Wednesday, February 24, 2010

தப்பு பண்ணிட்டேனா?


"உனக்கு என்ன book of recordஇல் இடம்பெறப் போறதா நினைப்பா?"

"போச்சு போ அவங்கம்மா உன்னையும் உன்னோட காரையும் பார்த்திருக்கும்.... போ உனக்கு நல்லா சாபம் கொடுக்க போகுது!!"

"அவன் நான் கலக்கி வச்ச பாலைக் குட்டிக்கவே இல்லையே"

"பிறந்து சில மணிநேரமே ஆன அதுக்கு எப்படி சொந்தமா பால் குடிக்கத்தெரியும்??"

"அய்யோ நான் பெரிய தப்பு பண்ணிட்டேனா?"

"தாய்மை இது புரிந்துக் கொள்ளவே முடியாத உணர்வா?"

நேற்று மாலை எங்க வீட்டு புழக்கடையில் ஓயாத பூனைக்குட்டியின் சத்தம். எங்கிருந்தோ தவறி கால்வாயில் விழுந்துக் கிடந்தது வெள்ளை நிறத்திலொரு பூனைக்குட்டி. பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும். சுற்றிலும் தேடியும் அதன் தாயைக் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை. சரி கால்வாயிலிருந்து மட்டும் எடுத்து வெளியில் விடுவோம் என்ற எண்ணத்தில்தான் எடுத்து வெளியே விட்டு கதவடைத்தேன். இருந்தும் ஓயவில்லை அதன் சத்தம் ஒரு பக்கம்...இடியுடன் கூடிய மழை சாதாரண நாளென்றால் இவ்வளவு சிரத்தையெடுத்திருக்க மாட்டேனோ என்னவோ? ஆனால் மழையில் அது இறந்துவிடுமோ என்ற பச்சாதாபத்தில்தான் எடுத்துக் கொண்டுப் போய் வீட்டின் முன்புறம் விட்டேன். அருகிலுள்ள மலாய்க்காரக் குடும்பங்களில் யாராவது எடுத்துச் செல்ல மாட்டார்களா என்ற எண்ணத்தில்..!!

ம்ஹூம் .. இதுக்கு மேலும் தாங்காதென்று சின்னதொரு பெட்டியில் வைத்து அண்ணன் மகளிடம் கொண்டுப் போன போது பயங்கரத் துப்பு.. உனக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலையென்று.. சரி போனால் போகட்டும் அவனுக்கு பசிக்குமென்று கொஞ்சம் பால் கலக்கி கொண்டு வந்து கொடுத்தும் குடிக்கவேயில்லை. எவ்வளவு முயற்சித்தும் அந்த குட்டிப் பிசாசு அந்தப் பாலை சீண்டவே இல்லை. எனக்கென்னத் தெரியும் அது பவுடர் பால் குடிக்காதென்று. நான் என்ன செய்யட்டும். அக்காவிடம் சொன்னதும் அதுக்கும் சேர்த்து அர்ச்சனை..தாய்ப்பாலுக்கு ஏங்கும் அந்தக் குட்டியிடம் உனக்கு ஏன் இந்த அடாவடின்னு? ச்சே பக்கத்தில் வாயில்லா ஜீவன் கஷ்ட்டப்படும் போது எப்படி பார்த்துட்டு சும்மாயிருப்பது.. நேற்றிரவெல்லாம் அந்தக் குட்டி பிசாசு என்ன செய்ததோ பால் குடித்திருக்குமா..உயிரோடுதான் இருக்கா தெரியவில்லை.. ஆனால் என்னோட தூக்கம் போச்சு.. எனக்கு பூனை பிடிக்கவே பிடிக்காது. ஆனா இது என்னவோ செய்துவிட்டது.. இதுவரைக்கும் பண்ணியிருக்கும் கொலைகள் போதாதுன்னு புதுசா இப்படி வேறு ஆரம்பிச்சிருக்கேன் போல... :-( யாராவது அந்த குட்டிப்பிசாசை கொண்டுப் போய் வளர்க்கணுமே... இப்போக்கூட லெக்சரர் க்ளாஸ் முன்னுக்கு என்னவோ சொல்லிட்டு இருக்காங்க ஆனா எனக்கு பூனைக்குட்டியைத் தவிர எதையும் யோசிக்க முடியல..... நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும் ஆனா அந்தக் குட்டிப்பிசாசு பிழைக்கணும்.. :-( எதுக்கும் க்ளாஸ் முடிஞ்சதும் போய் பார்க்கணும். யாராவது இந்தப் புலம்பலை படிக்க நேர்ந்தால் அந்தக்குட்டி பூனைக்காக பிராத்தித்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ். இந்தப் பூனை வதை குற்றத்திற்கு கருட புராணத்தில் என்ன தண்டனை??

