Friday, December 19, 2008

கடவுள்...காதல்...நாரதர்

இவ்வளவு நாள் சுமந்த வலி... இன்னிக்கு கடைசியா அனுபவிச்சிடுறேன் நாளைக்கு வழக்கம்போல் உன் கூட சண்டை போட ஆரம்பிச்சிடுவேன் கோபப்படுவேன்

ஏதோ முன் ஜென்மத்துல நான் நிறைய புண்ணியம் செஞ்சுட்டேன்னு நினைக்குறேன் அதான் இந்த தடவை உங்கிட்ட மாட்டிக்கிட்டேன்

ஏன்...இனிமே இல்ல

அப்ப இனிமே சண்ட போட மாட்டீயா?

சந்தோஷம்தானே?

இல்ல சோகம் தான் நீ சண்டை போட்டாத்தான் எனக்கு சந்தோஷம் நீ கோவப்படலைன்னா எனக்கு அன்னிக்கு வேலை ஓடாது. ஆக நீ தாராளமா சண்டை போடலாம்.. கோவிசுக்கலாம்...கவிதை எழுதலாம்

தெரியலையே..என்னையே நான் இழந்துக் கொண்டிருக்கேன்

நான் அப்புறம் நிசமாவே உன்னை திட்டிடுவேன். உன்னோட சுயத்தை என்னிக்கும் இழக்க தேவையில்ல எனக்குத் தெரியும் நீ தைரியமான பொண்ணு...ஆனா உண்மைதான் எனக்கும் வலிக்குது என்னோட வலிதானே உனக்கும் இருக்கும்னு யோசிச்சா நீ சொல்றது சரிதான்னு தோணுது

நன்றி இந்த புரிதலுக்கு

அதுக்காக நீ அழுதா எனக்குப் பிடிக்காதே ரொம்ப அசிங்கமா இருக்குமே முகம்

நான் அழவே இல்ல ஒரு வேளை அழுதா மன பாரம் இறங்கிடுமோ என்னவோ

மனசுல பாரம் குறையும்னு நினைச்சு அழுதா ஓக்கே, ஆனா அதையே பாரமா தூக்கி சுமக்குறா மாதிரி இருந்தா கஷ்டம்

ம்ம்ம் வலி இருக்குது..ஆனா அழுகை வரல...ஏன் கவிதைக்கூட வரல

ஒரே ஒரு தடவ உன்னை லூசுன்னு திட்டிக்கட்டா

உண்மை அதானே

அதெல்லாம் இல்ல... நான் சும்மா கலாய்ச்சேன்ஆமாம் நீ மாத்திரம்தான் என்னைய கலாய்ப்பியா நானும் உன்னைக் கலாய்ப்பேன்

ம்ம் சொல்ல மறந்துட்டேன்...சாரி நேத்து தப்பா பேசிட்டேன் இல்லையா

நானே உங்கிட்ட சாரி கேக்கணும்னு நினைச்சேன் ச்சும்மா உன்னைக் கலாய்ச்சுட்டேன்...சாரி! அது ரொம்ப மனசு சரியில்ல...அதான் பீர் அடிக்கலாமுன்னு நெனைச்சு ஆனா அத உங்கிட்ட சொல்வான்னு எனக்குத் தெரியாது. எனக்கு வேற பயம் நீ ஏதாவது கோச்சுப்பீயோன்னு...கோபம்
இல்லியே

ம்ம் கோபம்தான் ஆனா அதுக்கு உரிமையில்லன்னு புரியாம்மா உன்னோட அனுமதியற்ற எல்லையை மீறிட்டேன்.. இனி இல்லை

அப்ப நான் இன்னிக்கு மறுபடி பீர் அடிக்கட்டுமா

அது உன் இஷ்டம்

கோச்சுட்டீயா?

எனக்கு எந்த வித கோபமும் இல்லை

எதுக்கு கோபம் இல்ல

அந்த பயணங்கள் முடிவதில்லை படத்துல்ல மோகன் பாடும் பாட்டு என்ன?

அந்த படத்துல எல்லா பாட்டையும் மோகன் தான் பாடுவாரு எந்த பாட்டு முதல் பாட்டா

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காலமே வானமே வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வான வீதியில் வெள்ளி ஊர்வலம் போகும் போதிலே ஆறுதல் தரும் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

போதுமே!!!

எனக்கு இந்த பாட்டு மனப்பாடம் அதான் உடனே பாடிட்டேன்

உங்கிட்ட அந்தப் பாட்டு இருக்கா?

எது இந்த பாட்டா இல்ல ஆனா நெட்ல இருக்கும்ன்னு நினைக்குறேன்...
நான் கவிதை எழுதி இனிமே யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டேன்

ஏன்?

நீயே எழுதாதப்ப நான்லாம் எந்த மூலைக்கு

எனக்கு .....ப்ப்ப்ச்ச்... கண் இமைகள் கைத்தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே...உன் செவியில் விழவில்லையா...உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே - இந்த பாட்டுல்ல ரொம்ப பிடிச்ச வரி ஆனா எல்லா வரியும் பிடிக்கும்

உண்மையிலேயே நல்ல பாட்டு எனக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு.. ஒரு கவிதை சொல்லேன்

என்னோடதா

இல்ல நீ படிச்ச உனக்கு ரொம்பவும் பிடிச்ச கவிதை சொல்லு

பிரிவு உன் நினைவுகளை
உருப்பெருக்கிக் காட்டுகையில்
சிறிதிலும் சிறிதாய்
சிறுத்துப் போகின்றன
உன் குற்றங்களும்
என் கோபங்களும்...

காயத்ரியோட கவிதையிது

உச்சரிக்க விரும்பா உதடுகள்
இப்போது மெளனம்
பேசப் பழகுகின்றன.
நினைவுகள் உரசிக் கொண்டதில்
மெதுவாய் வெந்து தணிகிறது காடு.... இதுவும் காயத்ரியோடதுதான்

நான் பெரிய தப்பு பண்ணியிருக்கேன்... உன்னிடம் பேசியது நீ யாருன்னே தெரியாமல் இப்போ என்கிட்ட மாட்டிக்கிட்ட

இப்ப தெரிஞ்சுடுச்சுல்ல இனி பேசாதே

ம்ம்ம்... இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் கூட எழுதலாம்

ஆனா நான் கமெண்ட் பண்ணமாட்டேன்

ஏன்...என்னாச்சு?

ஏன்...நீ கூடத்தான் என்னோட துயர்மிகு வரிகள்ல பங்கெடுத்துக்கல

ரெண்டு ஏனுக்கும் ஏழு வித்தியாசமிருக்கு

ஹா ஹா ஹா

ம்ம்ம்... அது...அப்போ நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்தேன்

ஆமா நாங்க பயங்கர ஸ்டடியா டான்ஸ் ஆடிட்டு சந்தோஷமா இருந்தோம்
நீ உண்மையிலேயே நான் உன்னை காதலிப்பேன்னு எதிர்ப்பார்க்கலையா??

இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன் ஆனா நினைக்கிறது என்னிக்கு நடந்திருக்கு பிடிச்ச பழைய பாட்டு ஒன்னு இருக்கு நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

சரி நம்ம சந்தோஷத்துக்காக என்னால ஒண்ணுதான் செய்ய முடியும் ஒன்னு நீ என்கிட்ட பேசாம இருக்கணும் இல்ல நான் உன் கூட பேசாம இருக்கணும்

ம்ம்ம்ம்

எனக்கும் ரொம்ப கஷ்டம்தான்

முடியுமா???

தெரியல

இந்த ஒரு நாளில் முடிஞ்சதா?

சும்மா மத்தவங்ககிட்ட நீ வந்தியா.. வந்துட்டு போயிட்டீயான்னு கேக்க முடியல... கஷ்டமா இருக்குது... இல்ல முடியல.. எவ்வளவோ டிரை செஞ்சேன் உன் கூட பேசாம இருக்க சத்தியமா முடியல... உனக்கு என்னை பிடிக்கலையா? விரும்பலையா?

நீ கொஞ்சம் நல்லவன்

ஜோக் வேணா சீரியசா சொல்லு

என்ன?

பிரிஞ்சுடலாம்ன்னு சொல்றதுக்கு கூட தப்பா தோணுது

எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்... அம்மாவை உனக்குப் பிடிக்காதா..நீயும் அந்த மாதிரிதான் எனக்கு அதனாலத்தான் சண்டைப் போடுறேன்..வம்பிழுக்கிறேன்..

ஒத்துக்கறேன்...ஆனா நான் உன் கூட வாழ விரும்பறேன்... கல்யாணம் செஞ்சுக்கிட்டு

ப்ளீஸ் இந்த பேச்சு வேண்டாமே

நமக்குள்ள நிறைய வித்தியாசம் இருக்குது!!!
இல்ல பிரிஞ்சுடுவோம்ன்னு சொல்றதுக்கும் முடியல பின்ன ஏன்?

அன்னிக்கு நீ சொன்னப்ப நான் கொஞ்ச நேரம் சைலண்ட்டா ஆகிட்டேன் தெரியுமா..நீ போன பிறகு அழுதேன்..சத்தியமா... நான் உன் கிட்ட ஏதாவது தப்பா பழகிட்டேன்னோன்னு குற்ற உணர்ச்சி

அப்ப என்னை பிடிக்கலைன்னு நான் எடுத்துக்கட்டா

ப்ளீஸ்...

நான் தான் தப்பா நினைச்சுட்டு இருந்தேன்னு நினைச்சுக்கறேன் உண்மையிலேயே என்னால தூங்க முடியல...சாப்பிட பிடிக்கல ஏன் உங்கிட்ட பழகுனேனோன்னு தோண வைக்குது... உன் மேல தப்பில்ல நானா ஏற்படுத்திக்கிட்ட சூழல்தான் இது

எனக்குத் தெரியாமலே இருக்கட்டுமே...

நான் அனுபவிக்கிறேன்... அவ்வளவுதான்

ம்ம்ம் கொஞ்ச நாள் போனா பழகிடும்

கடைசி வரைக்கும் நான் சொல்லக்கூடாதுன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன்
ஆனா முடியல நானே அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கல... சொல்லிட்டேன்
நீ உன் விருப்பத்தை சொல்லிட்ட... விட்டுருக்கலாம்... அத்தோட முடியல இன்னிக்குப்பூரா உங்கிட்ட பேசக்கூடாதுன்னு உட்கார்ந்திருந்தேன்... மத்தவங்க கிட்டத்தான் பேசிட்டு இருந்தேன்

தெரியும்!!! நானும் பேசக்கூடாதுன்னுதான் நினைச்சேன்

ஆனாலும் முடியல...தெரியல என்னோட கோபம், பிடிவாதம் எங்க போச்சுன்னு தெரியல

என்ன சொல்றதுன்னு தெரியல்ல

உண்மையிலேயே என்னை விரும்பலையா.. இல்ல சமூகத்த நினைச்சு மாட்டேன்னு சொல்றீயா.. நான் இந்து, நீ கிறிஸ்டியன்னு..அப்படி பாத்தா உன்னோட பிரண்டு இந்து கிறிஸ்டியனை கல்யாணம் செஞ்சுக்கலையா?

