Tuesday, September 23, 2008

இது சமாதியல்ல சன்னதி...

இந்த மாதம் ஆரம்பித்ததில் இருந்து எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது! என்ன காரணம் என்று ஆய்வு செய்து நேரத்தை வீணடிக்காமல்... கொஞ்சமாய் கனவு காண்கிறேன்... பழைய பாடல்களில் குறிப்பாக கண்ணதாசனின் வரிகளில் எப்போதுமே ஒரு லயிப்பு உண்டு என்றாலும் இந்த படம் அதிகம் என்னை கவர்ந்துவிட்டது என்று சொல்லலாம். ம்ம்ம் முக்கியமாக வாணிஸ்ரீக்காகவே இந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ரொம்பவும் அழகா இருப்பாங்க.. :-) நான் இரசித்த இப்பாடலை.... காதல் வசனத்தோடு கேட்டு மகிழுங்கள் :-)) நான் பெற்ற இன்பம் பெறுக இந்த ப்ளாக் உலகம்!


மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணேமயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே


கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா

என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில் தேவதை போலே நீயாட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட

மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே

ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர

ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட

வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட

மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே

அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன்

உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்

மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே தயக்கமென்ன இந்த சலனமென்ன.... அன்பு காணிக்கைதான் கண்ணே அன்பு காணிக்கைதான் கண்ணே

12 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கு இந்த பாடல் மிக பிடிக்கும்... சமர்பித்தமைக்கு நன்றி

Unknown said...

ஹை ஆப்பிஸ்ல ஒன்னும் தெரியலியே..!! ;)) பாட்டு கேட்ட நியாபகம் இருக்கு.. வரிகள் நல்லா இருக்கு..!! :))))))

Anonymous said...

வசந்த மாளிகை வசந்த நினைவலைகளைக் அள்ளித்தருகிறது.
புனிதா உங்கள் சேவையை மெச்சுகிறேன்.

ஆயில்யன் said...

//உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்//


அருமையான வரிகள்

அழகான பாடல் :)

கோபிநாத் said...

அருமையான பாடல்...;)

நாணல் said...

:) அருமையான பாடல்...

Anonymous said...

//VIKNESHWARAN said...
எனக்கு இந்த பாடல் மிக பிடிக்கும்... சமர்பித்தமைக்கு நன்றி//

நன்றி விக்கி!

Anonymous said...

//ஸ்ரீமதி said...
ஹை ஆப்பிஸ்ல ஒன்னும் தெரியலியே..!! ;)) பாட்டு கேட்ட நியாபகம் இருக்கு.. வரிகள் நல்லா இருக்கு..!! :))))))//

:-)

Anonymous said...

//GGS said...
வசந்த மாளிகை வசந்த நினைவலைகளைக் அள்ளித்தருகிறது.
புனிதா உங்கள் சேவையை மெச்சுகிறேன்.//

நன்றி சூர்யா அண்ணா!

Anonymous said...

//ஆயில்யன் said...
//உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்//


அருமையான வரிகள்

அழகான பாடல் :)//

வாங்க ஆயில்யன். நிச்சயமாக அருமையான வரிகள்தான்... கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமேதான் !

Anonymous said...

//கோபிநாத் said...
அருமையான பாடல்...;)//

நன்றி கோபி!

Anonymous said...

///நாணல் said...
:) அருமையான பாடல்...//

வாங்க நாணல் நலமா... பாடல் பிடிச்சிருக்கா...:-)