நெருக்கங்களால் இதயம்
ததும்புகின்ற வேளையில்...
முன்னொரு நாள்
மேகங்களில் உரசி
சிறகொடிந்தப் போது
கட்டுப் போட்ட வேடனின்
ஸ்பரிசம் அடைமழையாய்
சிலிர்த்தெழுகிறது...
மழையில் நனைந்துக் கொண்டே
தீக்குள் விரலை விடும்
இலையுதிராக் காலத்தில்
அவனைச் சேர்வதாய்ச் சொல்லிச்
சென்ற வார்த்தைகள்...
இன்று மழையில்
நனையாதுதீக்குளித்தாலும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்துக் கொல்கிறது!!!
[இன்று பிறந்தநாள் காணும் அன்புத் தோழி
இந்தப் பாசம்... இந்த நேசம்... இந்த நட்பு... வாழ்வின் எல்லை வரை வேண்டும்!!!
13 comments:
உங்களன்புக்கும் ஆதரவுக்கும்...வாழ்த்து அட்டை அனுப்பி என்னை மகிழ்வித்ததற்கும்...நன்றி தோழியே :)
சுபா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!
// ஸ்ரீ உனக்கு புரியுமில்லையா???//
ஒ இங்க சங்கேத பாஷையெல்லாம் கூட உண்டா ரைட்டு :))
இந்தப் பாசம்...
இந்த நேசம்...
இந்த நட்பு...
வாழ்வின் எல்லை வரை வேண்டும்!!!
....
....
உறவுகள் தொடர
உணர்வுகள் பகிர
உலகில் உள்ளோர்
இவர் போலே
உண்மை நட்பும்
உன்னத அன்பும்
உளமகிழ
இன்றும் என்றேன்றும்
கிடைக்க வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்து சுபாவுக்கு.
கவிதை அருமை
கேக் சூப்பரா இருக்கு, உங்க கவிதைய போலவே...
உங்க தோழிக்கு நான் வாழ்த்து சொன்னதா சொல்லுங்க!
எல்லா இன்பமும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ்ந்திட வாழ்த்துகள்
சுபா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
\\பின் குறிப்பு : ஸ்ரீ உனக்கு புரியுமில்லையா??//
ஸ்ரீக்கு மட்டும் தான் புரியும் போல இருக்கு கவிதை..முன்னடியே கவிதைக்கு உரை சொல்லி இருப்பீங்களோ அவங்களுக்கு.. ?
தோழிக்கு வாழ்த்துக்கள்..:)
கவிதை : இந்த அளவுக்குப் போகும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))
சுபா ஆண்டிக்கு : இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எங்க ஊர் மருமகளே.. :)
எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....சஞ்சய தவிர! என்ன ஆங்கிள்?
கவிதை அருமை.. :)))))))) எனக்கு புரிஞ்சிடிச்சு.. ;))))))) சுபா அக்காவுக்கு எனது (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துகள்.. :))
(சாரி அக்கா, இன்னைக்கு தான் ஆப்பிஸ் வரேன்.. அதான் லேட் பின்னூட்டம்.. :(( )
//ஸ்ரீமதி சொன்னது…
கவிதை அருமை.. :)))))))) எனக்கு புரிஞ்சிடிச்சு.. ;)))))))
?????!!! :-)))
(சாரி அக்கா, இன்னைக்கு தான் ஆப்பிஸ் வரேன்.. அதான் லேட் பின்னூட்டம்.. :(( )
same pinch :-)))
Post a Comment