Monday, January 28, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 1

"முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே உருகி நின்றேன்"
“அனு… அனு” பல தடவை அழைத்தும் பதில் வராது போக, மகளின் அறைக்குள் நுழைந்த வளர்மதிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டது காரணம் இன்னமும் அனு தூங்கிக் கொண்டிருந்தாள். பொழுது புலர்ந்து எவ்வளவு நேரமாகிவிட்டது, ஏற்கனவே அனுவுடன் பள்ளியில் ஒன்றாகப் பணிபுரியும் ஜான்சியின் திருமணத்திற்கு செல்ல தாமதமாகிவிட்டது. இவள் என்னவென்றால் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாள். மெல்ல மகளின் அருகே சென்று தொட்டு எழுப்பினார். சில்லென்று ஏதோ கன்னத்தில் பட்டதும் சிலிர்த்தப்படி கண்ணைத் திறந்தாள் அனு.


“என்னடி இது உடம்பு இப்படி நெருப்பா சுடுது” என்று பதற்றத்தோடு மகளை நோக்கினார் வளர்மதி.“ஒன்னுமில்லம்மா லேசான தலைவலித்தான்” என்று புன்னகை செய்ய முயன்று தோற்றவளாய் கண் கலங்கினாள் அனு.“என்னாச்சுமா, கீதாவை கூப்பிடட்டுமா? என்று மகளின் தோளை ஆதரவாய் தொட்டவர், “இரு, கூப்பிடுறேன்” என்றபடி வளர்மதி அவசரமாக கீதாவின் அறைக்கு விரைந்தார். அங்கு, சேலையோடு போராடிக்கொண்டிருந்தவள், வளர்மதியை கண்டதும் சிறிய நாணத்துடன்…“அம்மா கொசுவம் சரியாவே வரமாட்டேங்குது” என்று சிணுங்கியபடி நிமிர்ந்தாள்,“அனு கிளம்பலையா?”“என்னாச்சுன்னு தெரியல கீதா, அனுவுக்கு உடம்பு அனலா சுடுது” என்றார் கவலையோடு.“காய்ச்சலா? இராத்திரியே தலை வலிக்குதுன்னு சொல்லிகிட்டுருந்தா…ம்ம்.. வாங்க பார்க்கலாம்”கீதாவுடன் அனுவின் அறைக்குத் திரும்பியவர், படுக்கையில் அவளை காணாது இருவரும் திகைத்தனர். அதற்குள் குளியலறையில் அரவம் கேட்க அங்கு விரைந்தனர். அனு குளியலறையில் துவண்ட கொடியாய் கிடக்க, பெண்களிருவருமாய் அவளை தாங்கியபடி வந்து படுக்கையில் கிடத்தினர். குளிர்ந்த நீரை முகத்தில் அடித்தும் அவள் காய்ச்சலின் வீரியத்தால் சுயநினைவற்று கிடந்தாள்.“என்ன கீதா இது! எனக்கு ரொம்ப பயமா” அவர் சொல்லி முடிப்பதற்குள்“அம்மா ப்ளிஸ்.. அனுவிற்கு ஒன்னுமில்லை லேசான காய்ச்சல்தான். அவளை முதல்ல நாம கிளினிக்குக் முதலில் கூட்டிப் போவோம்” என்றாள் கீதா தன் கவலையை மறைத்தவாறு.“கல்யாணத்திற்குக் போகலைன்னா பரவாயில்ல இரவு விருந்துக்குப் போய் கொள்ளலாம்”“என்ன கீதா நீ? நான் சமாளிச்சுக்கிறேன்… நீ மட்டுமாவது கல்யாணத்திற்கு கிளம்பு” அனுவை நான் பார்த்து கூட்டிப்போறேன்”“வேண்டாம்மா.. நீங்க இந்த வயசான காலத்துல எதுக்கு கஷ்டப்பனும்… முதலில் அனுவை கிளினிக்கிற்கு அழைச்சுட்டுப் போறேன்” என்று கூறியதோடு நில்லாமல் வீட்டிற்கு அருகில் இருந்த கிளினிக்கிற்கு விரைந்தாள்.பயிற்சி என்று ஒரு வாரமாய் பினாங்கிற்கு அனு சென்று வந்ததிலிருந்தே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறாள். எந்நேரமும் ஏதாவது யோசனையோடு இருக்கிறாள். கண்களில் முன்பிருந்த குழந்தைத்தனத்தை அடியோடு காண முடியவில்லை. இப்பொழுதெல்லாம் ஏதாவது கேட்டால்கூட அளந்துத்தான் பேசுகிறாள். இதுவே முன்பானால் ஒரு அரட்டையரங்கமே நடத்தியிருப்பாள்.“நீ பேசாமல் டீச்சிங்க்குப் பதிலா வக்கிலுக்கு படித்திருக்கலாம்” என்று கீதா கிண்டலடிக்கும் போதெல்லாம் வளர்மதி உதவிக்கு வருவார். ஆனால் இப்போதெல்லாம் ஏதாவது கேட்பதற்கு முன்பே தன் அறையில் முடங்கி விடுபவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் தவித்த நேரத்தில்… இந்த திடீர் காய்ச்சலோடு…அவள் கூறிய செய்தி வளர்மதியை மேலும் உலுக்கியது.“எத்தனை நாளா உள்ளுக்குள்ளேயே புளுங்கியிருப்பா…நான் மட்டும் அன்னிக்கு ஊரிலிருந்து வந்தததும் வராதுமாய் இந்த விஷயத்தைச் சொல்ல வந்தவளை… நான் பாவி… கடவுளே… நான் செஞ்ச பாவம்தான் என் பொண்ணோட” முடிக்காமல் கதறி அழ ஆரம்பித்துவிட்டார் வளர்மதி.கீதாவுக்கு வளர்மதியை தேற்றுவதா…இல்லை காய்ச்சாலால் வாடித் துடிக்கும் தன் உயிர்த்தோழி அனுவை தேற்றுவதா என்று புரியாத தவிப்பு.(தொடரும்)

