Thursday, July 17, 2008

எங்கிருந்து வந்தாயடி......


உனை முதன் முதலாய்
பார்த்த தருணங்களை
பத்திரமாய் என்னுள்
பதியமிட்டேன்
உனைக் காணாது
இன்று விருட்சமாய்
ஓங்கி நிற்கிறது
நம் நட்பு
நீ தந்த பூக்கள்
வாடினாலும்
நின் நினைவுகளை
வாடாமல் காத்து வந்தேன்
இன்று உன்
நினைவுகள் நீர்த்துப்போய்
அர்த்தமிழந்து கிடக்கிறது
யாரும் பாராமல் புதையலாய்
அமிழ்ந்து போன என்
கனவுகளை நீ வந்து
உயிர்ப்பிப்பாய் என்று எண்ணியிருந்தேன்
கனவுகள் இன்றும்
கனவாய்தான் உள்ளதடி
உனக்குத் தெரியாமல்
பதிந்த நின் நிழல்கள்
இன்றும் நிஜமாய்தான்
என்னில் வாழ்கிறது
உன்னிடம் நான்
கண்டது நட்பா
இல்லை தாய்மையா
இன்றும் எனக்கு
புரியலையே
நட்புக்கும் தாய்மை உண்டோ
நீதான் கொஞ்சம்
கேட்டுச் சொல்லேன்
நீயில்லாமல் இன்று நானுமில்லை
வாழ்க்கையை கற்று தந்து
நீ காற்றாய் மறைந்துப்
போனதுதான் நட்பின் இலக்கணமோ
மறுபடியும் நட்பைச் சொல்லி
வந்து நிற்கும் உன்னை
நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா
நீயே எழுதிப் போ
என் மரண சாசனத்தை
நான் உன் நட்பு சிறையின்
ஆயுள்கைதி மட்டும்......

16 comments:

VIKNESHWARAN said...

நட்பின் ஆழத்தை உணர்த்தும் கவிதை

அனுஜன்யா said...

நட்பின் பெருமை சொல்லும் நல்ல கவிதை. BG ல அந்த பாட்டும் அருமை.

அனுஜன்யா

Divya said...

நட்பின் ஆழமான தாக்கத்தை வெளிப்படுத்தும் அற்புதமான வரிகள் புனிதா!!

மிகவும் ரசித்தேன் ஒவ்வொரு வரியையும்!!

Divya said...

\\உன்னிடம் நான்
கண்டது நட்பா
இல்லை தாய்மையா
இன்றும் எனக்கு
புரியலையே
நட்புக்கும் தாய்மை உண்டோ
நீதான் கொஞ்சம் கேட்டுச் சொல்லேன்\\

என்னைக் கவர்ந்த வரிகள்!!

Divya said...

\உன்னை
நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா\

விம்முவதா......என்ற வார்த்தை மிக அழகாக அவ்வரிக்கு பொருந்துகிறது, அசத்தல்!!

விஜய் said...

உரவினர்கLaiவிட நண்பர்கள் தான் சிறப்பு. அந்த நட்புக்கு ஒரு வாழ்த்துப் பா,அருமை.வாழ்க

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்

கோபிநாத் said...

\\நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா\\

அருமை ;)

இனியவள் புனிதா said...

@ VIKNESHWARAN
நட்பின் ஆழத்தை உணர்த்தும் கவிதை

#தங்களின் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி விக்னேஷ்

@அனுஜன்யா
நட்பின் பெருமை சொல்லும் நல்ல கவிதை. BGல அந்த பாட்டும் அருமை.- அனுஜன்யா
# நட்பு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் இங்கு சொல்லியிருக்கிறேன்.அப்புறம் பிண்ணனியில் வரும் பாட்டுத்தான் இப்போதைக்கு நான் அடிக்கடி முண்முணுக்கும் பாடல்

@Divya
நட்பின் ஆழமான தாக்கத்தை வெளிப்படுத்தும் அற்புதமான வரிகள் புனிதா!!
மிகவும் ரசித்தேன் ஒவ்வொரு வரியையும்!!

# வாங்க திவ்யா..அட ஒரே மூச்சில் மூன்று பின்னூட்டம்.நன்றிங்க!

@ உன்னிடம் நான்
கண்டது நட்பா
இல்லை தாய்மையா
இன்றும் எனக்கு
புரியலையே
நட்புக்கும் தாய்மை உண்டோ
நீதான் கொஞ்சம் கேட்டுச் சொல்லேன்

என்னைக் கவர்ந்த வரிகள்!!

# நட்பு சில சமயங்களில் தாய்வீடாய் மாறி ஒத்தடக் கைகளை தந்திருக்கிறது

@உன்னை
நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா

விம்முவதா......என்ற வார்த்தை மிக அழகாக அவ்வரிக்கு பொருந்துகிறது, அசத்தல்!!

