
என் இதழ் வியர்க்கும் தருணங்கள்
உன்னால்தான் உண்டானது
என் இதயம் துடிக்கவும்
உன்னிடம்தான் கற்றுக் கொண்டது
என் மௌனங்களும் உன்னால்தான்
மறுமொழியாகின்றன
மொத்தமாய் உன்னால்தான்
நான் நானாகிறேன்
எல்லாமும் நீயென்றால்
உன் விரல் தீண்டி
நான் உயிர் பெறுவேனோ
இல்லை உன் நினைவாலே
உயிர் விடுவேனா?
12 comments:
நல்ல வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்...
Arumaiyaana varigal..!! :-)
அழகான வரிகள்....சூப்பர் ;)
அழகான வரிகளுடன் அருமையான கவிதை புனிதா:)
மிகவும் ரசித்தேன்!!
நல்ல கவிதை. ஏக்கத்தை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள்.
பின்னூட்டத்திற்கு மறுமொழி இடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...
@ VIKNESHWARAN
@ sri
@ கோபிநாத்
@ divya
@ shri ramesh sadasivam
வருகைக்கும் தருகைகும் மிக்க நன்றி :P
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
ஏம்பா விக்கி, இப்பிடி கேட்டு வாங்கணுமா. நீங்கள் போகாத வலைப்பூ உள்ளதா?
//அனுஜன்யா said...
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா //
நன்றி அனுஜன்யா...ஆனா ஏதோ நிறைவு இல்லாததை போன்ற உணர்வு :(
//ஏம்பா விக்கி, இப்பிடி கேட்டு வாங்கணுமா. நீங்கள் போகாத வலைப்பூ உள்ளதா?//
:))
அழகான வரிகளில் காதல்...
தினேஷ்
//தினேஷ் said...
அழகான வரிகளில் காதல்...
தினேஷ்//
நன்றி தினேஷ்...தங்களின் முதல் வருகைக்கும் தருகைக்கும்!
Post a Comment