Friday, December 12, 2008

திருமண நாள்


இன்று காலை 6.30க்கு கைப்பேசி தன்னுடைய அன்றாட கடமையாய் ‘சஷ்டி கவசத்தை’ ஒலிப்பரப்பவும்... வழக்கம்போலவே கம்ஃபோட்டரை இழுத்துப் போர்த்திக் கொள்ள கைகள் எத்தணித்தது... ஆனாலும் இன்றைக்கு அலுவலகத்துக்கான சுடிதாரை ‘அயர்ன்’ செய்யவில்லையே என்ற நினைவு அநியாயமாய் வந்து துன்புறுத்த... எரிச்சலோடு முன்னறைக்கு எழுந்து வரவும்...பக்கத்து வீட்டில் பேரிரைச்சல்.. இது எனக்குப் பழகிப் போனதுதான் இந்த இரண்டு ஆண்டுகளாய்..ஆனாலும் இந்தக் காலைப் பொழுதில் கொஞ்சம் அலுப்பாகவும் இருந்தது.


எனக்குத் தெரிந்து என் பக்கத்து வீட்டுக்காரர் மெதுவாகவே பேசிக் கேட்டதில்லை.. கத்திக் கொண்டேத்தான் இருப்பார் மனைவியிடமும் சரி பிள்ளைகளிடமும் சரி... என் தம்பிக்கூட இவருக்கு மெதுவாக பேசவே முடியாதா அக்கா என்று என்னிடம் பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறான். சில சமயம் “நான் போய் அவருகிட்ட சொல்லப் போறேன், மெதுவா பேசுய்யான்னு” என்று மிரட்டியும் இருக்கிறான். எனக்கு இது ஏற்கனவே பழகிப் போயிருந்ததால் “விடு..எப்படியோ அவருக்குத்தானே பிரஷர் வரப்போகுது” என்று சமாதானப் படுத்த வேண்டியிருக்கும். ஆனால் இன்று காலையில் அவர் மனைவியிடம் சண்டைப் போட்டதற்கான காரணம் ரொம்பவே அல்பமான விசயம். இது எனக்கு எப்படி தெரியுமுன்னா? அதான் முன்னமே சொன்னேன்னே..அவர் பேச மாட்டார் கத்துவார் என்று...


காலையில் அவர் 6.30க்கு வேலைக்குக் கிளம்பும் போது அவர் மனைவி அவருக்குப் பால் கலந்து கொடுக்கவில்லையாம். பாலூத்தாம்ம... விட்டாங்களே மகராசி அதுக்காகவேணும் அவர் அவங்களுக்கு கோயில் கட்டணும்.நான்கூட அயர்ன் பண்ணி முடிச்சிட்டேன் ஆனா அவர் அந்த பால் பல்லவியை விடவேயில்லை..கிட்டதட்ட 20 நிமிடங்கள். எனக்குத் தெரிந்து அவர் மனைவியும் வெளியில் சென்று வேலை பார்ப்பவர்தான்.. ஏதோ மறதி....அல்லது களைப்பு என்று விட்டிருக்கலாம். ஆனா அவர் மனைவியை திட்ட பயன்படுத்திய வார்த்தைகள்தான்... எனக்கும் ரொம்ப நாளாகவே சந்தேகம்தான் இந்த மனுஷன் என்ன ‘சைக்கோ’வா என்று இன்று அது உறுதியாகிடுச்சு. அவர் மகன் வந்து சமாதானப் படுத்தியும் ம்ஹூம் சமாதானமாகவேயில்ல.. எப்படித்தான் அவர் மனைவி அவரோடு ஒத்துப் போறாங்களோ? இத்தனைக்கும் அவங்க அவருக்கு இரண்டாம் தாரம். இவரோட ‘டோச்சர்’ தாங்க முடியாமலே இவருடைய முதல் மனைவி இவரை விட்டு எஸ்ஸாகியிருக்கணும் என்பது என்னுடைய கணிப்பு.


அழகான காலையில் யாராவது மனைவிக்கிட்ட இப்படி சண்டைப் போட்டுட்டு வேலைக்கு கிளம்புவாங்களா? அதுவும் பால் பெறாத விசயத்து..ஆஹா இன்னிக்கு எஸ்கேப்...ன்னு சந்தோஷப்பட்டிருக்க வேண்டாமா? எங்க வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னா அப்பாவே தனக்கு சொந்தமா தேநீர் கலந்துக் கொள்வார். அவருக்கு என் மேல் அவ்வளவு பாசம்....சரி...பயம். :-P சில சமயம் தம்பி அதிகாலையில் 3.00 மணிக்கு வெளியூர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்தால்..அவனுக்கும் அப்பாவே காப்பி கலந்தும் கொடுப்பார். இவ்வளவுக்கு வீட்டில் நான்..அக்கா இருந்தும். :-) சில சமயம் அம்மாவை தள்ளி நிறுத்தி வைத்திட்டு அப்பா சமைப்பார்.. அதுவும் நல்லாயிருக்கும்..


