
காலங்கள் மாறிக்கொண்டேதான் இருக்கிறது
காதல்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது
உன் இசையின் ராகம் மட்டும் மாறவில்லை
உன் இசை மீது நான் கொண்ட காதலும் சாகவில்லை
நான் வாழ்வதே உன் இசையால்தான்
நான் வீழ்வதும் உன் இசையால்தான்
கோயில் கோபுரங்களை காணும் பொழுதெல்லாம்
உனக்காக பிராத்திக்கிறேன் -^-
உன் திருவாசக இசையில்
துயிலெழும் தில்லைக்கூத்தனும்
இமைப்பொழுதும் உன் நெஞ்சில்
நீங்காமல்தான் வாழ்கிறான்
இசைக்கு ஏது வயது
உனக்கு மட்டும் ஏன் வயது
உன் வயதை தூக்கி போட்டு விட்டு வா
இன்னுமொரு சிம்பனி படைக்க
திருவாசகத்தோடு முடிந்துவிடவில்லை
உன் இசை விளையாடல்
5 comments:
ஆகா..ஆகா...கலக்கிட்டிங்க புனிதா ;))
ராசாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
\\வாழ்வதே உன் இசையால்தான்நான் வீழ்வதும் உன் இசையால்தான்கோயில் கோபுரங்களை காணும் பொழுதெல்லாம்உனக்காக பிராத்திக்கிறேன் -^\\
நாங்கள் என்று சொல்லுங்கள் ;)
மிக மிக அற்புதமான கவிதை வாழ்த்து ;)
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு ;)
இந்த பதிவையும் பாருங்கள்
ராகதேவன் இளையராஜா - வருஷம் 65
http://radiospathy.blogspot.com/2008/06/65.html
தல
கானாவின் படையல் ;))
//கோபிநாத் said...
ஆகா..ஆகா...கலக்கிட்டிங்க புனிதா ;))
ராசாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
\\வாழ்வதே உன் இசையால்தான்நான் வீழ்வதும் உன் இசையால்தான்கோயில் கோபுரங்களை காணும் பொழுதெல்லாம்உனக்காக பிராத்திக்கிறேன் -^-\\
நாங்கள் என்று சொல்லுங்கள் ;)
மிக மிக அற்புதமான கவிதை வாழ்த்து ;)
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு ;)
இந்த பதிவையும் பாருங்கள்
ராகதேவன் இளையராஜா - வருஷம் 65
http://radiospathy.blogspot.com/2008/06/65.html
தல
கானாவின் படையல் ;))//
சரி...நாம் எல்லோருமாய் வாழ்த்துவோம். ;)
கானாவின் பதிவை படித்தேன் இரசித்தேன்... :))
வணக்கம் புனிதா. இளையராஜாவின் தீவிர ரசிகனான நான். அவ்ர் பிறந்த நாளில் ஒரு பதிவிடாமல் போனதற்காக வருந்தினேன். தமிழ் மணத்தில் ஒரே ஒரு பதிவு அவரை பற்றி அதுவும் உங்களுடையது. நன்றி வாழ்த்துக்கள்.
//ஸ்ரீ said... தமிழ் மணத்தில் ஒரே ஒரு பதிவு அவரை பற்றி அதுவும் உங்களுடையது.//
இல்லப்பா இன்னும் ரெண்டு பேரு பதிவு போட்டிருந்தாங்க. இந்த பின்னூட்டத்த அவங்க படிக்க நேர்ந்தா அடிக்க வந்திருவாங்க :P
Post a Comment