1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
தெரியல யாரு வச்சதுன்னு.....பிடிக்கும் :)
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை Kabhi Kushi Kabhi Gham படம் பார்த்து. இனிமேல் இந்தப் படம் பார்க்கக் கூடாதுன்னு முடிவுப் பண்ணிட்டேன்...:-(
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும் ஆனா இந்தக் கையெழுத்துக்காகவே அடிக்கடி திட்டு வாங்குவதுண்டு இன்று வரையிலும்...மிகவும் சிறியதாக இருப்பதால் ;-)
4. பிடித்த மதிய உணவு என்ன?
அம்மாவின் சமையல்...பெரும்பாலும் சாம்பார்..சாதம்..வெண்டைக்காய் பொரியல்
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம். நானாக யாரிடமும் நட்பு வைத்துக் கொள்ள மாட்டேன். என் அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் இந்தியர்கள் நான் ரொம்ப பந்தா பேர்வழின்னு கிண்டல் பண்ணுவாங்க... 1 வருடத்துக்கும் மேலாகி அவர்களே வந்து வலியப் பேசிய பொழுதுதான் அவர்களோடு பேசினேன்..ஆனா என்னோட கூச்சசுபாவம்தான் காரணமுன்னு அவங்களுக்கு தெரிய ரொம்ப நாளாச்சு... சாட்ல்ல மொக்கை போடுறத வச்சு தப்புக்கணக்கு போடாதீங்க :-)
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டுமே பார்த்து இரசிக்கத்தான் பிடிக்கும்
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்...!
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் - என்னை எனக்குப் பிடிக்கும்
பிடிக்காத விஷயம் - கோபம்... கூச்சசுபாவம், தொட்டாச்சிணுங்கியாய் இருப்பது...!!
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
இப்ப பிடிச்ச நிறைய விஷயம் க.பி பிடிக்காமலும் போகலாம் இல்லையா..அதனால் எதிர்ப்பார்ப்பில்லாமல் இருக்கவே பிடிச்சிருக்கு :-)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமே இல்லாத தனிமைத்தான் எப்போதுமே பிடிக்கும்
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கறுப்பு & மரூண்
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெட்கத்தை விட்டு :-)
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14. பிடித்த மணம்?
செண்பகப்பூவின் மணம்(காலையில் அலுவலகத்துக்கு வந்ததும் செண்பக மரத்தில் பூப்பூத்திருக்கான்னு பார்த்திட்டுத்தான் உள்ளேயே நுழைவேன்) குழந்தையின் பால் மணம், பெட்ரோல் அப்புறம் மார்க்கர் பேனாவின் மணம் ரொம்பப் பிடிக்கும்!
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
யாருமில்லைங்க...
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
1. கவிதா அக்கா - வெகு அண்மையில் கெளரி ஏன் கோபப்படலை?!!
2. சுபாஷினி - கடல் கன்னிகள் - ஓர் ஆராய்ச்சி (முதல் முறையாக என்னிடம் கோபப்பட காரணமான பதிவு அதனால் ரொம்பவே பிடிக்கும்)
17. பிடித்த விளையாட்டு?
டென்னிஸ்..பூப்பந்து..பள்ளி நாட்களில் வலைப்பந்து
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
Fantasy and Love
20. கடைசியாகப் பார்த்தப் படம்?
முழுமையாக பார்த்த படமென்றால் கன்னத்தில் முத்தமிட்டால் & Kabhi Kushi Kabhi Gham... புதுப்படம் பார்க்க இப்போதைக்குப் பொறுமையில்லை
21. பிடித்த பருவ காலம் எது?
கோடைத்தவிர எல்லா காலமும் பிடிக்கும்.. மார்கழி குளிர் ஸ்பெஷல்
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ம்ம்ம் The Kite Runner (57 வது பக்கத்திலேயே - சாரி அண்ணா ) The Da Vinci Code ( 76வது பக்கத்தில்)
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
போரடித்தாலோ வேறு ஏதாவது புதிதாக கவர்ந்தாலோ!!!