இன்றைக்குக் காலையில் வெகு நேரம் இதுப் பத்தியே யோசனை ஓடிக்கிட்டு இருந்தது. என்னால் அப்படி அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி மாதிரி பொருத்துப் போக முடியுமா என்று... ம்ஹூம் அதுக்குச் சான்ஸே இல்ல.. வேணும்னா சூடான பாலை கொண்டு வந்து அவர் தலையில் கொட்டியிருப்பேன். :-P கற்பனைப் பண்ணிப் பார்த்துச் சிரிச்சுட்டேன். பின்ன என்னங்க தொட்டதுக்கெல்லாம் சண்டைப்பிடிச்சா.. ஊடல்கூட காதல்தான் தாம்பத்யத்தில்.. ஆனா இது ரொம்பவே ஓவரு.. எனக்கெல்லாம் அந்தளவுக்கு சகிப்புத்தன்மை கிடையாது.


சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ எதுக்கு புலம்பறன்னு கேட்டீங்கன்னா... இன்றைக்கு அம்மா.. அப்பாவின் திருமண நாள். இந்தச் சமயத்தில் அவங்களுக்காக பிராத்தித்துக் கொள்கிறேன். வாழ்த்த வயசில்லையே!!!

மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள் அம்மா..அப்பா..!!!

45 comments:

கோபிநாத் said...

\\இந்தச் சமயத்தில் அவங்களுக்காக பிராத்தித்துக் கொள்கிறேன்.\\

நாங்களும் கூட....

anujanya said...

தங்கை புனிதாவின் பெற்றோருக்கு, திருமண நாள் நல் வணக்கங்கள்!

அனுஜன்யா

துளசி கோபால் said...

உங்க பெற்றோர்களின் திருமண நாளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் போல. அதான் அடுத்த வீட்டில்.......

அந்தம்மாவுக்கு இவரோட காட்டுக் கத்தல் ஒருவேளை பழகிப் போயிருக்கும். நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது:-)))))

Unknown said...

அக்கா என் வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் போல. அதான் அடுத்த வீட்டில்.......//

துளசி ஆனாலும்.. இப்படி ...:)))))

புனிதா உங்க அம்மாஅப்பாவுக்கு வாழ்த்துக்கள்..

அப்பறம் அந்த கற்பனை சூப்பருங்க.. பால் சூடா தலையில் ஊத்தற கற்பனை.. :))

நான் said...

நான் வாழ்த்துகிறேன்
ஆணாதிக்கமனோபாவத்தை அழகாக சொல்லிஇருக்கிறீர்கள்,
ஆனாலும் இவ்வளவு கோபம் உங்களுக்கு வேண்டாமே
நன்றி

Poornima Saravana kumar said...

உங்கள் பெற்றோர்களின் திருமண நாளுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்:))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சகோதரி இனியவள் புனிதா,
பதிவு நன்று,
உங்கள் பெற்றோருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
திருமண நினைவு நாள் என்பதை விட, திருமண நாள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும். முடிந்தால் மாற்றவும்.

Maddy said...

அம்மா அப்பாக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani said...

உங்கள் பெற்றோர்களின் திருமண நாளுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்:

கிரி said...

//வேணும்னா சூடான பாலை கொண்டு வந்து அவர் வாயில் இல்லை தலையில் கொட்டியிருப்பேன்//

ஐயைய்யோ ...

உங்க பெற்றோரின் திருமண நாளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

Anonymous said...

//கோபிநாத் கூறியது...
\\இந்தச் சமயத்தில் அவங்களுக்காக பிராத்தித்துக் கொள்கிறேன்.\\

நாங்களும் கூட....//

நன்றி கோபி :-)

Anonymous said...

//அனுஜன்யா கூறியது...
தங்கை புனிதாவின் பெற்றோருக்கு, திருமண நாள் நல் வணக்கங்கள்!

அனுஜன்யா//

மிக்க நன்றி அனு அண்ணா :-)

Anonymous said...

//துளசி கோபால் கூறியது...
உங்க பெற்றோர்களின் திருமண நாளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் போல. அதான் அடுத்த வீட்டில்.......

அந்தம்மாவுக்கு இவரோட காட்டுக் கத்தல் ஒருவேளை பழகிப் போயிருக்கும். நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது:-)))))//

வணக்கம் துளசி மேடம். முதல் தடவை வந்திருக்கீங்க :-D மிக்க நன்றி வருக்கைக்கும் வாழ்த்துக்கும்..!!!

என்னத்தான் பழகிப்போயிருந்தாலும்... எனக்குக்கூட சில சமயம் சந்தேகமா இருக்கும்..உணர்சிகள் செத்துப் போயிருச்சா என்று.. ஆனாலும் நீங்க சொல்வதுதான் சரி..நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது அப்படின்னு விட்டுவிட வேண்டியது..பேரன் பேத்தி எடுத்தும் திருந்தாதவர் இப்போது திருந்தப் போகிறாரா என்ன..

Anonymous said...

//ஸ்ரீமதி கூறியது...
அக்கா என் வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க..//

நன்றி செல்லம் :-P

Anonymous said...

//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் போல. அதான் அடுத்த வீட்டில்.......//

துளசி ஆனாலும்.. இப்படி ...:)))))

புனிதா உங்க அம்மாஅப்பாவுக்கு வாழ்த்துக்கள்..//

நன்றி அக்கா வாழ்த்திற்கு :-)

//அப்பறம் அந்த கற்பனை சூப்பருங்க.. பால் சூடா தலையில் ஊத்தற கற்பனை.. :))//

ம்ம்ம் என்னால்ல கற்பனை மட்டும்தானே பண்ண முடியும் :-)

Anonymous said...

//நான் கூறியது...
நான் வாழ்த்துகிறேன்
ஆணாதிக்கமனோபாவத்தை அழகாக சொல்லிஇருக்கிறீர்கள்,
ஆனாலும் இவ்வளவு கோபம் உங்களுக்கு வேண்டாமே
நன்றி//

அதுக்காக பெண்ணீயம் பேசுறேன்னு தப்பா எடுத்துகாதீங்க ப்ளீஸ்...கோபம் என்று சொல்வதைவிட ஆதங்கம்..புலம்பல்ன்னு சொல்லலாம் :-)

Anonymous said...

//PoornimaSaran கூறியது...
உங்கள் பெற்றோர்களின் திருமண நாளுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்:))//

நன்றி பூர்ணி :-)

Anonymous said...

//ஜோதிபாரதி கூறியது...
சகோதரி இனியவள் புனிதா,
பதிவு நன்று,
உங்கள் பெற்றோருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
திருமண நினைவு நாள் என்பதை விட, திருமண நாள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும். முடிந்தால் மாற்றவும்.//

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..திருத்தி விட்டேன் :-)

Anonymous said...

//Maddy கூறியது...
அம்மா அப்பாக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா :-)

Anonymous said...

//கண்மணி கூறியது...
உங்கள் பெற்றோர்களின் திருமண நாளுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்:)//

வணக்கம் கண்மணி. நீங்களும் முதல் தடவை வந்திருக்கீங்க..வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க :-)

Anonymous said...

//கிரி கூறியது...
//வேணும்னா சூடான பாலை கொண்டு வந்து அவர் வாயில் இல்லை தலையில் கொட்டியிருப்பேன்//

ஐயைய்யோ ...

உங்க பெற்றோரின் திருமண நாளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்//

ஹை!!!கிரி நீங்களும் மொத தடவ வந்திருக்கீங்க..நன்றிங்க வாழ்த்திற்கு :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

அப்பா அம்மாவுக்கு வாழ்த்துகள்... பக்கத்து வீட்டு பிரச்சனைய பதிவுல சிரிக்க வச்சதுக்கு கண்டனங்கள்...

Anonymous said...

வணக்கம்,

உங்கள் பெற்றோருக்கு, எமது பிரார்த்தனைக்ள்.வாழ்க வளமுடன்.

MSK / Saravana said...

என் வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க.. :)

நான் said...

புனிதா பெண்ணியம் பேசுவது தவறல்ல
நான் கோபம் என்றது (வேணும்னா சூடான பாலை கொண்டு வந்து அவர் தலையில் கொட்டியிருப்பேன்) இதைதானே தவிர வேறல்ல உங்கள் பெண்ணியம் பற்றிய பார்வை எழுத்து தொடரட்டும்

Anonymous said...

//VIKNESHWARAN கூறியது...
அப்பா அம்மாவுக்கு வாழ்த்துகள்... பக்கத்து வீட்டு பிரச்சனைய பதிவுல சிரிக்க வச்சதுக்கு கண்டனங்கள்...//

நன்றி விக்கி..அதுப்போல் நானும் வாழ்த்திக் கொள்கிறேன் நாளைய பதிவர் சந்திப்பிற்கு :-)

Anonymous said...

//பிரேம் கூறியது...
வணக்கம்,

உங்கள் பெற்றோருக்கு, எமது பிரார்த்தனைக்ள்.வாழ்க வளமுடன்//

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரேம் :-)

Anonymous said...

