
படம் : பொய் சொல்லப் போறோம்
பிண்ணனி குரல் : ஷ்ரேயா கோஷல்
ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல்
பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால்கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு
ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
இமைகள் ரெண்டும் மூடும்போதும் உன்னை யோசிக்க
என் இதயம் இன்னும் புத்தகம் நடுவே நாளா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு
ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
போ போ போ என் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
காற்றைக் கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா
கடிதம் போட்டு கடலைத் தீண்டி நதிகள் வருகிறதா
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு
ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால்கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு
ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
8 comments:
பாட்டா?? நான்கூட நீங்க நிஜமா எதோ சொல்றீங்கன்னு நினைச்சு வந்தேன் அக்கா..!! :))
ஐயய்யோ.. உங்க காதல் கதை சொல்லுவீங்கன்னு வந்து பார்த்தா பொய் சொல்லிட்டீங்க.. அட.. அதானே படத்தோட பேரு. ;-)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாங்கள் வெளியிட்டுள்ள எலியன்(mouse) பிள்ளையார் படத்தைத் தவிர்த்திருக்கலாம். கடவுளராக மதிக்கப்படுகின்ற ஒன்றை அளவுக்கு அதிகமான அன்பின் காரணமாக அல்லது பத்தியின் காரணமாக அல்லது அலட்டிக்கொள்ளாத பண்பின் காரணமாக இழுவுபடுத்துவதை வரவேற்கக்கூடாது. இது அன்பான வேண்டுகோள்தான் இனியவள் புனிதா.
//Sri said...
பாட்டா?? நான்கூட நீங்க நிஜமா எதோ சொல்றீங்கன்னு நினைச்சு வந்தேன் அக்கா..!! :))//
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஐயய்யோ.. உங்க காதல் கதை சொல்லுவீங்கன்னு வந்து பார்த்தா பொய் சொல்லிட்டீங்க.. அட.. அதானே படத்தோட பேரு. ;-)//
:-) பாட்டு பிடிச்சிருக்கான்னு இன்னமும் சொல்லவே இல்லை?
//ஆய்தன் said...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாங்கள் வெளியிட்டுள்ள எலியன்(mouse) பிள்ளையார் படத்தைத் தவிர்த்திருக்கலாம். கடவுளராக மதிக்கப்படுகின்ற ஒன்றை அளவுக்கு அதிகமான அன்பின் காரணமாக அல்லது பத்தியின் காரணமாக அல்லது அலட்டிக்கொள்ளாத பண்பின் காரணமாக இழுவுபடுத்துவதை வரவேற்கக்கூடாது. இது அன்பான வேண்டுகோள்தான் இனியவள் புனிதா.//
ரொம்பவும் Cuteஆ இருந்ததால் போட்டுவிட்டேன். உண்மையில் வருந்துகிறேன்...:-( உணர வைத்தமைக்கு நன்றிங்க!
வார்த்தைகள் பிடிச்சிருக்கு..:) ஆனா இன்னும் கேட்கல.. சோ கேட்டுட்டு சொல்றேன்..!! :P
//Sri said...
வார்த்தைகள் பிடிச்சிருக்கு..:) ஆனா இன்னும் கேட்கல.. சோ கேட்டுட்டு சொல்றேன்..!! :P
//
repeatey :)
சென்ஷி said...
//Sri said...
வார்த்தைகள் பிடிச்சிருக்கு..:) ஆனா இன்னும் கேட்கல.. சோ கேட்டுட்டு சொல்றேன்..!! :P
//
repeatey :)
Thanks
Post a Comment