அவளோடது லவ் மேரேஜ்

நான் உன்னை ரொம்ப முன்னாடியே விரும்ப ஆரம்பிச்சுட்டேன். நான் உன்னை காதலிச்சுடக்கூடாதுன்னு கூட கட்டுப்பாடு விதிச்சுட்டு இருந்தேன் ஆனா மனசு கேக்கல நாம ரெண்டு பேரும் கண்டிப்பா சேர முடியாதுன்னா எதுக்கு வேஷம் போடனும் சும்மா...முடியாதா முடியாது ஓக்கே பை அவ்ளோதான்

மனசுக்கு முக்கியம் கொடுத்து வாழ்க்கையை தொலைச்சிடாத அதிலும் நாம்ம கடைசியா சந்திக்கிறோம்... ஏன் அவ்வளவு சீக்கிரமா போகணும் அப்புறம் நீயே விருப்பப் பட்டாலும் இது நேராது

எனக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சிடுச்சு... சொந்த ஊருக்கே போறேன்.. போறத்துக்கு முன்னாடி உன்னை கடைசியா பார்க்கனுமுன்னு தோணிச்சு... அதான் உனக்குப் பிடிச்ச காப்பி ஷாப்புக்கு கூப்பிட்டேன் ஆனா உங்கிட்ட இருந்து எஸ்.எம்.எஸ்ஸையேக் காணோம்

அப்ப நாளையிலிருந்து என்கிட்ட சண்டைப் போடுவேன்னு சொன்னது பொய்தானா? என் மனசு மாறுமான்னு தெரியல.. மாறனுங்கற அவசியமும் இல்ல இப்படியே இருந்துடலாமுன்னு தோணுது இது என்னோட வாழ்க்கைன்னு முடிவானப்பிறகு என்னோட முடிவாத்தான் இருக்கும்

மாறுவது மனம்... உனக்கான ஒருத்தி ஏற்கனவே எங்கேயோ பிறந்து உனக்காக காத்திருக்கா..நீதான் இனி அவளை தேடிக் கண்டுப்பிடிக்கனும்

அவ கிடைக்காம போயிட்டான்னு நினைச்சுக்கறேன்...
அது நீதான்னு என் மனசு சொல்லுது அது தப்பா சொல்லாது

உனக்கும் எனக்கும் நிறைய வேறுபாடு... இன்னிக்கு இல்லாட்டியும் நாளைக்கு யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்.. இன்ஃபாக்ட் என் வீட்லயும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடாங்க... ஆனா நீ மட்டும் இப்படியே இருந்திடக் கூடாது!!!

உனக்கு என் வாழ்த்துக்கள்.. அன்பான அழகான உன் மனசுக்கு பிடிச்ச கணவர் வரணுங்கறது என்னோட சாபம்.. அவருக்கு உன் கவிதைகள் ரொம்ப பிடிச்சுருக்கணும் உன்னை பாராட்டணும். உங்கூட அன்பா இருக்கணும்
அது போதும்... நிறைய்ய குழந்தைங்க பொறந்து நல்லா வளர்த்து நல்லா படிக்க வை...

ஏன் கிழவன் மாதிரி பேசுற

இனிமேல் நாம ஒருத்தருக்கொருத்தர் சந்திச்சுக்கப்போறதில்ல
இது என்னோட உனக்கான கல்யாண வாழ்த்தாவும் இருக்கட்டும்

ம்ம் சரி நான் கிளம்பட்டா

நான் நிறைய கவிதை எழுதுவேன் நீ கமெண்ட் போடக்கூடாது... அதை பாராட்டக்கூடாது

ம்ம்ம்... ஆனா நான் கண்டிப்பா படிப்பேன்

ம்ம்ம்... படிக்கணும் ஆனா கமெண்ட்ஸ் வேண்டாம்... நானும் உன்னோடது படிப்பேன்

இனி நான் எழுதப் போறதில்ல

ஏன்??? சரி உன் இஷ்டம்.. ரொம்பவும் கஷ்டமா இருந்தா கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோ... ஆனா எழுதாம்ம இருக்காத

பார்க்கலாம்... கடைசியா ஒன்னு சொல்ல விரும்புறேன்

ம்ம்ம்

எனக்கு நிச்சயிக்கப்பட்ட நண்பன் நீ... என் மனசுக்கும் ரொம்ப பிடிச்ச நண்பனும் நீ!!!