// Saravana Kumar MSK கூறியது...
என் வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க.. :)//

நன்றி சரவணா :-)

Anonymous said...

//நான் கூறியது...
புனிதா பெண்ணியம் பேசுவது தவறல்ல
நான் கோபம் என்றது (வேணும்னா சூடான பாலை கொண்டு வந்து அவர் தலையில் கொட்டியிருப்பேன்) இதைதானே தவிர வேறல்ல உங்கள் பெண்ணியம் பற்றிய பார்வை எழுத்து தொடரட்டும்//

அது வெறும் கற்பனை மட்டும்தாங்க..பூக்களைப் பறிக்கவே கைகள் நடுங்குகிறவள் நிச்சயமா இது மாதிரி செய்ய மாட்டேன்.!!!

நான் said...

நன்றிங்க, வாழ்த்துகள்

மு.வேலன் said...

வாழ்க வளமுடன்!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அப்பா அம்மாவுக்கு :)


//அப்பறம் அந்த கற்பனை சூப்பருங்க.. பால் சூடா தலையில் ஊத்தற கற்பனை.. :))///


எல்லாருமே செம டெரராத்தான் ”திங்க்”கிறாங்கோ ! :))))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துவதற்கு வயது ஒரு தடையில்லை

மனமே போதும்.

பல வீடுகளில் தந்தை தான் ஹீரோ,

நம்ம வீட்லயும் தான்.

நல்ல பெற்றோரை பெற்றோர் வாழ்வு சுகமே.

Princess said...

இனியவள் புனிதா, உங்க பெற்றோரின் திருமண நாளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!!! :))

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
உங்கள் பக்கத்து வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் காமெடியாக உள்ளது... பாவம் நீங்கள்...

Anonymous said...

//மு.வேலன் கூறியது...
வாழ்க வளமுடன்!//

நன்றிங்க :-)

Anonymous said...

//ஆயில்யன் கூறியது...
வாழ்த்துக்கள் அப்பா அம்மாவுக்கு :)


//அப்பறம் அந்த கற்பனை சூப்பருங்க.. பால் சூடா தலையில் ஊத்தற கற்பனை.. :))///


எல்லாருமே செம டெரராத்தான் ”திங்க்”கிறாங்கோ ! :))))//

:-)

Anonymous said...

//அதிரை ஜமால் கூறியது...
வாழ்த்துவதற்கு வயது ஒரு தடையில்லை

மனமே போதும்.

பல வீடுகளில் தந்தை தான் ஹீரோ,

நம்ம வீட்லயும் தான்.

நல்ல பெற்றோரை பெற்றோர் வாழ்வு சுகமே.//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!!!

Anonymous said...

//ஸாவரியா கூறியது...
இனியவள் புனிதா, உங்க பெற்றோரின் திருமண நாளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!!! :))//

நன்றி ஸாவரியா!!!

Anonymous said...

//து. பவனேஸ்வரி கூறியது...
வணக்கம்,
உங்கள் பக்கத்து வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் காமெடியாக உள்ளது... பாவம் நீங்கள்...//

ம்ம்ம் :-)

பிரியமுடன்... said...

Hi....Pls convey my belated wishes to your Parents first and best wishes to u also dear!

வாங்க இப்ப பக்கத்துவீட்டு பால்காரன் கதைக்கு போவோம்!

அது என்ன காலையில் எழுந்து பால்! இரவில் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பால் சாப்பிடுவது நல்லது! காலையிலேயே பாலு அதுக்கு ஒரு சண்டை வேற சண்டாலனுக்கு!

இப்படியே தொட்டதுக்கெல்லாம் சண்டை போட்டால், ஹைபர் டென்சன் வந்து.....கடைசியில் எல்லோரும் பால் ஊற்றும் நிலை வந்தாலும் வந்துவிடும் சொல்லி வையுங்கள்!! இனிமேல் பாலுக்கு சண்டை போட்டால், கள்ளிப்பால் கால் லிட்டர் வாங்கி காய்ச்சி வைக்கச் சொல்லுங்கள் அந்த மகராசியை!

logu.. said...

\\காலையில் அவர் 6.30க்கு வேலைக்குக் கிளம்பும் போது அவர் மனைவி அவருக்குப் பால் கலந்து கொடுக்கவில்லையாம். பாலூத்தாம்ம... விட்டாங்களே மகராசி அதுக்காகவேணும் அவர் அவங்களுக்கு கோயில் கட்டணும்.\\


ramba dangerous womena irukkeengale...

logu.. said...

unga parentsukku
my wishes...

Thiruu00 said...

உங்களின் படைப்புகளில் ஈர்ப்புக்கு பஞ்சமில்லை. என்னுடைய வாழ்த்துக்கள்.