வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனும்
காரணங்களின் நீளத்தை
அசாத்தியமாக்கிச் செல்கிறது
இந்த அடைமழை..
ஒரு வேளை
இன்றேனும் நீயும் நானும்
கவிதையெழுதி கப்பல் விடலாம்
நம்மிருவரும் தேடிச் சேர்த்த
நம் கனவு குழந்தையின் பெயர்களை...
எல்லாக்கனவுகளும்...
3 வாரங்களுக்கு முன்
6 மறுமொழி(கள்):
//நம்மிருவரும் தேடிச் சேர்த்த
நம் கனவு குழந்தையின் பெயர்களை//
அழகான வரிகள்...
கவிதையில் லாஜிக் இடிக்குது( ஓரமா எல்லாம் போமுடியாது) அப்படி இருந்தாதான் கவிதயா :))
//கபீஷ் சொன்னது…
கவிதையில் லாஜிக் இடிக்குது( ஓரமா எல்லாம் போமுடியாது) அப்படி இருந்தாதான் கவிதயா :))//
முதல் வருகைக்கு நன்றிங்க கபீஷ்.. ஆனாலும் என்ன லாஜிக் இடிக்குது..அதையும் தெளிவுப் படுத்தியிருக்கலாம்... :-)
அடை மழையில் கப்பல் விடறது ஆபத்து..:)
//முத்துலெட்சுமி/muthuletchumi கூறியது...
அடை மழையில் கப்பல் விடறது ஆபத்து..:)//
அதான் அக்கா நேத்து அடை மழையோடு பயங்கர இடி மின்னலும்.. பயந்துப் போய்ட்டா அவ..ஸோ அவ அந்த தப்பை செய்யல.. ;-)
/வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனும்
காரணங்களின் நீளத்தை
அசாத்தியமாக்கிச் செல்கிறது
இந்த அடைமழை.. //
இந்த - தவிர்த்த இந்த வரி நல்லாயிருக்குது..
கருத்துரையிடுக