Tuesday, May 12, 2009

வேண்டுதல்...வேண்டாமை!!!

உன் இதயம்
சுமந்து உயிர் வதை
கொள்வதைவிட
அதை இறக்கி
இளைபாறுதலே
மரண சுகம்!!!

..............................

முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!


12.05.2009

15 comments:

Subha said...

//முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!//

எப்படி புனிதா தினமும் அருமையான கவிதைகள் வருது உங்களுக்கு :)
அருமை!

Sanjai Gandhi said...

அய்யோ அம்மா தாயே.. முடியலை.. எப்போ தான் இங்க அழுகாச்சியை நிறுத்தப் போறிங்க? :((

ஒரே கொடுமை ஆஃப் கோயம்புத்தூரா இருக்கே.. :((

கவிதா | Kavitha said...

//அய்யோ அம்மா தாயே.. முடியலை.. எப்போ தான் இங்க அழுகாச்சியை நிறுத்தப் போறிங்க? :((//

யேய்ய் !! என் டயலாக் காப்பி பண்ணா நான் வேற என்ன டயலாக் பேசறது...ம்ம்ம்ம்?!!!!

:))

கவிதா | Kavitha said...

//உன் இதயம்
சுமந்து உயிர் வதை
கொள்வதைவிட
அதை இறக்கி
இளைபாறுதலே
மரண சுகம்!!!//

கண்ணே மணியே.. !! இறக்கி வைப்பது அவ்வளவு எளிதாம்மா?

உள்ளே வைத்திருக்கும் உயிர் வதையே சுகம்..

இறக்கி வைத்தால் சுகத்தை அனுபவிக்க நீ இருக்கமாட்டாய்.. :)))

மரணம் சுகம் என்பதை நீ எப்படி அறிவாய்.. மரணத்திற்கு பின்..?!!

G3 said...

//அதை இறக்கி
இளைபாறுதலே//

அம்புட்டு சுலபமா ;))))

பதில் ரெண்டாவது கவிதைல நீங்களே சொல்லிட்டீங்க போல :)

Sanjai Gandhi said...

என்னக் கொடுமை அணி ஓனர் இது?

இப்போ கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு பால் குடிச்சிட்டு இருக்கேன். அது கூட உங்க ப்ரேக் ஃபாஸ்ட்னு சொல்விங்க போல? :(

Unknown said...

:)))))))

Unknown said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ கூறியது...
என்னக் கொடுமை அணி ஓனர் இது?

இப்போ கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு பால் குடிச்சிட்டு இருக்கேன். அது கூட உங்க ப்ரேக் ஃபாஸ்ட்னு சொல்விங்க போல? :(//

Breakfast-kellam advertisement-ah?? :P

Sanjai Gandhi said...

டூ மச் கவிதா.

கவிதா | Kavitha said...

//டூ மச் கவிதா.//

டேக் இட் ஈஸ் ரெ...ச்சும்ம்மா உங்கள கலாய்க்க சொன்னேப்பா. .நோ ஹார்டு பீலிங்ஸ்ஸூ.. ப்ளீஸ்.. !! :)

ஸ்மைல் ப்ளீஸ்...

gayathri said...

முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!

nalla irku pa

Gowripriya said...

முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!


உணர்வுகளின் வெளிப்பாடு அருமை புனி...

நான் said...

காதலின் அருமையும்
பிரிவின் வலியும் நன்றாகவே இருக்கிறது
வாழ்த்துகள்

Anonymous said...

@சுபா
@SanjaiGandhi
@கவிதா|Kavitha
@G3
@ஸ்ரீமதி
@gayathri
@GOWRI
@நான்

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

து. பவனேஸ்வரி said...

//உன் இதயம்
சுமந்து உயிர் வதை
கொள்வதைவிட
அதை இறக்கி
இளைபாறுதலே
மரண சுகம்!!!//

அற்புதமான வரிகள்... வலிமிக்கனவாய் என் இதயத்தை அறுத்தெடுக்கின்றன...