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அ) காலையில் அலுவலக வளாகத்தையொட்டிய காட்டில் கேட்கும் பட்சிகளின் சத்தம் பிடிக்கும்..அப்புறம் ஏதாவதொரு சமயத்தில் மட்டுமே கேட்க முடிந்த தேவாலய மணியோசை (அரிதாக கேட்பதால் ரொம்ப பிடிக்கும்)
ஆ) கார் ஹாரன் சத்தம் பிடிக்காது...வானொலியோ தொலைக்காட்சியோ அலறினால் பிடிக்காது!!
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ம்ம்ம் சரியாக தெரியல... மொத்த தீபகற்ப மலேசியாவை சுற்றியாச்சு.. வெளிநாட்டுக்கு இதுவரையில் சென்றதில்லை
26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
வயலின் வாசிப்பது ...(கனவில் மட்டுமே)
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
Nagging & நம்பிக்கைத் துரோகம்
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கேரளா...நேப்பாளம்..... இனிமேல்தான் போகணும்
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
தொட்டதுக்கெல்லாம் சிணுங்காமல் :-)
31.கணவர்(மனைவி) இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
Pass
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நாம் வாழ்வதற்கு மட்டுமல்ல பிறரை வாழ்விக்கவும்தான் வாழ்க்கை
7 comments:
அம்மாடி ஒரு வழியா போட்டுட்டியா.. ஸ்ஸ்ஸ் அப்பாடா அழுவாச்சி கவிதை இன்னைக்கு இல்ல... :)))
//நாம் வாழ்வதற்கும் மட்டுமல்ல பிறரை வாழ்விக்கவும்தான் வாழ்க்கை //
இது சூப்பர்டா..கண்ணா..!! :)))
உங்கள் கடைசி பதிலில் மனதைத்தொட்டுவிட்டீர்கள் தோழி!
//(முதல் முறையாக என்னிடம் கோபப்பட காரணமான பதிவு அதனால் ரொம்பவே பிடிக்கும்)//
Nalla iruke Punitha :) Inimel kobhappada kaaranam kandupidikavendame :) Aamam..unga mulu peyar enna?
//கவிதா | Kavitha கூறியது...
அம்மாடி ஒரு வழியா போட்டுட்டியா.. ஸ்ஸ்ஸ் அப்பாடா அழுவாச்சி கவிதை இன்னைக்கு இல்ல... :)))
எனக்கும் இப்பவெல்லாம் அப்படி எழுத பிடிக்கல :-)
//நாம் வாழ்வதற்கும் மட்டுமல்ல பிறரை வாழ்விக்கவும்தான் வாழ்க்கை //
இது சூப்பர்டா..கண்ணா..!! :)))//
நன்றி அக்கா :-)
//சிவனேசு கூறியது...
உங்கள் கடைசி பதிலில் மனதைத்தொட்டுவிட்டீர்கள் தோழி!//
நன்றி சிவனேஸ் :-)
//சுபா கூறியது...
//(முதல் முறையாக என்னிடம் கோபப்பட காரணமான பதிவு அதனால் ரொம்பவே பிடிக்கும்)//
Nalla iruke Punitha :) Inimel kobhappada kaaranam kandupidikavendame :) Aamam..unga mulu peyar enna?//
நிச்சயமா மாட்டேன் ஆனா இந்த முதல் காதல் முதல் முத்தம் மாதிரி முதல் கோபமும் இனிமைத்தான் சகி...அதனால் எப்பொழுதும் போல அதுவும் நினைவில் இருக்கட்டுமே ப்ளீஸ் :-)
ஆன்லைன் வரும்பொழுது மறக்காமல் கேளுங்க முழுப்பெயரை சொல்றேன் :-)
இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் புனிதாவின் முழு பெயர்............................அய்யோ! புனிதா கண்ணை உருட்டி கோவபடுவதால் நான் இப்போ எஸ்கேப்!!!
57 வது பக்கம் வரை வந்தாச்சா??
Post a Comment