Sunday, September 21, 2008

துடிக்கின்ற இதயத்தின் ஓசைகள் நீயே!

இந்த துக்கம் எனக்குப் பிடித்தது
காரணம் இது நீ தந்தது!!!

காதல் .... இந்த மூன்றெழுத்தின் மாயம்தான் என்ன? எந்த மொழியானாலும், இனமானாலும் காதல் என்றும் இனிமைதான், அழகானதுதான். காதல் கவிதை போன்றது. எங்கு எப்படி உருவானது என்று தெரியாமலேயே வெளிப்படும் தன்மை இந்த காதலுக்கு மட்டும்தான் உண்டு என்று சொன்னால் மிகையாகாது. மிகவும் இயல்பாக யாருக்கும் தெரியாமல் மலரும் இந்த காதல் கட்டாயத்தால் மலர்வதில்லை. காதலர்கள் மறைந்தாலும் காதல்கள் மரிப்பதில்லை. நூற்றாண்டுகள் தாண்டி வாழும் இந்த காதல் எல்லோருக்கும் வருவதுண்டு. ஆனால் எப்பொழுது யார் மீது காதல் வரும் என்பது மட்டும் சொல்லிவிட முடியவில்லை.

காதல் இதய சத்திரத்தில்
தங்கும் வழிப்போக்கன்

என்று ஒரு கவிஞர் காதலின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். காதலை அழகின் தாகம் என்று கூறும் கவிஞர்கள்தான் இங்கு அதிகம். அண்மையில் காதலை பற்றிய அழகிய காதல் கவிதையை படிக்க நேர்ந்தது.

"நானோ அவளுக்கு தினந்தோறும் கடிதம் எழுதுகிறேன்" என்று சாதாரணமாகத்தான் கவிஞர் தொடங்குகிறார். அட இதில் அப்படி என்ன அதிசயமிருக்கப் போகிறது என்று முதலில் நினைக்க தோன்றியது. பூமிக்கு வியர்க்கும் போதெல்லாம் காதல் கடிதங்கள்தான் விசிறிகளாகின்றன... பழனிபாரதி சொன்னது நினைவுக்கு வர அக்கவிதையை மேலே வாசிக்கத் தொடங்கினேன்.

"பேனா இல்லை
காகிதம் இல்லை
மை இல்லை "

இப்படியும் கவிதையெழுத முடியுமா? என்ற ஆராய்ச்சியை என்னுள் ஒளித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தேன்.

"உன் கண்கள் என் கண்கள் இல்லையா?
உன் கண்ணால் கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்."

அட எவ்வளவு அழகாக கவிஞர் கேட்கிறார்.

"கனவுகள் உறங்கும் பூக்கள்" என்று காதலை ஆராதிக்கும் மற்றுமொரு கவிதை

"இரவு அழகானது
நிலவு அழகானது
எல்லாவற்றையும் விட
நீ அழகானவள்
ஆனால் உன்னை விடவும்
அழகானது உன் காதல்"

காதலை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் தேவதையாகிறாள் என்பது கவிஞர்களின் வாதம்.

வானத்திலிருந்துதான் தேவதைகள் வருமாமே...
நீ மட்டும் எப்படி
எதிர்வீட்டிலிருந்து வருகிறாய்...

என்று கேட்கும் தபு சங்கர், மேலும்

தேவதைகளுக்கு சிறகுகள்
இருக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன்...
பொய் சொல்வோர் நிறைய இருந்திருக்கிறார்கள் போலும்
நீ இங்கே சிறகில்லாமல் இருப்பதை
யாரும் பார்க்கவில்லையோ என்று காதல் ஆய்வில் இறங்கி விட்டார். கவிஞர்கள் காதல், கண்களை உதடுகளாக்கி பேசும் இதயத்தின் மொழி என்று கூறுகின்றனர்.

ஆனால் வேறொரு கவிஞர் காதலை இப்படி வர்ணிக்கிறார்? இல்லை போர் செய்கிறார்.