11 comments:

சதீஷ் குமார் said...

வணக்கம் புனிதா, உங்கள் தமிழ் சேவை தொடர என் வாழ்த்துகள்...

சதீஷ் குமார் said...

ஓலைச்சுவடியின் இணைய இணைப்பை தங்களுடைய வலைத்தளத்தில் இணைத்ததற்கு மிகவும் நன்றி..

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாங்கக்கா... இவ்வளவு நாள கூப்பிட்டு இப்போதான் இந்த பக்கம் வந்திருக்கீங்க.. இனி தூள் கிளப்பலாம். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கதை நடை, மற்றும் வார்த்தைகள் உபயோகம் கதையை படிக்க தூண்டுகிறது. அடுத்த எபிசோட் எப்போக்கா? :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்னும் நிறைய எழுதுங்க. :-)

இனியவள் புனிதா said...

சதீஷ் குமார் said...

//வணக்கம் புனிதா, உங்கள் தமிழ் சேவை தொடர என் வாழ்த்துகள்...//

//வணக்கம் புனிதா, உங்கள் தமிழ் சேவை தொடர என் வாழ்த்துகள்...//

நன்றி....நன்றி....நன்றி

இனியவள் புனிதா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாங்கக்கா... இவ்வளவு நாள கூப்பிட்டு இப்போதான் இந்த பக்கம் வந்திருக்கீங்க.. இனி தூள் கிளப்பலாம். :-)//இன்னும் நிறைய எழுதுங்க. :-)//

மிளகாய் தூளா? மஞ்சள் தூளா? சும்மா தமாசு...

//கதை நடை, மற்றும் வார்த்தைகள் உபயோகம் கதையை படிக்க தூண்டுகிறது. அடுத்த எபிசோட் எப்போக்கா? :-)//

நன்றி...உங்கள் விமர்சனமும் கூட என்னை எழுத தூண்டுது.. இதோ இப்பவே போஸ்ட் பண்ணிடுறேன்:))

//இன்னும் நிறைய எழுதுங்க. :-)//

நிச்சயமா ;)

Anonymous said...

அக்கா கலக்குறீங்க போங்க :)

Baby Pavan said...

அட புதுசா ஒரு அக்கா கிடைச்சிருக்காங்க, வாங்க வாங்க கலக்குங்க...

Baby Pavan said...

நாங்க எல்லாம் ரொம்ப நாட்டியான குட்டி பசங்க , உங்கள அப்ப அப்ப கலாய்போம் கண்டுக்ககூடாது...

நிலா , மைபிரண்ட் அக்கா ரெடியா ஸ்டார்ட் மீஜிக்...

J K said...

கதை நல்லா இருக்கு.