
“யாரு அம்மாவா... அம்மா என்ன பார்க்கனுமுன்னு சொன்னாங்களா? நீங்க சொல்றது நிஜமா குமார்?’’
“நிஜம்தான் சார், வேலை முடிஞ்சதும்”ஆடிட்டர் சொல்லி முடிப்பதற்குள்
“நான் இப்பவே”
“சார்…சார் அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க, மாலை வேலை முடிஞ்சதும் வர சொல்லியிருக்காங்க” என்று ஆடிட்டர் குமார் பதட்டத்துடன் கூறினான்.
அருணாவைப் பற்றிய சிந்தனையிலிருந்து நழுவி தன் தாயைப் பற்றி நினைக்க தொடங்கினான் கௌதமன்.
அம்மா மட்டும் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்தால், அருணாவை இவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றியிருக்கலாமே. ஐயோ இப்பொழுது நிலைமை தன் கையை மீறிவிட்டதே. அம்மாவைத் தவிர இதற்கு வேறு தீர்வு கிடையாது என்று நிச்சயமாக நம்பினான் கௌதமன். இப்பொழுதும் கூட தான் அருணா மீது வைத்திருந்த காதலை விட்டுக் கொடுக்க அவன் தயாரில்லை. எப்படியாவது அருணாவின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.
மாலையில் தன் அம்மாவை நாடிச் சென்றவன், தாயைக் கண்டதும் அவர் மடியில் விழுந்து கதறிவிட்டான். ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அவர் முகத்தை காண முடியாமல் கூனிக்குறுகிப் போய் பேசாமல் அமர்ந்திருந்தான். மகனின் நிலையை புரிந்துக் கொண்டவராய் அருணாவைப் பற்றி விசாரித்தார். இதற்கு மேலும் மறைக்க எதுவுமில்லையென்று தோன்றியதால் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்தான். அவர் அவனை மேலும் ஏதும் கேட்டு வருத்தாமல் அருணாவை தன்னிடம் கொண்டுவந்து விடுமாறு கூறினார். அந்நேரம் அவனுடைய கைப்கேசி சிணுங்க, எடுத்துப் பேசியவனுக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டிருந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment