Wednesday, February 17, 2010

மழையாய் வந்தவள்...


அவள்... அவளைப் பற்றி அறிந்த அந்தக் கணத்திலிருந்தே அவள் மீது ஏனென்று விவரிக்க இயலாத ஓர் ஈர்ப்பு...!! அவள் முகம்... பெயர் எதுவும் தெரியாது... இருந்தும் அவள் மீதான அன்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. ஏழு வயது சிறுமியிடம் அப்படி என்ன ஈர்ப்பு? நிச்சயமாய் தெரியவில்லை... மண்ணில் விழும் மழைத்துளியெல்லாம் பரிச்சயமற்ற பாஷைத்தான் நிலத்திற்கு... இருந்தும் மண்மகள் ஏற்றுக் கொள்வதில்லையா? அதுப்போல் இவளும் என் மேல் விழ ஏங்கும் மழைத்துளியானவள்!!

இந்தக் குட்டி நிலவு கடந்துச் செல்லும் பாதை ரோஜாக்கள் தூவிய பாதையல்ல... முட்கள் நிறைந்த காட்டு வழிப்பாதை. அவளுக்கு ஏதாவது செய் என்று உள்மனம் தவிக்கிறது...! உலக சந்தோஷங்களையெல்லாம் அவள் காலடியில் சமர்பிக்கும் ஆவலில் அவளுக்கான என் பிராத்தனைகள் நீள்கின்றன.

அந்த பிஞ்சு மழைச்சாரலில் நனைய வேண்டி இவளின் இதயச் சுருங்கல் தொடர்கிறது!!

4 மறுமொழி(கள்):

Charisma சொன்னது…

யார் இந்த தேவதை? அழகாய் பூக்கட்டும் உங்கள் நட்பு :D

ஜெரி ஈசானந்தா. சொன்னது…

மழையில் நனைந்தேன்.

ஸ்ரீமதி சொன்னது…

அருமை :) ஆனா என்ன ஆச்சு?

Sangkavi சொன்னது…

Super...