21 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குட்டி பிசாசுன்னா சொன்னே?.. அந்த அம்மா பூனை அதுக்கு சேர்ந்து எதாச்சும் சாபம் விடப்போது :)

சென்ஷி said...

:)

பூனைகள் பழகுறதுக்கு ரொம்ப எளிமையானதுங்க.. அதிகம் திமிர் பிடிச்சதும் கூட... குட்டிப்பூனைகளுக்கு பாலை வெள்ளைத்துணியில் நனைத்து அதன் வாயில் மெல்ல ஒழுக விடவும். மீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

மற்றப்பூனைகளிடமிருந்து அதை மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கவும். பிறந்து சில மணிநேர பூனைக்குட்டிகளை கவர்ந்து சென்று சாப்பிடவும் சில விலங்குகள் உண்டு. வீட்டை விட்டு வெளியே தள்ள வேண்டாம். மூன்று மாதம் வளர்ந்த பின்னும் பிடிக்க வில்லையென்றால் ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு போன் செய்தால் கொண்டு செல்லக்கூடும்.

இவையெல்லாவற்றிற்கும் முன் அந்த அழகான பூனைக்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயரை சூட்டி கூப்பிட்டு அதனுடன் விளையாட ஆரம்பிக்கவும்.

சென்ஷி said...

தயவு செய்து பூனையைப் பற்றி கவிதை எழுதிவிட வேண்டாம். பூனைக்குத் தெரிந்தால் வருத்தப்படும். :)

சென்ஷி said...

//இந்தப் பூனை வதை குற்றத்திற்கு கருட புராணத்தில் என்ன தண்டனை?? //

தமிழ்ப்பட கருடபுராணப்படி சிம்பு படத்தை நாலு தடவை பார்க்கணும். :)

சென்ஷி said...

//எனக்கென்னத் தெரியும் அது பவுடர் பால் குடிக்காதென்று. நான் என்ன செய்யட்டும். //

பூனைக்கு முன்னாடி பவுடர் பால் கலக்காதீங்க.. :)

☀நான் ஆதவன்☀ said...

//எனக்கென்னத் தெரியும் அது பவுடர் பால் குடிக்காதென்று. நான் என்ன செய்யட்டும்//

என்ன பண்ணுங்க இராமராஜன் படத்தை பக்கத்துல வச்சுகிட்டு பால் கொடுங்க... அதுக்கு இது பவுடர் பால் இல்லைன்னு தெரிஞ்சிடுமே :)

☀நான் ஆதவன்☀ said...

//பூனைக்கு முன்னாடி பவுடர் பால் கலக்காதீங்க.. :)//

தெய்வமே நீங்க எங்கேயோ போய்டீங்க :))

☀நான் ஆதவன்☀ said...

//தாய்ப்பாலுக்கு ஏங்கும் அந்தக் குட்டியிடம் உனக்கு ஏன் இந்த அடாவடின்னு//

என்ன கொடுமை இது? பவுடர் பால் குடுக்காதுன்றது தெரியாம போன உங்களுக்கு தாய்ப்பாலுக்கு(தங்கபாலு இல்ல) ஏங்குதுன்றது மட்டும் எப்படி தெரிஞ்சுது?

எதுக்கு சுண்டலிய முன்னால ஓட விடுங்க.. ரியாக்‌ஷன் எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம்

☀நான் ஆதவன்☀ said...

பூனையோட வெர்ஷன்ல இந்த கதைய கேட்டா எப்படி இருக்கும்?

