Thursday, September 25, 2008

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பேர் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலையசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசையமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் நிறைந்து நடக்கும் இந்த பயணத்தில் ஏன் இந்த நடுக்கம்?
வானம் திறக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி கலந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கைத்தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னொருத்தி நானிருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடிவதில்லை
உன்னை எனக்குப் பிடிக்கும் அதை சொல்வதில்தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்துக் கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பேர் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
Listen to Raman Thediya Seethai Audio Songs at MusicMazaa.com

(சில வரிகள் நம்மையறியாமலேயே நம் மனதில் பல மின்னல்களாய் தீண்டிச் செல்வதுண்டு...சில வரிகள் தென்றலாய் தழுவிச் செல்வதும் உண்டு... இன்னும் சில வரிகள் நம் வாழ்வின் பிம்பங்களாய் பிரதிபலிப்பதும் உண்டு... இங்கே இந்த பாடல் மின்னலா? மயிலிறகா? இல்லை தென்றலா? கபிலனின் வரிகளும் கல்யாணியின் குரலும் மனதிற்கு ஒத்தடமாய் அமைவது இப்பாடலின் மிகப் பெரிய சிறப்பு. கல்யாணி இராகத்தில் வயலினும் புல்லாங்குழலும் போட்டி போடுவது இந்த பாடலின் உயிர்ப்பு....)

12 comments:

Unknown said...

me the first??

Unknown said...

அக்கா வரிகள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு..!! :)))) பாட்டு இன்னும் கேட்கல..!!

//என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசையமைக்கும்//

:))))))

ஆயில்யன் said...

//என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசையமைக்கும்//

சூப்பர்!

ஆயில்யன் said...

//தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை//

அருமை!

கோபிநாத் said...

படத்தோட விமர்சனம்னு நினைச்சேன்...பாட்டு நல்லா தான் இருக்கு ;)

நாணல் said...

:) நல்ல பாட்டு ங்க..
அடடா இந்த பாட்டு நல்ல இருக்கேனு யோசிக்கறதுக்கு முன்னாடி பாடலோடு வரியை போட்டு அசத்தறீங்க... :)

Anonymous said...

//ஸ்ரீமதி said...
me the first??//

அட... ஆமாம் நீங்கத்தான் முதல்?

Anonymous said...

//ஸ்ரீமதி said...
அக்கா வரிகள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு..!! :)))) பாட்டு இன்னும் கேட்கல..!!

//என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசையமைக்கும்//

:))))))//

கேட்டுவிட்டு சொல்லுங்க!

Anonymous said...

//ஆயில்யன் said...
//என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசையமைக்கும்//

சூப்பர்!//

:-) எனக்கும் இந்த வரி மிகவும் பிடித்திருந்தது!

Anonymous said...

//ஆயில்யன் said...
//தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை//

அருமை!//

:-)))))

Anonymous said...

//கோபிநாத் said...
படத்தோட விமர்சனம்னு நினைச்சேன்...பாட்டு நல்லா தான் இருக்கு ;)//

விமர்சனமும் போட்டாச்சு...படமும் நன்றாக உள்ளது! :-)

Anonymous said...

//நாணல் said...
:) நல்ல பாட்டு ங்க..
அடடா இந்த பாட்டு நல்ல இருக்கேனு யோசிக்கறதுக்கு முன்னாடி பாடலோடு வரியை போட்டு அசத்தறீங்க... :)//

நன்றிங்க நாணல் :-)