நான் தான் ஹிரோஷிமா
அவள்தான் நாகாசாகி
முதல் துளி முத்தத்துளி
மறுதுளி இரத்தத்துளியாக
மூன்றாம் உலகப் போரின்
முதல் பலியாவோம்

சங்க இலக்கியத்தில் காதலும் வீரமும் தமிழர்தம் வாழ்வின் இரு கண்கள் எனக் கருதப்பட்டன. திருக்குறளில் ஒரு காட்சி

கண்ணோடு கண் இணை நோக்கு ஒக்கின்
வாய்ச் சொற்கள் என்ன பயனும் இலஎன்று காதலர்களின் சங்கமத்தை விளக்குவார் வள்ளுவர். கண்கள் சந்தித்து சம்மதம் தெரிவித்து சங்கமமாகிவிட்டப்பின் இனி பேச்சு எதற்கு... கண்களின் வார்த்தைகள் காதல் தேசத்தின் மொழி. கண்கள் தன் இதயத்தின் அந்தரங்கத்தை இரகசியமாய் உணர்த்தக் கூடியது. கண்ணுக்கு மை தீட்டாமல் அமர்ந்திருக்கிறாள் தலைவி, காரணம் கேட்கும் தோழியிடம் மையெழுதும்போது இமைகள் மூடி மைத்தீட்ட வேண்டும், அப்போது அவர் மறைந்து போவாரே... அதை என்னால் தாங்க முடியாது என்று மருகுகிறாள் தலைவி. ஆகவே தலைவனைத் தன் உள்ளத்தில் வைத்து மைத் தீட்டாமல் கண்ணுக்குள்ளேயே போற்றுகிறாள்.
இந்த அழகிய நிகழ்வினை கு.மா பாலசுப்ரமணியம் இப்படி கேட்கிறார்,

கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
காத்திருப்பேன் என்று தெரியாதோ?
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

காத்திருப்பு காதல் நியமனங்களின் முதன்மையானது. இதயம் பேச மறுக்கும் தருணங்களில் கண்கள் பேசிவிடுகின்றன. சொல்லித் தெரிவதுதான் காதலா? சொல்லாமலே காதல் சொல்வதுதான் காதலின் உன்னதம். தபு சங்கரும் இதைதான் இப்படி பகர்கின்றார்...

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்...
இதழ் சொல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்...

காதல் பற்றி பாடுவதில் கவியரசு கண்ணதாசனுக்கு நிகர் அவரேயன்றி வேறொருவரையும் அறிகிலேன் நான். காதலின் எல்லா பரிமாணங்களையும் சொல்லிவிட்டவர் அவர். உலகின் ஏதாவது ஒரு மூலையில் இந்த நிமிடம் வரை அவருடைய காதல் பாடல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

காதலைப் பற்றி எழுத தோன்றியதும், அறிவுமதியின் இந்த கவிதை என் நினைவில் வட்டமடித்து சிரிக்கிறது.

உன்னுடன் சேர்ந்து
நடக்க ஆரம்பித்தப் பிறகுதான்
சாலை ஓர மரங்களிலிருந்து
உதிரும் பூக்களின் மௌனத்திலும்
இசை கேட்க ஆரம்பித்தேன் நான்....

காமச் சிறகுகள் முளைத்த காதலை காட்டிலும் இதயகுழி வரைச் சென்று மனுஷ வாசனை பூசி மகிழும் நட்பு மேலானவை என்று அறிவுமதியின் 'நட்புக்காலம்' குட்டு வைத்துச் செல்வதை இந்நேரத்தில் தவிர்க்க இயலவில்லை.

காதல்.... தோல்வி... துயரம்...பிரிவு... துரோகம்...வலி... என்று எத்தனை பரிமாணங்கள் எடுத்தால் என்ன... வாழும் காலமுள்ளவரை இந்த காதலும் வாழும்.!!!

பி.கு: இது ஒரு மீள் பதிவு

34 comments:

GGS said...

காதல், கவிதையென் பன்முக திறனாய்வு.
படித்து சுவைத்தேன்.
நன்றி புனிதா
அன்புடன்
-சூர்யா

சென்ஷி said...

நல்லாருக்குங்க.. கவிதைகளோடு கருத்துக்களையும் தூவி அழகா கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...

