
என் உறவினில் கலந்து
உயிரினில் உருகி
உயிராய் இருக்க வருவாயா
என் தனிமையை சுருக்கி
பொழுதினை பெருக்க
நிழலைபோலத் தொடர்வாயா
என் மடியினில் தவழ்ந்து
ஆயுளை கூட்ட
சீக்கிரம் உடனே வருவாயா?
இல்லை என் கனவாய்
கலைந்து இருளாய்
மறைந்து போவாயோ
சொல் சொல் சொல் சொல்
என் தேவதையே...
7 comments:
அழகு ;)
//கோபிநாத் said...
அழகு ;)//
வர வர எழுத விசயமே கிடைக்காமல் போய்விட்டது :(
திருமணம் ஆகிவிட்டதா?!!
ஏன் கேட்கிறேன் என்றால், ஒரு சினிமாவில் விவேக் காமெடியில் சொல்வதுபோல....அந்த பெண்ணுக்கு 5 வருடமா குழந்தையே இல்லை, ஏன்னா அந்த பொன்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை....என்பதுபோல உங்கள் கவிதையை படித்ததும் கேட்க தோன்றியது!
குழல் இனிது யாழ் இனிது என்பதம்
தம் மழலைச் சொல் கேளாதார்!
கொஞ்சம் காத்திருங்கள்....கொஞ்சுவதற்கு குழந்தை வந்துவிடும்!
இது குழந்தை வேண்டி காத்திருப்போர்களுக்காக மட்டும் குறிப்பிட்டது! கணவர்களுக்காக காத்திருப்போர்களுக்கு அல்ல...அதுக்கு வேற குறிப்பு இருக்கு! ம்ம்ம்...நம்மகிட்ட இல்ல.
// பிரேம்குமார் said...
கணவர்களுக்காக காத்திருப்போர்களுக்கு அல்ல...அதுக்கு வேற குறிப்பு இருக்கு! ம்ம்ம்...நம்மகிட்ட இல்ல.//
:))
:-)
கூடிய சீக்கிரமே வரட்டும்:)
// நிஜமா நல்லவன் said...
கூடிய சீக்கிரமே வரட்டும்:)//
ஐ... அதுக்கு முதல்ல கல்யாணமாகனுமே ;)
Post a Comment