@ அதே நட்பு சில சமயம் கத்தியைக் கொண்டு நெஞ்சைத் தாக்கியுள்ளது. அது உண்மையான நட்பென்று முதலில் புரிந்துக்கொண்டேனா என்பதுதான் இங்குக் கேள்வி?

@விஜய்
உறவினர்களைவிட நண்பர்கள் தான் சிறப்பு. அந்த நட்புக்கு ஒரு வாழ்த்துப் பா,அருமை.வாழ்க
தி.விஜய்
pugaippezhai.blogspot.com

# வாங்க விஜய்..முதல்
வருகைக்கும் தருகைக்கும் நன்றிங்க!

@ கோபிநாத்
\\நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா\\

அருமை ;)

# வாங்க கோபி நான் சொன்னது சரிதானே உங்கள் பின்னூட்டம் இல்லாமல் என் பதிவு முற்றுப் பெறுவதில்லை ;)

திகழ்மிளிர் said...

/உனை முதன் முதலாய்
பார்த்த தருணங்களை
பத்திரமாய் என்னுள்
பதியமிட்டேன்
உனைக் காணாது
இன்று விருட்சமாய்
ஓங்கி நிற்கிறது
நம் நட்பு/

ஒவ்வொரு வரிகளும்
ஓர்மைகின்றன நட்பை

shri ramesh sadasivam said...

இதில் வெறும் நட்பு மட்டும் தெரியவில்லை. ஓர் உண்மையான உறவுக்கான ஏக்கம் தெரிகிறது. அது எனக்கு மிக பிடித்தது.
"மறுபடியும் நட்பைச் சொல்லி
வந்து நிற்கும் உன்னை
நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா"
இந்த வரிகளில் இருக்கும் உண்மை எவ்வளவு பெரிய உவமைகளைவிடவும், வார்த்தை ஜாலங்களை விடவும் ஆற்றல் மிக்கது.

இனியவள் புனிதா said...

//திகழ்மிளிர் said...
/உனை முதன் முதலாய்
பார்த்த தருணங்களை
பத்திரமாய் என்னுள்
பதியமிட்டேன்
உனைக் காணாது
இன்று விருட்சமாய்
ஓங்கி நிற்கிறது
நம் நட்பு/

ஒவ்வொரு வரிகளும்
ஓர்மைகின்றன நட்பை//

பின்னூட்டத்திற்கு நன்றிங்க திகழ்மிளிர்...ரொம்ப வித்தியாசமான பெயர்..!

இனியவள் புனிதா said...

//shri ramesh sadasivam said...
இதில் வெறும் நட்பு மட்டும் தெரியவில்லை. ஓர் உண்மையான உறவுக்கான ஏக்கம் தெரிகிறது. அது எனக்கு மிக பிடித்தது.
"மறுபடியும் நட்பைச் சொல்லி
வந்து நிற்கும் உன்னை
நம்புவதா இல்லை உன் மடியில்
வீழ்ந்து விம்முவதா"
இந்த வரிகளில் இருக்கும் உண்மை எவ்வளவு பெரிய உவமைகளைவிடவும், வார்த்தை ஜாலங்களை விடவும் ஆற்றல் மிக்கது.//

அட இவ்வளவு நீள பின்னூட்டமா? நன்றி...நன்றி!

நவீன் ப்ரகாஷ் said...

//உன்னிடம் நான்
கண்டது நட்பா
இல்லை தாய்மையா
இன்றும் எனக்கு
புரியலையே
நட்புக்கும் தாய்மை உண்டோ
நீதான் கொஞ்சம் கேட்டுச் சொல்லேன் //

மிக ரசித்தேன் புனிதா...:))

அழகாக சூழ்கொண்ட வார்த்தைகள் கவியெங்கும் சிதறிக்கிடக்கின்றன... வாழ்த்துக்கள்...

Sri said...

அருமையான படைப்பு அக்கா..!! :-)

இனியவள் புனிதா said...

//நவீன் ப்ரகாஷ் said...
//உன்னிடம் நான்
கண்டது நட்பா
இல்லை தாய்மையா
இன்றும் எனக்கு
புரியலையே
நட்புக்கும் தாய்மை உண்டோ
நீதான் கொஞ்சம் கேட்டுச் சொல்லேன் //

மிக ரசித்தேன் புனிதா...:))

அழகாக சூழ்கொண்ட வார்த்தைகள் கவியெங்கும் சிதறிக்கிடக்கின்றன... வாழ்த்துக்கள்...//


நன்றி நவீன்...வேறு வார்த்தைகள் தெரியவில்லையே, அந்த ஒற்றைச் சொல்லைத் தவிர!

இனியவள் புனிதா said...

//Sri said...
அருமையான படைப்பு அக்கா..!! :-) //

நன்றி தங்கச்சி! ;-)