காதலைப் பத்தி எழுதறதுல இருக்கற சுகத்தை விட படிக்கறதுல சந்தோஷம் அதிகம்.. அதிலயும் இத்தனை காதல் கவிதைகளை அழகா எடுத்துக்கொடுத்து அதுக்கு உங்க கருத்தும் கொடுத்துருக்கறது ரொம்ப சந்தோஷம். நம்பவே முடியல இது மீள் பதிவா :))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
காதலைப் பத்தி எழுதறதுல இருக்கற சுகத்தை விட படிக்கறதுல சந்தோஷம் அதிகம்.. அதிலயும் இத்தனை காதல் கவிதைகளை அழகா எடுத்துக்கொடுத்து அதுக்கு உங்க கருத்தும் கொடுத்துருக்கறது ரொம்ப சந்தோஷம். நம்பவே முடியல இது மீள் பதிவா :))
//
\
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//சென்ஷி said...
நல்லாருக்குங்க.. கவிதைகளோடு கருத்துக்களையும் தூவி அழகா கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள் :)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்!!!

ரசிகன் said...

woow.. Excelent work. nice poet lines. rombavey rasithen.Thanks.

Aruna said...

மிக அழகிய தீர்க்கமான ஆராய்ச்சி.....
அன்புடன் அருணா

இனியவள் புனிதா said...

//GGS said...
காதல், கவிதையென் பன்முக திறனாய்வு.
படித்து சுவைத்தேன்.
நன்றி புனிதா
அன்புடன்
-சூர்யா//

நன்றி சூர்யா பின்னூட்டத்திற்கு!

இனியவள் புனிதா said...

//சென்ஷி said...
நல்லாருக்குங்க.. கவிதைகளோடு கருத்துக்களையும் தூவி அழகா கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள் :)//

வாழ்த்துக்கு நன்றி சென்ஷி!

இனியவள் புனிதா said...

//சென்ஷி said...
காதலைப் பத்தி எழுதறதுல இருக்கற சுகத்தை விட படிக்கறதுல சந்தோஷம் அதிகம்.. அதிலயும் இத்தனை காதல் கவிதைகளை அழகா எடுத்துக்கொடுத்து அதுக்கு உங்க கருத்தும் கொடுத்துருக்கறது ரொம்ப சந்தோஷம். நம்பவே முடியல இது மீள் பதிவா :))//

தங்களின் கருத்துக்கு நன்றிங்க... எனக்கும் மகிழ்வே...மீள்பதிவேதான் சிற் சில மாற்றங்களோடு!

இனியவள் புனிதா said...

@ ஆயில்யன்

பின்னூட்டத்திற்கு நன்றிங்க :-)

இனியவள் புனிதா said...

//ரசிகன் said...
woow.. Excelent work. nice poet lines. rombavey rasithen.Thanks.//

நன்றி ரசிகன்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்க பின்னூட்டத்தை காண்பதில் மிக்க மகிழ்ச்சி!

இனியவள் புனிதா said...

//Aruna said...
மிக அழகிய தீர்க்கமான ஆராய்ச்சி.....
அன்புடன் அருணா//

நன்றிங்க அருணா! அடிக்கடி வாங்க!

நாணல் said...

சென்ஷி said...
//காதலைப் பத்தி எழுதறதுல இருக்கற சுகத்தை விட படிக்கறதுல சந்தோஷம் அதிகம்.. அதிலயும் இத்தனை காதல் கவிதைகளை அழகா எடுத்துக்கொடுத்து அதுக்கு உங்க கருத்தும் கொடுத்துருக்கறது ரொம்ப சந்தோஷம். //

repeatuu... :)

நாணல் said...

//காதல் .... இந்த மூன்றெழுத்தின் மாயம்தான் என்ன? எந்த மொழியானாலும், இனமானாலும் காதல் என்றும் இனிமைதான், அழகானதுதான். காதல் கவிதை போன்றது. எங்கு எப்படி உருவானது என்று தெரியாமலேயே வெளிப்படும் தன்மை இந்த காதலுக்கு மட்டும்தான் உண்டு என்று சொன்னால் மிகையாகாது. மிகவும் இயல்பாக யாருக்கும் தெரியாமல் மலரும் இந்த காதல் கட்டாயத்தால் மலர்வதில்லை. காதலர்கள் மறைந்தாலும் காதல்கள் மரிப்பதில்லை. நூற்றாண்டுகள் தாண்டி வாழும் இந்த காதல் எல்லோருக்கும் வருவதுண்டு. ஆனால் எப்பொழுது யார் மீது காதல் வரும் என்பது மட்டும் சொல்லிவிட முடியவில்லை.//

காதலைப் பற்றி PHD ஏதாவது பண்றீங்களா புனிதா... ;)அதிலும் இந்த வரி அசத்தல் "காதலர்கள் மறைந்தாலும் காதல்கள் மரிப்பதில்லை."

