விரதமென்று அழிச்சாட்டியம்
செய்யும் என்னை உன்
விழியாலேயேத் தின்னும்
மாயம் என்னவோ?
**********************
உன் விழியில் விழ
அஞ்சி அண்ணனின்
பின் ஒளிந்ததைக்
கண்டுப்பிடித்து
என் எதிர் அமர்ந்தாயே
எவ்வளவு தைரியமடா உனக்கு?
***********************
தன்னந்தனியாய் உன்னிடம்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தைகள்
மீண்டும் வாய்க்குமா?
***********************
கைப்பேசி எண்களின்
பறிமாறலில்
நம் இதயமும்
தடமாறியதை அறிவாயோ?
***********************
அதிகமாய்ப் பேசுவதில்லை
அதீதமாய் நான்
சொன்னப் பொய் இது
மட்டும்தான்டா!
***********************
இதழ்கள் மறுத்தாலும்
இதயம் கட்டிக் கொள்ள
துடிக்கும் அவஸ்தைகள்
போதுமடா!
19 comments:
//அதிகமாய் பேசுவதில்லை
அதீதமாய் நான்
சொன்ன பொய் இது
மட்டும்தான்டா!//
சூப்பரூ :))
""தன்னந்தனியாய் உன்னிடம்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தைகள்
மீண்டும் வாய்க்குமா?"""
காதல் சுகமான சுமை என்று எங்கோ படித்தேன். இங்கே அது ஒரு சுகமான வேண்டி வேண்டி அனுபவிக்கும் அவஸ்தை என்று புரிகிறது.
""விரதமென்று அழிச்சாட்டியம்
செய்யும் என்னை உன்
விழியாலேயே தின்னும்
மாயம் என்னவோ?"
அய்யோ!! என்னே ஒரு கற்பனை, அனுபவித்து எழுதுகிறீர்கள்!!! காதலிக்காதவன் கூட, ஒ! இது இத்தனை சுகமானதா என்று ஒரு முறை முயன்று பார்க்கவைக்கும் வரிகள்!!
//விரதமென்று அழிச்சாட்டியம்
செய்யும் என்னை உன்
விழியாலேயே தின்னும்
மாயம் என்னவோ?//
:)))
//உன் விழியில் விழ
அஞ்சி அண்ணனின்
பின் ஒளிந்ததை
கண்டுப்பிடித்து
என் எதிர் அமர்ந்தாயே
எவ்வளவு தைரியமடா உனக்கு?//
எல்லாம் நீ கொடுத்த தைரியம் தான் என்று பதில் வந்ததோ.. ?
//அதிகமாய் பேசுவதில்லை
அதீதமாய் நான்
சொன்ன பொய் இது
மட்டும்தான்டா!//
:) கலக்கல்...
//விரதமென்று அழிச்சாட்டியம்
செய்யும் என்னை உன்
விழியாலேயே தின்னும்
மாயம் என்னவோ?//
:)))
//உன் விழியில் விழ
அஞ்சி அண்ணனின்
பின் ஒளிந்ததை
கண்டுப்பிடித்து
என் எதிர் அமர்ந்தாயே
எவ்வளவு தைரியமடா உனக்கு?//
அதானே?? எவ்ளோ தைரியம் பாருங்களேன்..!! ;))
//தன்னந்தனியாய் உன்னிடம்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தைகள்
மீண்டும் வாய்க்குமா?//
அவஸ்தைய கேட்டு வாங்கற ஒரே ஆள் நீங்க தான்..!! ;))
//கைப்பேசி எண்களின்
பறிமாறலில்
நம் இதயமும்
தடமாறியதை அறிவாயோ?//
அடடா இனிமே யாருக்காவது நம்பர் கொடுக்கும் போது ஜாக்ரதையா இருக்கணும் போல..!! :P
//அதிகமாய் பேசுவதில்லை
அதீதமாய் நான்
சொன்ன பொய் இது
மட்டும்தான்டா!//
எது??
//இதழ்கள் மறுத்தாலும்
இதயம் கட்டிக் கொள்ள
துடிக்கும் அவஸ்தைகள்
போதுமடா!//
:)))No other go..!! ;))
1,4...சூப்பருங்க ;)
//இதழ்கள் மறுத்தாலும்
இதயம் கட்டிக் கொள்ள
துடிக்கும் அவஸ்தைகள்
போதுமடா!//
:)) கலக்கல்...
ஆயில்யன் said...
//அதிகமாய் பேசுவதில்லை
அதீதமாய் நான்
சொன்ன பொய் இது
மட்டும்தான்டா!//
சூப்பரூ :))
வாங்க ஆயில்யன்... நன்றிங்க!
