தேடல் அவசிய விடுபடுதலுக்கு தயாராக்கிக் கொண்டது மனதை!!!

விடுபடுதலோ விடைப்பெறுதலோ ஏதாவது புது பரிமாணத்தின் சாத்திய கூறுகள்தான். விடுபடுவதைவிட விடைபெறுதலின் வலி அதிகமென்று யாரும் சொல்லாமலே அறிந்துக் கொண்ட தருணங்கள் பல... சொல்லி மீள்வதல்ல வாழ்க்கை!!!

இந்த மாதத்துக்கான பதிவுகளை அவசரமாய் பதிவிட்டாலும் நிரம்பவில்லை மனது....!! ஆக கோடிட்ட இடத்தை நிரப்புவதைப்போல நாள்காட்டியின் நாட்களை வட்டமிட்டபடி அடுத்த பிரிவுக்கு தயாராகிக் கொள்கிறேன். பிரிவுகள் வலியல்ல அதுவொரு தேடல்...!!!

தேர்வு...விடுமுறை...பயணம்.... இன்னும் பிற சுயத் தேவைக்காக இந்த விடைபெறுதல் அவசியமென தோன்றுகிறது. நற்செய்தியோடு அனைவரையும் மீண்டும் சந்திக்கும் வரை...

பிரியமுடன் ....புனிதா!!!

தொடுவாள் சிவந்த
அதிகாலை நேரம்
ஓடிக் களைத்த கருமேகமொன்று
இடைவழித் திரும்பி
மழை முகிழ்த்துத் செல்கிறது
முளைத் துளிர்க்கத் துடிக்கும்
அல்லி பதியனுக்காய்!!!
Image Hosted by ImageShack.us
நீயெழுதிய நினைவுகளின்
நிழல்...
நான் தொலைத்த
கனவுகளின் நிஜம்...
நம் பிரிவின்
நீளத்தை
வானில் வடித்து
செல்வதேன்...
நொடிக்கொருமுறை
உருவம் மாறும்
மேகங்கள் மழையாய்
கரைந்து உன் நினைவுகளை
ஈரமாக்கி செல்லத்தானோ??

உங்கள் குரல் எட்டாத தூரத்தில்
உங்கள் முகம் காணாத தேசத்தில்
தூரங்கள் பிரித்தாலும்
நேரங்கள் கடந்தாலும்
வார்த்தைகள் தாண்டி வாக்கியமாய்
என்னுள் வாழ்கிறீர்கள்
இமை முடி எடுத்து ஊதுகிறேன்
உங்கள் ஆயுள் வேண்டி!!!