நாணல் said...

//"உன் கண்கள் என் கண்கள் இல்லையா?
உன் கண்ணால் கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்."//

நல்லா இருக்கே..

//காதலை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் தேவதையாகிறாள் என்பது கவிஞர்களின் வாதம்.//

ஓ ஓ அப்படியா...

ஸ்ரீமதி said...

//நாணல் said...
சென்ஷி said...
//காதலைப் பத்தி எழுதறதுல இருக்கற சுகத்தை விட படிக்கறதுல சந்தோஷம் அதிகம்.. அதிலயும் இத்தனை காதல் கவிதைகளை அழகா எடுத்துக்கொடுத்து அதுக்கு உங்க கருத்தும் கொடுத்துருக்கறது ரொம்ப சந்தோஷம். //

repeatuu... :)//

என் அண்ணா போட்ட கமெண்ட்க்கு அக்கா ரிப்பீட்டு போட..!! அதுக்கு இந்த தங்கையும் போட்டுக்கறேன் ரிப்பீட்டு..!! ;)) (அக்கா அடிக்க வர மாட்டீங்களே?? ;))

ஸ்ரீமதி said...

//காதலை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் தேவதையாகிறாள் என்பது கவிஞர்களின் வாதம்//

அப்ப நான் ராட்சசியா????? ;))

ஸ்ரீமதி said...

//வானத்திலிருந்துதான் தேவதைகள் வருமாமே...
நீ மட்டும் எப்படி
எதிர்வீட்டிலிருந்து வருகிறாய்...//

வாசல் வழியாதான்..!! :P

ஸ்ரீமதி said...

//நான் தான் ஹிரோஷிமா
அவள்தான் நாகாசாகி
முதல் துளி முத்தத்துளி
மறுதுளி இரத்தத்துளியாக
மூன்றாம் உலகப் போரின்
முதல் பலியாவோம்//

என்னது ஆரம்பிக்கும் போதே பலியா?? நான் வரலப்பா இந்த வெளாட்டுக்கு..!! ;))

ஸ்ரீமதி said...

'கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒன்டொளிய கண்ணே உள.'

இந்த ஒரு குறள் தான் தெரியும்..!! ;))

ஸ்ரீமதி said...

//கண்ணுக்கு மை தீட்டாமல் அமர்ந்திருக்கிறாள் தலைவி, காரணம் கேட்கும் தோழியிடம் மையெழுதும்போது இமைகள் மூடி மைத்தீட்ட வேண்டும், அப்போது அவர் மறைந்து போவாரே... அதை என்னால் தாங்க முடியாது என்று மருகுகிறாள் தலைவி. ஆகவே தலைவனைத் தன் உள்ளத்தில் வைத்து மைத் தீட்டாமல் கண்ணுக்குள்ளேயே போற்றுகிறாள்.//

'கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து'.

இனியவள் புனிதா said...

@ஸ்ரீமதி

தங்கச்சி நீ புகுந்து விளையாடுமா!!

இனியவள் புனிதா said...

@ நாணல்

//காதலைப் பற்றி PHD ஏதாவது பண்றீங்களா புனிதா... ;)அதிலும் இந்த வரி அசத்தல் "காதலர்கள் மறைந்தாலும் காதல்கள் மரிப்பதில்லை."//

எங்கே அட்மிஷன்தான் கிடைக்க மாட்டேங்குது!

இனியவள் புனிதா said...

@ ஸ்ரீமதி
//என் அண்ணா போட்ட கமெண்ட்க்கு அக்கா ரிப்பீட்டு போட..!! அதுக்கு இந்த தங்கையும் போட்டுக்கறேன் ரிப்பீட்டு..!! ;)) (அக்கா அடிக்க வர மாட்டீங்களே?? ;))//

ச்ச்சே... :-)

இனியவள் புனிதா said...

@ ஸ்ரீமதி
//அப்ப நான் ராட்சசியா????? ;))//

ம்ம்ம் அழகான ராட்சசி

//வாசல் வழியாதான்..!! :P//

எவ்வளவு பெரிய ஆராய்ச்சி :-P

//என்னது ஆரம்பிக்கும் போதே பலியா?? நான் வரலப்பா இந்த வெளாட்டுக்கு..!! ;))//

:-))) அந்த பயம்!!!

//'கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒன்டொளிய கண்ணே உள.'