நான் அந்த தகுதிய இழந்துட்டேன்னு தோணுது

சந்தோஷமா இரு... நான் வேண்டிப்பேன்..உனக்காக எப்போதும்... பை

உனக்கான என் நேசம் என்னிலேயே புதைந்து போகட்டும்..
பை... வில் மிஸ் யூ!!! டேக் கேர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இவர்களின் உரையாடலை வெகு தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கடவுள் நாரதரிடம், " காதல் என்ன அவ்வளவு கொடுமையானதா நாரதா?"

"அதை சிருஷ்டித்தவரே கேட்பதுதான் கொடுமை"

"அவள் இதயத்தில் அவனுக்கான காதலை விதைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது"

நாரதர் பேசவில்லை புன்னகை மட்டுமே பதிலாய்!!!

50 comments:

பிரியமுடன்... said...

அடக் கடவுளே...இது என்ன கதையா? அது தெரியாம ரொம்ப சீரியஸாக படித்தேனே....உங்க உண்மை கதையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் கடைசியில் கடவுளை கொண்டுவந்து கதையாக்கிவிட்டீர்கள்....யார்கண்டது உண்மையாகக் கூட இருக்கலாம்!
இது உண்மையாக இருந்தால் ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்! ஒன்று! ஹி..ஹி..ஹி...

Unknown said...

யக்கா முடியல.. :)) ரொம்ப நல்லா இருந்தது.. :))

Unknown said...

அவரும் பிளாக்கரா?? ;))))))

ஆயில்யன் said...

செம டெரரா இருக்கு!


பேக் கிரவுண்டு செவப்பு கலரூ அதை கொஞ்சம் மாத்துங்கோ பாஸ் :(((

ஆயில்யன் said...

//நான் அப்புறம் நிசமாவே உன்னை திட்டிடுவேன். உன்னோட சுயத்தை என்னிக்கும் இழக்க தேவையில்ல எனக்குத் தெரியும் நீ தைரியமான பொண்ணு...ஆனா உண்மைதான் எனக்கும் வலிக்குது என்னோட வலிதானே உனக்கும் இருக்கும்னு யோசிச்சா நீ சொல்றது சரிதான்னு தோணுது///

சூப்பரூ !

ஆயில்யன் said...

ஒரே ஒரு தடவ உன்னை லூசுன்னு திட்டிக்கட்டா


சொல்லுங்க
ப்ளீஸ்....?

(தங்கச்சியை எம்புட்டு தடவை வேணும்னாலும் திட்டலாம்தான் பட் பிராப்பர் பர்மிஷன் வாங்க்கிக்கோணும்!)

ஆயில்யன் said...

முழுமையாய் படித்ததில்

கொஞ்சம் கோபம்

கொஞ்சம் வருத்தம்

கொஞ்சம் சந்தோஷம்

எல்லாம் கலந்திருந்தது என் மனத்தில்

//அவள் இதயத்தில் அவனுக்கான காதலை விதைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது"
//

சொல்லமுடியாது - விதைக்கப்பட்டிருக்கவும் கூடுமன்றோ! :)))


சூப்பர் தங்கச்சி கலக்கீட்டீங்க போங்க !

கோபிநாத் said...

1 ;))

கோபிநாத் said...

கடவுள் அந்த பெண்ணின் மனதில் காதல் விதையை விதைத்து நாரதர் மூலமாக எங்களுக்கு தெரிய படுத்தியிருக்கிறார் ;)))

வாழ்க வளர்க ;))

அன்புடன் அருணா said...

என்னப்பா புனிதா....ஒரு வினாடி மூச்சு விடாமல் படித்தேன்...ரொம்ப அழகான யதார்த்தமான வரிகள்...ரொம்பப் பிடித்திருந்தது.
அன்புடன் அருணா

மு.வேலன் said...

