பட்டாம்பூச்சியாய் மனம் சிறகடிக்க...
ஓவிய மழையில் நனைவது அலாதி...
பூக்களின் காதல் என்னிடம்
என் காதலோ உன்னிடம்
ச்சீசீ காதல் இனிக்கிறது?
நீரில் மூழ்காதே உன்னை
விண்ணில் சுமக்கிறேன்
நான் சிறகில்லாத விண்மீன்
வானமெனக்கு ஆழ்கடல்
நீ நடந்து வந்த பாதையில்
பூந்தோட்டமாய் பூக்கிறேன்
உன் சுவடுகளை விட்டுச் செல்
நான் நேசித்து வாழும் நூலகங்கள்
இயற்கையே நீ வாழும்
மெழுகுவர்த்தி...
உன்னை எரித்து நீ எங்களை
வாழ்விக்கிறாய்...!
18 comments:
//இயற்கையே நீ வாழும்
மெழுகுவர்த்தி...
உன்னை எரித்து நீ எங்களை
வாழ்விக்கிறாய்...!//
இது டச்சிங்...
கவிதைத் துண்டுகளும்,பொருத்தமான படங்களும் அருமை:)
கவிதையும், படங்களும் அசத்தல் ;)
//கவிதைத் துண்டுகளும்,பொருத்தமான படங்களும் அருமை://
இதை இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்!
நல்லாயிருந்ததுங்க!
//ரசிகன் said...
கவிதைத் துண்டுகளும்,பொருத்தமான படங்களும் அருமை:)//
நன்றி ரசிகன். நண்பரொருவர் மின்மடலில் அனுப்பி வைத்த இந்தப் படங்களைப் பார்த்ததுமே பதிவிட வேண்டுமென்று தோன்றிவிட்டது.... வெறுமனே படங்களை இணைக்க பிடிக்காமல் அந்த வரிகளையும் கூடவே கிறுக்கி வைத்தேன்.
//கோபிநாத் said...
கவிதையும், படங்களும் அசத்தல் ;)//
வழக்கம்போல உங்கள் பின்னூட்டமும் அசத்தல் கோபி.
//பரிசல்காரன் said...
//கவிதைத் துண்டுகளும்,பொருத்தமான படங்களும் அருமை://
இதை இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்!
நல்லாயிருந்ததுங்க!//
நன்றிங்க பரிசல்காரன். முதல் தடவையாக ஈரமான நினைவில் தடம் பதித்த உங்களுக்கும் உங்கள் தருகைக்கும் நன்றி
//VIKNESHWARAN said...
//இயற்கையே நீ வாழும்
மெழுகுவர்த்தி...
உன்னை எரித்து நீ எங்களை
வாழ்விக்கிறாய்...!//
இது டச்சிங்...//
நன்றி விக்னேஷ்...:)
படங்களின் சீரான அணிவகுப்பில்
சிதைந்து போகின்றன
எனது எண்ணங்கள்.!
வரிகளுக்கு பொருத்தமான படங்கள் அபாரம்,
கவிதை அருமை:))
நிழற்படத்திற் கேற்றாற்போல் குறுங்கவிதைகளை அழகாய் வரைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அதுசரி ஜில்லுன்னு ஒரு மலேசியா? நீங்க மலேசியாவா? நான் சிங்கையிலிருக்கிறேன்.
படத்துக்கான வரிகளா
வரிகளுக்கான படமா
என்று சொல்ல இயலாதபடி
சிறப்பாக இருந்தன
கவிதைகள். வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
//சுப.நற்குணன் - மலேசியா said...
படங்களின் சீரான அணிவகுப்பில்
சிதைந்து போகின்றன
எனது எண்ணங்கள்.!//
இதைப் பாராட்டாக எடுத்துக்கொள்ளலாமா?
//Divya said...
வரிகளுக்கு பொருத்தமான படங்கள் அபாரம்,
கவிதை அருமை:))//
வாங்க திவ்யா...உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி :)
//அகரம்.அமுதா said...
நிழற்படத்திற் கேற்றாற்போல் குறுங்கவிதைகளை அழகாய் வரைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அதுசரி ஜில்லுன்னு ஒரு மலேசியா? நீங்க மலேசியாவா? நான் சிங்கையிலிருக்கிறேன்.//
நன்றிங்க..என்னுடைய வலைக்கு வருகை தந்தது மட்டுமில்லாமல் வாழ்த்தியதற்கும் நன்றி :)
//அனுஜன்யா said...
படத்துக்கான வரிகளா
வரிகளுக்கான படமா
என்று சொல்ல இயலாதபடி
சிறப்பாக இருந்தன
கவிதைகள். வாழ்த்துக்கள்.//
நன்றி அனுஜன்யா..முதல் முறையா வந்திருக்கிங்க...மனம் திறந்து வரவேற்கிறேன்.அடிக்கடி வாங்க...உங்க கவிதையெல்லாம் அருமை...வாழ்த்துகள்
படமும்...கவிதையும்...பொருத்தமான அழகு....
அன்புடன் அருணா
//படமும்...கவிதையும்...பொருத்தமான அழகு....
அன்புடன் அருணா//
வாங்க அருணா...நன்றிங்க உங்கள் தருகைக்கு.
Post a Comment