இந்த ஒரு குறள் தான் தெரியும்..!! ;))//

நம்பிட்டேன் :-)

//'கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து'.//

அப்போ இது ? :-)

கோபிநாத் said...

அட அட சும்மா சர சரன்னு சரவெடி மாதிரி இருக்கு பதிவு....அட்டகாசம் ;))

கலக்கிட்டிங்க புனிதா ;)

\\காமச் சிறகுகள் முளைத்த காதலை காட்டிலும் இதயகுழி வரைச் சென்று மனுஷ வாசனை பூசி மகிழும் நட்பு மேலானவை என்று அறிவுமதியின் 'நட்புக்காலம்' குட்டு வைத்துச் செல்வதை இந்நேரத்தில் தவிர்க்க இயலவில்லை. \\

சிரிப்பு தான் வருது...;)))))

ஸ்ரீமதி said...

//இனியவள் புனிதா said...
@ ஸ்ரீமதி
//அப்ப நான் ராட்சசியா????? ;))//

ம்ம்ம் அழகான ராட்சசி//

அச்சச்சோ அக்கா எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது..!! ;))

////வாசல் வழியாதான்..!! :P//

எவ்வளவு பெரிய ஆராய்ச்சி :-P//

நன்றி அக்கா..!! :P

////என்னது ஆரம்பிக்கும் போதே பலியா?? நான் வரலப்பா இந்த வெளாட்டுக்கு..!! ;))//

:-))) அந்த பயம்!!!//

எப்பவும் இருக்கு..!! ;))

////'கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒன்டொளிய கண்ணே உள.'

இந்த ஒரு குறள் தான் தெரியும்..!! ;))//

நம்பிட்டேன் :-)

//'கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து'.//

அப்போ இது ? :-)//

இதுவும் தெரியும்னு வெச்சிக்கலாம்..!! :P

ஸ்ரீமதி said...

//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி

தங்கச்சி நீ புகுந்து விளையாடுமா!!//

அதுக்குள்ள 'நான் இங்கு இருக்கிறேன்னு' நீங்க சொன்னதுனால.. நீங்க அங்க தான் இருக்கீங்களோ?? இங்க இல்லையோனு?? நினைச்சு நான் அங்க போயிட்டேன்..!! ;))

இனியவள் புனிதா said...

//கோபிநாத் said...
அட அட சும்மா சர சரன்னு சரவெடி மாதிரி இருக்கு பதிவு....அட்டகாசம் ;))

கலக்கிட்டிங்க புனிதா ;)//

வாங்க கோபி...
எங்க ஊரில் சரவெடிக்கு தடைவிதிக்கப்பட்டிருக்குங்க :-P
கருத்துக்கு நன்றி :-)

\\காமச் சிறகுகள் முளைத்த காதலை காட்டிலும் இதயகுழி வரைச் சென்று மனுஷ வாசனை பூசி மகிழும் நட்பு மேலானவை என்று அறிவுமதியின் 'நட்புக்காலம்' குட்டு வைத்துச் செல்வதை இந்நேரத்தில் தவிர்க்க இயலவில்லை. \\

சிரிப்பு தான் வருது...;)))))//

உங்க சிரிப்புக்குத்தான் அர்த்தம் புரியல :-)

இனியவள் புனிதா said...

@ஸ்ரீமதி
//அச்சச்சோ அக்கா எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது..!! ;))//

:-)


//நன்றி அக்கா..!! :P //

My pleasure!

//எப்பவும் இருக்கு..!! ;))//

இதையும் நம்பிட்டேன் :-P

//இதுவும் தெரியும்னு வெச்சிக்கலாம்..!! :P//

அது சரி ;-P (எல்லாம் இன்பமா இருக்கே என்ன விசயம்)

இனியவள் புனிதா said...

@ஸ்ரீமதி
//அதுக்குள்ள 'நான் இங்கு இருக்கிறேன்னு' நீங்க சொன்னதுனால.. நீங்க அங்க தான் இருக்கீங்களோ?? இங்க இல்லையோனு?? நினைச்சு நான் அங்க போயிட்டேன்..!! ;))//

எனக்கு அது தெரியாமல் போய்விட்டதே! :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

super sister. :-)

இனியவள் புனிதா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
super sister. :-)

நன்றி அனு... நீண்ட நாளுக்குப் பிறகு தங்களுடைய வருகை உவகை அளிக்கிறது!!!