கதை அருமை. இந்த கதை பிறந்த கதையை சற்று கூறலாமே...

Poornima Saravana kumar said...

//அன்னிக்கு நீ சொன்னப்ப நான் கொஞ்ச நேரம் சைலண்ட்டா ஆகிட்டேன் தெரியுமா..நீ போன பிறகு அழுதேன்..சத்தியமா... நான் உன் கிட்ட ஏதாவது தப்பா பழகிட்டேன்னோன்னு குற்ற உணர்ச்சி//

நட்புக்கும், காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க.. அது எல்லாருக்கும் தெரிவதில்லை, அது அவங்க தப்பும் இல்லை..

Poornima Saravana kumar said...

கதை நல்லா இருக்கு.. ஆமா இது நிஜ கதையா இல்லை கற்பனையா??

Divya said...

ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது புனிதா பதிவு:))

நல்லா எழுதியிருக்கிறீங்க!

Divya said...

Template.......colur kannu koosuthu Punitha, padika kashtama irukku, konjam change panna mudiyuma??

நான் said...

புனிதா வெகு அருமை
காதல் உணர்வு இருந்தது
உரையாடல் வழியாக உணர்வை சொல்லியிருக்கிறீர்கள்
வாழ்த்துகள் நன்றி

Subha said...

Punitha..arumayaaa irunthuchu..:)

புதியவன் said...

//ம்ம்ம் வலி இருக்குது..ஆனா அழுகை வரல...ஏன் கவிதைக்கூட வரல//

இது தாங்க உண்மை...

Anonymous said...

//பிரியமுடன்... கூறியது...
அடக் கடவுளே...இது என்ன கதையா? அது தெரியாம ரொம்ப சீரியஸாக படித்தேனே....உங்க உண்மை கதையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் கடைசியில் கடவுளை கொண்டுவந்து கதையாக்கிவிட்டீர்கள்....யார்கண்டது உண்மையாகக் கூட இருக்கலாம்!
இது உண்மையாக இருந்தால் ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்! ஒன்று! ஹி..ஹி..ஹி...//

வருகைக்கு நன்றிங்க பிரேம்... இது வெறும் புனைவு மட்டுமே :-)

Anonymous said...

//ஸ்ரீமதி கூறியது...
யக்கா முடியல.. :)) ரொம்ப நல்லா இருந்தது.. :))//

நன்றி மதி :-P

//ஸ்ரீமதி கூறியது...
அவரும் பிளாக்கரா?? ;))))))//

கிர்ர்ர்ர்ர்ர்ர் ஏன் இந்தக் கொல வெறி... கீழே புனைவு என்றுதானே வகைப்படுத்தியிருக்கேன்!!!!!!!

Anonymous said...

//ஆயில்யன் கூறியது...
செம டெரரா இருக்கு!
பேக் கிரவுண்டு செவப்பு கலரூ அதை கொஞ்சம் மாத்துங்கோ பாஸ் :(((//

என்ன ஆயில்ஸ் இது??? ஆசையா போட்டா இப்படி சொல்லுதீக :-(((

Anonymous said...

//ஆயில்யன் கூறியது...
//நான் அப்புறம் நிசமாவே உன்னை திட்டிடுவேன். உன்னோட சுயத்தை என்னிக்கும் இழக்க தேவையில்ல எனக்குத் தெரியும் நீ தைரியமான பொண்ணு...ஆனா உண்மைதான் எனக்கும் வலிக்குது என்னோட வலிதானே உனக்கும் இருக்கும்னு யோசிச்சா நீ சொல்றது சரிதான்னு தோணுது///

சூப்பரூ !//

நன்றிங்க :-)))

Anonymous said...

//ஆயில்யன் கூறியது...
ஒரே ஒரு தடவ உன்னை லூசுன்னு திட்டிக்கட்டா


சொல்லுங்க
ப்ளீஸ்....?

