உன்னைப் பார்த்த
வெட்கங்களோடு
உதடு கடிக்கின்றன
என்னில் விழிக்காத
சில செல்ல கனவுகள்!!!
கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடுமாறுகிறது ஓர் இதயம்!!!
தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்
வெட்கங்களோடு
உதடு கடிக்கின்றன
என்னில் விழிக்காத
சில செல்ல கனவுகள்!!!
கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடுமாறுகிறது ஓர் இதயம்!!!
தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்
செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!!
கல்லறை பூக்களாய்
இன்று!!!
(இதுவரையிலும் கிறுக்கிய எழுத்து படிமங்களின் மீள்பார்வையிது. அர்த்தமிழந்த வார்த்தைகளாய் என்னில் புதைந்து ஓலமிடும் வார்த்தைகளின் அணிவகுப்பு இது. புதைந்துப் போன வார்த்தைகள் நீர்த்துப் போகாமல் பொறுக்கி இங்கு வரிசை மட்டுமே படுத்தியுள்ளேன்.)
மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!
69 comments:
சரியான தலைப்பு தான்!!
அழகான கவிதைகள்.. :)) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா :))
அழகு...கவிதை வெகு அழகு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அழகான வரிகள்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!! //
அற்புதமான வார்த்தைகள்!
//தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!!//
அழகா எழுதுறீங்க...மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அன்புடன் அருணா
அருமை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. :)
இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துகள் !!!
காதலில் ஆரம்பித்து கொஞ்சம் தடுமாறி பின் வாழ்க்கையில் முடிகின்றது உங்கள் கவிதை. அழகு.
//கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடமாறுகிறது ஓர் இதயம்!!!//
இதயம் நிலைபெற புத்தாண்டு உதவட்டும் :)
புத்தாண்டு நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள்.
அழகான வரிகள்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அக்கா :))
கவிதை அழகு..
வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை
வளம் பெருக.. துயர் மறைய..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சூர்யா
http://butterflysurya.blogspot.com
//இத்யாதி கூறியது...
சரியான தலைப்பு தான்!!//
நன்றிங்க :-) இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
//ஸ்ரீமதி கூறியது...
அழகான கவிதைகள்.. :)) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா :))//
நன்றி செல்லம். உனக்கும் என் வாழ்த்துகள் :-)
//புதியவன் கூறியது...
அழகு...கவிதை வெகு அழகு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
நன்றிங்க உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள் :-)
//சுபாஷினி கூறியது...
அழகான வரிகள்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
நன்றி சுபா..உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)
// இசக்கிமுத்து கூறியது...
//தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!! //
அற்புதமான வார்த்தைகள்!//
நன்றிங்க :-)
//அன்புடன் அருணா கூறியது...
//தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!!//
அழகா எழுதுறீங்க...மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அன்புடன் அருணா//
நன்றிங்க அருணா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)
//Saravana Kumar MSK கூறியது...
அருமை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. :)//
நன்றி சரவணா..என்னுடைய வாழ்த்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-)
//ஸாவரியா கூறியது...
இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துகள் !!!//
நன்றி ஸாவரியா. தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)
//காண்டீபன் கூறியது...
காதலில் ஆரம்பித்து கொஞ்சம் தடுமாறி பின் வாழ்க்கையில் முடிகின்றது உங்கள் கவிதை. அழகு.
//கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடமாறுகிறது ஓர் இதயம்!!!//
இதயம் நிலைபெற புத்தாண்டு உதவட்டும் :)
புத்தாண்டு நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள்.//
நிச்சயமாய் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுப்போல் உங்களுக்கும் இனியதாய் இவ்வாண்டு அமைய வாழ்த்துகிறேன் :-)
//gayathri கூறியது...
அழகான வரிகள்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அக்கா :))//
நன்றி காய்த்ரி..உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள் :-)
// வண்ணத்துபூச்சியார் கூறியது...
கவிதை அழகு..
வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை
வளம் பெருக.. துயர் மறைய..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சூர்யா
http://butterflysurya.blogspot.com //
நன்றி சூர்யா. உங்களுக்கும் எனது வாழ்த்துகள் :-)
அர்த்தமிழந்த வார்த்தைகளின்
அர்த்தம் புரியாமல்
வருத்தம் கொள்ளவதில்
அர்த்தமில்லை என்பதால்.....
ஈரமான நினைவுகள்
இன்று
காய்ந்ததுபோல்
காணப்பது கண்டு
கலங்குகிறது கண்கள்!
எட்டித்துடைக்க
எனக்கிருந்தும் ஆசை
தூரத்திலிருப்பதால்
ஈரமான உன்
இருவிழிகளை
துடைத்து துயரத்துக்கு
விடைகொடுக்க இயலவில்லை...
ஹி..ஹி..ஹாஅ..ஹாஅ....
இடுக்கன் வருங்கால்...நகுக....
//பிரியமுடன்... கூறியது...
அர்த்தமிழந்த வார்த்தைகளின்
அர்த்தம் புரியாமல்
வருத்தம் கொள்ளவதில்
அர்த்தமில்லை என்பதால்.....
ஈரமான நினைவுகள்
இன்று
காய்ந்ததுபோல்
காணப்பது கண்டு
கலங்குகிறது கண்கள்!
எட்டித்துடைக்க
எனக்கிருந்தும் ஆசை
தூரத்திலிருப்பதால்
ஈரமான உன்
இருவிழிகளை
துடைத்து துயரத்துக்கு
விடைகொடுக்க இயலவில்லை...
ஹி..ஹி..ஹாஅ..ஹாஅ....
இடுக்கன் வருங்கால்...நகுக....//
ஒன்னும் புரியல :-) ஏதோ கவிதை மாதிரி தெரியுது.. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ப்ரேம்:-)
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :))
//கோபிநாத் கூறியது...
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :))//
நன்றி கோபி.தங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!!!
எந்த ஒரு வார்த்தையும் அர்த்தமிழந்து இல்லை!!! கவிதை மற்றும் காதல் தலைப்புகளில் உள்ள கவிதைகளில், காதலும் அன்பும் நன்றாகவே எழுதி இருகிறீர்கள்!!! வார்த்தைகளில் சுகத்தை உங்கள் வரிகளில் என்றும் தொடர்க!! வாழ்த்துக்கள்!!! வளமான கவிதைகள் வரட்டும் இனியும் இந்த புது வருடத்தில்!
இனியவள் புனிதாவின் இனிய கவி பயணம் தொடரட்டும்
//Maddy சொன்னது…
எந்த ஒரு வார்த்தையும் அர்த்தமிழந்து இல்லை!!! கவிதை மற்றும் காதல் தலைப்புகளில் உள்ள கவிதைகளில், காதலும் அன்பும் நன்றாகவே எழுதி இருகிறீர்கள்!!! வார்த்தைகளில் சுகத்தை உங்கள் வரிகளில் என்றும் தொடர்க!! வாழ்த்துக்கள்!!! வளமான கவிதைகள் வரட்டும் இனியும் இந்த புது வருடத்தில்!
இனியவள் புனிதாவின் இனிய கவி பயணம் தொடரட்டும்//
மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கு :-)
வாசகர்களின் மனதை சுண்டி இழுக்கக்கூடிய வரிகள் மிக நன்று. தங்களின் வலைப்பதிவு ஆழ் மனதை தொட்டதும் இன்றி அங்கேயே தங்க இடம் கோருகின்றது.. வாழ்த்துக்கள்.
//அர்த்தமிழந்த வார்த்தைகளாய் என்னில் புதைந்து ஓலமிடும் வார்த்தைகளின் அணிவகுப்பு இது//
அப்பப்பா... எத்தனை விரக்தி???
கவிதையை உருவாக்கிய சொற்கள் - அருமை!
//உன்னைப் பார்த்த
வெட்கங்களோடு
உதடு கடிக்கின்றன
என்னில் விழிக்காத
சில செல்ல கனவுகள்!!!//
அட..அட.. :)
\\தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்
செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!!\\
supernga..
//தொலைத்தும் தொலையாமல்//
கவிதை தலைப்பை அர்த்தம்மாகிய வரிகள்
\முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடமாறுகிறது ஓர் இதயம்!!!\\
தடுமாறுகிறதா
தடம்மாறுகிறதா
கவிதை அழகு.
புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. விளக்கம் ப்ளீஸ் :-)
அழகான வரிகள்... ஏனோ, சோகம் நிறைந்துக் காணப்படுகிறது.
//தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!! //
ம், அர்த்தமிகுந்த வார்த்தைகள்
கவிதை நல்லா இருக்கு...எனக்காக ஒரு சந்தோஷனமான கவிதை எழுதி பதிவு போட்டுட்டு சொல்லுங்களேன். .ப்ளீஸ்...
காதல்
நட்பு
இரண்டுல ஏதாவது ஒன்னு.. :) ஆனா கண்டிஷன் சந்தோஷமாக இருக்குனும்..!! :)
//
கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடுமாறுகிறது ஓர் இதயம்!!!//
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள்...
புனிதா,, அழகான காதல் கவிதைகள்,
.. காதலிப்பதும்,காதலிக்கப்படுவதும்
நிஜமாய் வரங்கள்..
உங்கள் கவிதைகளை படிக்கும்போது என் இதழோரங்களில் புன்னகை ,எத்தனை அழகாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து காதலித்தபடி,காதலாய்...
தோழிக்கு வாழ்ததுக்களும் பாரட்டுகளும் - ஜுவன்
நல்ல கவிதை தொகுப்பு வரிகள்..
தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
அழகு...கவிதை வெகு அழகு
//தாய்மொழி கூறியது...
வாசகர்களின் மனதை சுண்டி இழுக்கக்கூடிய வரிகள் மிக நன்று. தங்களின் வலைப்பதிவு ஆழ் மனதை தொட்டதும் இன்றி அங்கேயே தங்க இடம் கோருகின்றது.. வாழ்த்துக்கள்.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..;-)
//A N A N T H E N கூறியது...
//அர்த்தமிழந்த வார்த்தைகளாய் என்னில் புதைந்து ஓலமிடும் வார்த்தைகளின் அணிவகுப்பு இது//
அப்பப்பா... எத்தனை விரக்தி???
கவிதையை உருவாக்கிய சொற்கள் - அருமை!//
வருகைக்கு நன்றிங்க அனந்தன். விரக்தி வார்த்தைகளிம் மட்டுமே வாழ்க்கையில் அல்ல ;-)
//SanJaiGan:-Dhi கூறியது...
//உன்னைப் பார்த்த
வெட்கங்களோடு
உதடு கடிக்கின்றன
என்னில் விழிக்காத
சில செல்ல கனவுகள்!!!//
அட..அட.. :)//
வருகைக்கு நன்றி சஞ்சய் ;-)
//logu.. கூறியது...
\\தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்
செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!!\\
supernga//
நன்றிங்க லோகு ;-)
//சொல்லரசன் கூறியது...
//தொலைத்தும் தொலையாமல்//
கவிதை தலைப்பை அர்த்தம்மாகிய வரிகள்//
நன்றிங்க ;-)
//அதிரை ஜமால் கூறியது...
\முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடமாறுகிறது ஓர் இதயம்!!!\\
தடுமாறுகிறதா
தடம்மாறுகிறதா
கவிதை அழகு.//
தடுமாறிய வார்த்தை தடமாறிவிட்டதுங்க ஜமால். வருகைக்கும் திருத்தியமைக்கும் நன்றிங்க ;-)
//விஜய் கூறியது...
புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. விளக்கம் ப்ளீஸ் :-)//
ம்ம்ம்...விஜய் அண்ணா முதலில் எனக்கே புரியவில்லை அப்புறம் எங்கே நான் விளக்கம் தருவது!!
//து. பவனேஸ்வரி கூறியது...
அழகான வரிகள்... ஏனோ, சோகம் நிறைந்துக் காணப்படுகிறது.//
வாங்க பவனேஸ்..எனக்கே வருடத்தின் முதல் நாளில் சோகமாக எழுதப் பிடிக்கவில்லை...ஆனால் இது என்னைக் கடந்து வந்த வார்த்தைகளின் மீள்பார்வைதான் ;-)
//அமிர்தவர்ஷினி அம்மா கூறியது...
//தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!! //
ம், அர்த்தமிகுந்த வார்த்தைகள்//
நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும் :-)
//கவிதா | Kavitha கூறியது...
கவிதை நல்லா இருக்கு...எனக்காக ஒரு சந்தோஷனமான கவிதை எழுதி பதிவு போட்டுட்டு சொல்லுங்களேன். .ப்ளீஸ்...
காதல்
நட்பு
இரண்டுல ஏதாவது ஒன்னு.. :) ஆனா கண்டிஷன் சந்தோஷமாக இருக்குனும்..!! :)//
ஏங்க இந்த கொலவெறி? சரி நான் வேண்டுமென்றால் கவிதையெழுதி மின்மடலில் அனுப்பி வைக்கிறேன் சரியா?
//Karthik Krishna கூறியது...
//
கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடுமாறுகிறது ஓர் இதயம்!!!//
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள்...//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கார்த்திக் கிருஷ்ணா!!!
//ஜீவன் கூறியது...
புனிதா,, அழகான காதல் கவிதைகள்,
.. காதலிப்பதும்,காதலிக்கப்படுவதும்
நிஜமாய் வரங்கள்..
உங்கள் கவிதைகளை படிக்கும்போது என் இதழோரங்களில் புன்னகை ,எத்தனை அழகாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து காதலித்தபடி,காதலாய்...
தோழிக்கு வாழ்ததுக்களும் பாரட்டுகளும் - ஜுவன்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஜீவன் ;-)
//சென்ஷி கூறியது...
நல்ல கவிதை தொகுப்பு வரிகள்..
தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..//
நன்றிங்க :-)
//தாரணி பிரியா கூறியது...
அழகு...கவிதை வெகு அழகு//
நன்றி பிரியா..வருக்கைக்கும் மிக்க நன்றிங்க ;-)
hello kakak punitha :D
apa khabar?
nampaknya kakak sedang jadi terkenal di dunia blog :))
//υnĸnown вlogger™ கூறியது...
hello kakak punitha :D
apa khabar?
nampaknya kakak sedang jadi terkenal di dunia blog :))//
வணக்கம் துர்கா..நலம்..நீங்க நலமா..எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி ;-)
ஏங்க இந்த கொலவெறி? சரி நான் வேண்டுமென்றால் கவிதையெழுதி மின்மடலில் அனுப்பி வைக்கிறேன் சரியா?//
ம்ம் சரி நான் ப்ப்ளீஷ் செய்துக்குறேன்..
கவிதை மிக அழகு புனிதா!!
கனவுகள் அர்த்தமான கவிதை
Migavum Arumai!
அருமை கவிதைகளை அழகான மழைத்துளிகளாய் கொட்டும் உன் பூங்காவில் ஏன் வெயில் அணல் இப்போது?...(உங்கள் நீண்ட் இடைவெளி)...அடுத்த கவிதை எப்போது?
தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்
செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!!///
என்னங்க
சோகமாக
முடித்துவிட்டீர்கள்!
//கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடுமாறுகிறது ஓர் இதயம்!!!//
அப்பா எத்தனை அழுத்தமான வரிகள்...கலக்கிடீங்க புனிதா ரொம்ப அருமை
//கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடுமாறுகிறது ஓர் இதயம்!!!//
அப்பா எத்தனை அழுத்தமான வரிகள்...கலக்கிடீங்க புனிதா ரொம்ப அருமை
புனிதா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புனிதா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :-))
ஈரமான நினைவுகளில்
இதயத்தை விட்டு வந்தேன்
இளைப்பாறட்டும்..
உங்கள்
கவிதைகள்... என்னுள்
விதைகள் தூவின...
அழகான கவிதைகள் தந்திட..
உங்கள் வலிகளில் உறையும்
வலையில்.. நானும் வழிகிடைத்து
செல்கிறேன்...
வாழ்த்துக்கள்..தோழி..
அருமையான கவிதைகள்..
அடிக்கடி வரவேண்டும் நான்..
அன்புடன் இளங்கோவன், அமீரகம்.
Post a Comment