@ Maddy
//காதல் சுகமான சுமை என்று எங்கோ படித்தேன். இங்கே அது ஒரு சுகமான வேண்டி வேண்டி அனுபவிக்கும் அவஸ்தை என்று புரிகிறது.//
ஆமாவா... எனக்கு அந்த அனுபவம் இல்லைங்க :-P
//அய்யோ!! என்னே ஒரு கற்பனை, அனுபவித்து எழுதுகிறீர்கள்!!! காதலிக்காதவன் கூட, ஒ! இது இத்தனை சுகமானதா என்று ஒரு முறை முயன்று பார்க்கவைக்கும் வரிகள்!!//
ஐயோ அண்ணா... அனுபவமில்லைங்க...அது ச்சும்ம்மாமா... ஆனால் இதில் இவ்வளவு அர்த்தம் இருப்பது நீங்க சொல்லித்தான் புரியுது. ஆனால் எனக்கு என்னவோ நான் சொல்ல நினைத்தது மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது. :-)
@நாணல்
;-)
இது கற்பனையென்பதால் பதிலேதும் வராதுங்க!
@ஸ்ரீமதி
:)))
;-)
//அதானே?? எவ்ளோ தைரியம் பாருங்களேன்..!! ;))//
:-)
//அவஸ்தைய கேட்டு வாங்கற ஒரே ஆள் நீங்க தான்..!! ;))//
வேலைவெட்டி எதுவுமில்ல அதான் இப்படி ச்சும்மா டைம் பாஸ்...
//அடடா இனிமே யாருக்காவது நம்பர் கொடுக்கும் போது ஜாக்ரதையா இருக்கணும் போல..!! :P//
கண்டிப்பா...:-)
//எது??//
அது!! :-)
//:)))No other go..!! ;))//
:-P
//கோபிநாத் said...
1,4...சூப்பருங்க ;)//
நன்றி கோபி!
//நாணல் said...
//இதழ்கள் மறுத்தாலும்
இதயம் கட்டிக் கொள்ள
துடிக்கும் அவஸ்தைகள்
போதுமடா!//
:)) கலக்கல்...//
நன்றி நாணல்!!!
//இனியவள் புனிதா said...
ஐயோ அண்ணா... அனுபவமில்லைங்க...அது ச்சும்ம்மாமா... ஆனால் இதில் இவ்வளவு அர்த்தம் இருப்பது நீங்க சொல்லித்தான் புரியுது. ஆனால் எனக்கு என்னவோ நான் சொல்ல நினைத்தது மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.//
யக்கா சொல்றதெல்லாம் சொல்லிட்டு இது என்ன சின்ன புள்ளத் தனமா?? ;))
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
ஐயோ அண்ணா... அனுபவமில்லைங்க...அது ச்சும்ம்மாமா... ஆனால் இதில் இவ்வளவு அர்த்தம் இருப்பது நீங்க சொல்லித்தான் புரியுது. ஆனால் எனக்கு என்னவோ நான் சொல்ல நினைத்தது மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.//
யக்கா சொல்றதெல்லாம் சொல்லிட்டு இது என்ன சின்ன புள்ளத் தனமா?? ;))//
நான் சின்னப்புள்ளத்தான் :-P வாழ்க்கைப்பயணம் விக்கிகிட்ட கேட்டுப் பாருங்க :-P
புனிதா....
காதலோடு இவ்வளவு அழகான கவிதைகள் காத்திருக்கின்றன.. !!!
//விரதமென்று அழிச்சாட்டியம்
செய்யும் என்னை உன்
விழியாலேயே தின்னும்
மாயம் என்னவோ?//
உணர்வுகளும் வரிகளும்
வசீகரிக்கின்றன... :)))
//தன்னந்தனியாய் உன்னிடம்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தைகள்
மீண்டும் வாய்க்குமா? //
:))) சுகமான அவஸ்தைகள்... அழகோ அழகு...
நவீன் ப்ரகாஷ் said...
புனிதா....
காதலோடு இவ்வளவு அழகான கவிதைகள் காத்திருக்கின்றன.. !!!
//விரதமென்று அழிச்சாட்டியம்
செய்யும் என்னை உன்
விழியாலேயே தின்னும்
மாயம் என்னவோ?//
உணர்வுகளும் வரிகளும்
வசீகரிக்கின்றன... :)))
//தன்னந்தனியாய் உன்னிடம்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தைகள்
மீண்டும் வாய்க்குமா? //
:))) சுகமான அவஸ்தைகள்... அழகோ அழகு...//
வாங்க நவீன் கருத்துக்கு மிக்க நன்றி... உங்களுடைய சிஷ்யை இல்லையா அதான் இப்படி :-P
////தன்னந்தனியாய் உன்னிடம்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தைகள்
மீண்டும் வாய்க்குமா?//
அவஸ்தைய கேட்டு வாங்கற ஒரே ஆள் நீங்க தான்..!! ;))//
சூப்பர் கமெண்ட் :))
கவிதையும் நல்லாருக்குது
//சென்ஷி said...
////தன்னந்தனியாய் உன்னிடம்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தைகள்
மீண்டும் வாய்க்குமா?//
அவஸ்தைய கேட்டு வாங்கற ஒரே ஆள் நீங்க தான்..!! ;))//
சூப்பர் கமெண்ட் :))
கவிதையும் நல்லாருக்குது//
:-) நன்றி !!!!
Post a Comment