
மூடாத சன்னலில் நுழைந்த
கரப்பான் பூச்சியைக்
கண்டு அலறியடித்தவள்
வழித்தவறி வீட்டில்
நுழைந்த பட்டாம்பூச்சிக்காக கதவு திறக்கிறாள்
அதன் சிறகுகள் விரிய!!!
அவனோடு பேசப் பிடிக்காமல்
ஊடலில் தாய் வீடு சென்றவள்
கோடை முடிந்தும் முடியாமலே
வீடு திரும்புகிறாள் அவன்
வாசமில்லா நாட்களின்
வெறுமையோடு!!!
வீட்டு மாமர கிளையில்
ஏறிய மகளை துரத்தி
உள்ளே அனுப்பியவள்
அவள் யாருடனோ
கொஞ்சுவதை கவனித்து நெருங்குகிறாள்
பால்கனியை நெருக்கி வளைத்து குழைந்திருந்த
மரக்கிளையில் அணிலொன்று
ஓடிப்பதுங்குகிறது அவளைக் கண்டு!!!
Thanks:Carla Sonheim
3 comments:
soooooooper....
நல்லா இருக்குங்க!
அதுவும் கடைசி ரெண்டு குறிப்புக்கள் ரசித்தேன்! :)
மூன்று கவிதைகளும் அழகு
முதல் கவிதை வெகு அழகு...
Post a Comment