Sunday, August 10, 2008

விழித்திருத்தல்...


துடிக்க மறுக்கும்
இருதயம் கூட
நட்பு என்றவுடன்
விழித்துக் கொள்கிறதே?

நட்புக்கு பொருள்
தேடி நீயென்று
கண்டுக் கொண்டேன்

உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி

உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு!

என் நுரையீரல்
தீண்டும்
காற்றுக்குக் கூட
தெரியாது
என் இருதயம்
துலங்குவதே
உனக்காக என்று

மௌனத்திற்கும்
அழகுண்டு! உன்னைப்
பார்த்தப் பின்பு
புரிந்துக் கொண்டேன்

புரிதலில் தொடங்கிய
உறவு இன்று
பிரிதலில்
நிறைவுக் கொண்டது!

உன் வீட்டுக்
கண்ணாடியை உடைத்திட
ஏனோ கைகள்
பரபரக்கின்றன!
எனக்கு மட்டும்
சொந்தமான அழகை
அது திருடிக் கொள்கிறதே!

28 comments:

Maddy said...

கண்ணாடி இப்படி பேசி இருக்குமோ என்று ஒரு கற்பனை!!!!


நான் என்ன குத்தம் செய்தேன்??
அவன்/அவள் உள் அழகை நீ அறிவாய்,
கணநேரம் என்னிடம் காட்டும்
அந்த புற அழகை அனுபவிக்க
அனுமதி தந்தால் என்ன??
எனக்காகவா என்முன்னே அவள்/அவன்??
இல்லவே இல்லை,
எல்லாம் உனக்காக!!!

எனவே நட்பாய் நாம் இருப்போம்!!
இன்றுமுதல்!!

கோபிநாத் said...

கலக்கல் கவிதைகள் ;))

Anonymous said...

//Maddy said...
கண்ணாடி இப்படி பேசி இருக்குமோ என்று ஒரு கற்பனை!!!!


நான் என்ன குத்தம் செய்தேன்??
அவன்/அவள் உள் அழகை நீ அறிவாய்,
கணநேரம் என்னிடம் காட்டும்
அந்த புற அழகை அனுபவிக்க
அனுமதி தந்தால் என்ன??
எனக்காகவா என்முன்னே அவள்/அவன்??
இல்லவே இல்லை,
எல்லாம் உனக்காக!!!
எனவே நட்பாய் நாம் இருப்போம்!!
இன்றுமுதல்!!//

ஐயோ எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ? அழகான கற்பனைங்க..வாழ்த்துக்கள்! நன்றிங்க!

Anonymous said...

//கோபிநாத் said...
கலக்கல் கவிதைகள் ;))//

ஹாய் கோபி எப்படியிருக்கீங்க? நன்றிங்க!

சென்ஷி said...

//இனியவள் புனிதா said...
//கோபிநாத் said...
கலக்கல் கவிதைகள் ;))//

ஹாய் கோபி எப்படியிருக்கீங்க? நன்றிங்க!
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அவரு வெறும் கோபி.. ஹாய் கோபி இல்ல:))

சென்ஷி said...

முதல்ல இருக்கற போட்டோவ வைச்சு நான் கவுஜ எழுத நினைச்சுருந்தேன். இப்ப வேற போட்டோவ தேடணும்:(

MSK / Saravana said...

//கோபிநாத் said...
கலக்கல் கவிதைகள் ;))//

ரிப்பீட்டேய்..
:)

MSK / Saravana said...

//உன்னைக் காணும்போது நாய்க்குட்டியாய்துள்ளும் இந்தமனது உன்னைப்
பிரிகையில்தற்கொலைச் செய்துக்கொள்ளுதடி//

அருமை..

Anonymous said...

//சென்ஷி said...
//இனியவள் புனிதா said...
//கோபிநாத் said...
கலக்கல் கவிதைகள் ;))//

ஹாய் கோபி எப்படியிருக்கீங்க? நன்றிங்க!
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அவரு வெறும் கோபி.. ஹாய் கோபி இல்ல:))//

:-) அட இதுக் கூட தெரியாம போயிடுத்தே!

Anonymous said...

//சென்ஷி said...
முதல்ல இருக்கற போட்டோவ வைச்சு நான் கவுஜ எழுத நினைச்சுருந்தேன். இப்ப வேற போட்டோவ தேடணும்:(//

:-))

Anonymous said...

//M.Saravana Kumar said...
//கோபிநாத் said...
கலக்கல் கவிதைகள் ;))//

ரிப்பீட்டேய்..
:)

அருமை..//

மிக்க நன்றி!