(தங்கச்சியை எம்புட்டு தடவை வேணும்னாலும் திட்டலாம்தான் பட் பிராப்பர் பர்மிஷன் வாங்க்கிக்கோணும்!)//

நீங்களும் பயங்கர டெரரா இருப்பீக போல... :-( அவன் அவளை திட்டுறான் சரி...ஆனா இதில் நான் எங்கிருந்து வந்தேன் ம்ம்ம் :-))

Anonymous said...

//ஆயில்யன் கூறியது...
முழுமையாய் படித்ததில்

கொஞ்சம் கோபம்

கொஞ்சம் வருத்தம்

கொஞ்சம் சந்தோஷம்

எல்லாம் கலந்திருந்தது என் மனத்தில்

//அவள் இதயத்தில் அவனுக்கான காதலை விதைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது"
//

சொல்லமுடியாது - விதைக்கப்பட்டிருக்கவும் கூடுமன்றோ! :)))


சூப்பர் தங்கச்சி கலக்கீட்டீங்க போங்க !//

அச்சோ... ஏன் அண்ணா உங்களுக்கு இவ்வளவு கோபம்... வருத்தமெல்லாம்... லூசுல்ல விடுங்க :-)))

Anonymous said...

//கோபிநாத் கூறியது...
1 ;))

ஜஸ்ட் மிஸ்..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-))

கடவுள் அந்த பெண்ணின் மனதில் காதல் விதையை விதைத்து நாரதர் மூலமாக எங்களுக்கு தெரிய படுத்தியிருக்கிறார் ;)))

வாழ்க வளர்க ;))

கிர்ர்ர்ர்ர் ஏன் கோபி என்னோட கதையையே மாத்துறீங்க.. :-) நாரதர் மூலமா நான் சொல்ல நினைத்தது.... அவள் இதயத்தில் அவனுக்கான காதலை விதைக்கவில்லையே என்பதுதான் :-(

Anonymous said...

//அன்புடன் அருணா கூறியது...
என்னப்பா புனிதா....ஒரு வினாடி மூச்சு விடாமல் படித்தேன்...ரொம்ப அழகான யதார்த்தமான வரிகள்...ரொம்பப் பிடித்திருந்தது.
அன்புடன் அருணா//

நன்றிங்க அருணா வருகைக்கும் கருத்துக்கும் :-))

Anonymous said...

//மு.வேலன் கூறியது...
கதை அருமை. இந்த கதை பிறந்த கதையை சற்று கூறலாமே...//

நன்றி. வேறொன்றுமில்லை நான் புதுசா படமெடுக்கலாமுன்னு இருக்கேன் அதற்கான வசனங்கள்தான் அது... என்னோட படத்துக்கு பைனான்ஸ் பண்ணுறீங்களா???

Anonymous said...

// PoornimaSaran கூறியது...
//அன்னிக்கு நீ சொன்னப்ப நான் கொஞ்ச நேரம் சைலண்ட்டா ஆகிட்டேன் தெரியுமா..நீ போன பிறகு அழுதேன்..சத்தியமா... நான் உன் கிட்ட ஏதாவது தப்பா பழகிட்டேன்னோன்னு குற்ற உணர்ச்சி//

நட்புக்கும், காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க.. அது எல்லாருக்கும் தெரிவதில்லை, அது அவங்க தப்பும் இல்லை..//

:-))

Anonymous said...

//PoornimaSaran கூறியது...
கதை நல்லா இருக்கு.. ஆமா இது நிஜ கதையா இல்லை கற்பனையா??//

நன்றி. ஏன் கற்பனைன்னா ஏத்துக்க மாட்டீங்களா?

Anonymous said...

// Divya கூறியது...
ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது புனிதா பதிவு:))

நல்லா எழுதியிருக்கிறீங்க!//

நன்றி திவ்யா :-)

Anonymous said...

// Divya கூறியது...
Template.......colur kannu koosuthu Punitha, padika kashtama irukku, konjam change panna mudiyuma??//

முயற்சிக்கிறேன் :-))

Anonymous said...

//நான் கூறியது...
புனிதா வெகு அருமை
காதல் உணர்வு இருந்தது
உரையாடல் வழியாக உணர்வை சொல்லியிருக்கிறீர்கள்
வாழ்த்துகள் நன்றி//

நன்றிங்க :-)

Anonymous said...

//சுபாஷினி கூறியது...
Punitha..arumayaaa irunthuchu..:)//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சுபா :-))

Anonymous said...

//புதியவன் கூறியது...
//ம்ம்ம் வலி இருக்குது..ஆனா அழுகை வரல...ஏன் கவிதைக்கூட வரல//

இது தாங்க உண்மை...//

நன்றிங்க புதியவன் வருகைக்கும் கருத்துக்கும் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. காதல் ஒரு விபரீத விளையாட்டு..

gayathri said...

கதை நல்லா இருக்கு .நிஜ கதை மாதிரி இருக்கு பா.

Anonymous said...

//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
ம்.. காதல் ஒரு விபரீத விளையாட்டு..//

உண்மைத்தான் :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க :-)

Anonymous said...

// gayathri கூறியது...
கதை நல்லா இருக்கு .நிஜ கதை மாதிரி இருக்கு பா.//

வருகைக்கு நன்றி காயத்ரி :-)

தாரணி பிரியா said...

நல்லாதான் பேசிக்கிறாங்கப்பா ரெண்டு பேரும்.

Anonymous said...

ஊடலும் பிரிவும் இல்லா காதல்
காதலே இல்லை
அது கதையாக வந்தால் கூட
இனிமை இல்லை
பெண்ணும் சண்டையும் போல
ஆணும் கர்வமும் போல.....

பனிமலர்.

Esywara said...

enna solle?
simply superb

MSK / Saravana said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு ஒண்ணுமே புரியலை அவங்க ரெண்டு பெரும் பேசிக்கறது..

MSK / Saravana said...

//உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்.//

என்ன இதெல்லாம்.. என் பின்னூட்டம் எங்கே..??

நட்புடன் ஜமால் said...

\\ஒரே ஒரு தடவ உன்னை லூசுன்னு திட்டிக்கட்டா\\

ஹா ஹா ஹா

நல்லா நல்லா நல்லா ...

நட்புடன் ஜமால் said...

\\ஆனாலும் முடியல...தெரியல என்னோட கோபம், பிடிவாதம் எங்க போச்சுன்னு தெரியல\\

ஆமாம் ஆமாம் முடியல

அட இன்னும் படிச்சி முடியலன்னு சொன்னேன் ...

logu.. said...

\\நான் அழவே இல்ல ஒரு வேளை அழுதா மன பாரம் இறங்கிடுமோ என்னவோ

மனசுல பாரம் குறையும்னு நினைச்சு அழுதா ஓக்கே, ஆனா அதையே பாரமா தூக்கி சுமக்குறா மாதிரி இருந்தா கஷ்டம்\\

rombavum nallarukkunga.

Anonymous said...

*தாரணி பிரியா*பனிமலர்*Mr. Esywara*Saravana Kumar MSK*அதிரை ஜமால்*logu*

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)

Natty said...

Wow

Anonymous said...

நான் எதிர்பார்க்கவில்லை..
நல்ல அழகான புனைவு.. எதார்த்தமான உரைநடை பாணி.. :-)

//"அவள் இதயத்தில் அவனுக்கான காதலை விதைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது"//

கடவுளுக்கு இருக்கும் இரக்கம் கூட முடிவு எழுதுவதில் உங்களுக்கு இல்லை என்று நினைக்கும்போது சிரிப்புதான் வருகிறது...

து. பவனேஸ்வரி said...

நல்லா எழுதுறீங்க...தொடர்ந்து எழுதுங்கள்...