பூனை “தப்பிக்கனும்....இங்கிருந்து தப்பிக்கனும்...என்னைய கடத்தி கொண்டாந்து இங்க வச்சுருக்காங்க.. நானும் எங்கம்மாவும் கண்ணாம்மூச்சி விளையாண்டுட்டு இருக்கும் போது இந்த பயபுள்ள என்னைய கடத்திட்டு வந்து வெள்ளைய ஒரு தண்ணிய கொண்டாந்து கொடுத்து குடுக்க சொல்லுது... அநேகமா பூனைக்கறி சாப்புடுற காட்டுவாசி கும்பல்ன்னு நினைக்கிறேன்.. தப்பிக்கனும்..இங்கிருந்து தப்பிக்கனும். ஆத்தா வையும் வீட்டுக்கு போகனும்..தப்பிக்கனும்”

அவ்வ்வ்வ் க்ரைம் கதை ரேஞ்சுக்குல்ல போகுது..

☀நான் ஆதவன்☀ said...

//இப்போக்கூட லெக்சரர் க்ளாஸ் முன்னுக்கு என்னவோ சொல்லிட்டு இருக்காங்க ஆனா எனக்கு பூனைக்குட்டியைத் தவிர எதையும் யோசிக்க முடியல//

அவ்வ்வ்வ்வ் பாடம் நடத்தும் போது கந்தசாமி படத்துல வர்ர “மியாவ் மியாவ்’ பாட்டு கேட்டு பாடத்தை கவனிக்காம இப்படி காரணமா?

Tamilvanan said...

//எனக்கு பூனை பிடிக்கவே பிடிக்காது. //

முத‌ல்ல‌ பூனை குட்டிக்கு உங்க‌ள‌ பிடிக்குதான்னு பாருங்க‌!

//எனக்கென்னத் தெரியும் அது பவுடர் பால் குடிக்காதென்று. நான் என்ன செய்யட்டும். //

வாட‌கை (பூனை) தாய்ப்பாலுக்கு ஏற்பாடு செய்வ‌து, பூனை குட்டிக்கு ந‌ல‌ம்.

*இயற்கை ராஜி* said...

:-)....


cho chweet of u pa:-)

Anonymous said...

NADAKATUM..

Nadakathum..

naduthunga...

neenga evlo nalavangala????

kadiyila matumthana ella nijathiilum..?

mudivaga padivu arumai..

valga valamudan.

v.v.s
complan surya

பனித்துளி சங்கர் said...

அடப்பாவிகளா பூனை பெயரை சொல்லி அந்த பாலை யாருடா குடித்தது. உங்களை சும்மா விடாது அந்த பூனை !

su said...

ivvalu anbana neengal antha kuttip poonaiyai eppadi kutti pisasu endru koora mudinthathu

Anonymous said...

//su கூறியது...
ivvalu anbana neengal antha kuttip poonaiyai eppadi kutti pisasu endru koora mudinthathu//

நான் எப்போது என்னை அன்பானவள் என்று கூறிக்கொண்டேன் ..அது தங்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். :-(

Princess said...

அன்பு இருந்தால் தானே கோபம் வரும்!

பூனை ஒரு தனி ஈர்ப்பு கொண்ட பிராணி :D

-பதுமை.

Anonymous said...

// Charisma கூறியது...
அன்பு இருந்தால் தானே கோபம் வரும்!

பூனை ஒரு தனி ஈர்ப்பு கொண்ட பிராணி :D//

:-) ம்ம் கொஞ்சம் பந்தா பிடிச்சதும் கூட

www.bogy.in said...
This comment has been removed by a blog administrator.
pavithra said...

super............ super.......
comments rompa super........../பனித்துளி சங்கர்/unga melatan doubt (அடப்பாவிகளா பூனை பெயரை சொல்லி அந்த பாலை யாருடா குடித்தது. உங்களை சும்மா விடாது அந்த பூனை)

Madan said...

heloo punitha hai....ur site is good. and r u really broadcaster??? iam also broadcaster. can i get ur mail. this is MY WEB adress www.paadumean.com. and my mail mathandj@yahoo.com