J J Reegan said...

// உன்னுடைய தவிர்ப்பில்தொடங்கியதுஎன் முதல்தவிப்பு! //

// மௌனத்திற்கும்அழகுண்டு! உன்னைப்பார்த்தப் பின்புபுரிந்துக் கொண்டேன் //

// உன் வீட்டுக் கண்ணாடியை உடைத்திடஏனோ கைகள்பரபரக்கின்றன!எனக்கு மட்டும்சொந்தமான அழகைஅது திருடிக் கொள்கிறதே! //

மிகவும் அழகாக எழுதுகிறீர்கள் ...
அந்த முதல் கவிதை சூப்பர் ...

ஜியா said...

//உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு!//

அட்டகாசம்...

Anonymous said...

//J J Reegan said...
// உன்னுடைய தவிர்ப்பில்தொடங்கியதுஎன் முதல்தவிப்பு! //

// மௌனத்திற்கும்அழகுண்டு! உன்னைப்பார்த்தப் பின்புபுரிந்துக் கொண்டேன் //

// உன் வீட்டுக் கண்ணாடியை உடைத்திடஏனோ கைகள்பரபரக்கின்றன!எனக்கு மட்டும்சொந்தமான அழகைஅது திருடிக் கொள்கிறதே! //

மிகவும் அழகாக எழுதுகிறீர்கள் ...
அந்த முதல் கவிதை சூப்பர் ...//

ரொம்ப நன்றிங்க...முதல் தடவையா வந்து கருத்து தெரிவித்தமைக்கு!

Anonymous said...

//ஜி said...
//உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு!//

அட்டகாசம்...//

நன்றிங்க ஜி!

Divya said...

வாவ் புனிதா......சூப்பர்ப் கவிதை!!

மிகவும் ரசித்தேன்!!

Divya said...

\\உன்னுடைய தவிர்ப்பில்தொடங்கியதுஎன் முதல்தவிப்பு!\\


சான்ஸே இல்லீங்க...மிக மிக அற்புதமான வரிகள்!!

Divya said...

\புரிதலில் தொடங்கியஉறவு இன்றுபிரிதலில்நிறைவுக் கொண்டது!\\

:((

வேதனையான நிறைவு இது,


அருமையான கவிதை வரிகள் புனிதா, வாழ்த்துக்கள்!!

Anonymous said...

//Divya said...
வாவ் புனிதா......சூப்பர்ப் கவிதை!!

மிகவும் ரசித்தேன்!!


\\உன்னுடைய தவிர்ப்பில்தொடங்கியதுஎன் முதல்தவிப்பு!\\


சான்ஸே இல்லீங்க...மிக மிக அற்புதமான வரிகள்!!


\புரிதலில் தொடங்கியஉறவு இன்றுபிரிதலில்நிறைவுக் கொண்டது!\\

:((

வேதனையான நிறைவு இது,


அருமையான கவிதை வரிகள் புனிதா, வாழ்த்துக்கள்!!//

:-) என்ன திவ்யா இது! ஏதோ கிறுக்கலுக்குப் போய் இவ்வளவு பாராட்டா? ஆனாலும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!!!

Unknown said...

அக்கா கவிதை நல்லா இருக்கு..!! :)

Anonymous said...

//Sri said...
அக்கா கவிதை நல்லா இருக்கு..!! :)//

நன்றி ஸ்ரீ :-)

Anonymous said...

NIce ..its a different view

anujanya said...

நல்ல கவிதை புனிதா. மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா

Vishnu... said...

எப்படி சொல்வதென தெரியவில்லை ...அனைத்தும் அருமை ...

வாழ்த்துக்களுடன்

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

Anonymous said...

//DPANI said...
NIce ..its a different view//

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க. தொடர்ந்து வருகை தரவும்.


// அனுஜன்யா said...
நல்ல கவிதை புனிதா. மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா//

நன்றி அனுஜன்யா...

// Vishnu... said...
எப்படி சொல்வதென தெரியவில்லை ...அனைத்தும் அருமை ...

வாழ்த்துக்களுடன் என்றும் இனிய தோழன் விஷ்ணு//

முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க விஷ்ணு!

priyamudanprabu said...

அடடா.............!

priyamudanprabu said...

உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி////////////////

அடடா!!!!!!!!!!!!

Anonymous said...

//பிரபு said...
உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி////////////////

அடடா!!!!!!!!!!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு!